படித்ததும் பிடித்ததால் பகிர்ந்து கொள்கிறேன்

சாமிக்கும் மேல செளமியா

ஒவ்வொரு பலூனாய்
உடைத்துக் கொண்டிருக்கிறாள்
செளமியாக்குட்டி
பலூன்
உடைந்து கொண்டிருக்கிறது
வெடிச்சிரிப்புடன்.
o
விளையாடி முடித்து
தூக்கிப்போடுகிறாள்
செளமியாக்குட்டி
சோகத்தில்
கைகால்களை உடைத்துக் கொள்கின்றன
அறிவில்லாத பொம்மைகள்.
o
நிறையக்கேள்விகளுடன்
விடிகிறது
செளமியாவின் காலை.
கேள்விகளுக்கு
பயந்து சிலைக்குப்பின் ஒளிந்து பார்க்கிறார்
கடவுள்
o
நான் அம்மா செல்லம்.
அவங்கதான் நான்
குட்டிப்பாப்பாப்பாவா இருக்கும்போது
எறும்புகடிக்காம இருக்க தொப்பைக்குள்ள வச்சுருந்தாங்க
என்கிறாள்.
தூக்கத்தில் உதட்டசைத்து
கடவுளிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறாள் போலும்.
o
குழந்தையும் தெய்வமும் ஒன்று
என்றேன் செளமியாவிடம்
இல்லப்பா நான் சாமிக்கும்
மேல
சாமிக்கு என்னமாதிரி சிரிக்கத்தெரியாது
என்றாள்.
சரிதான்.

http://silarojakkal.wordpress.com/2010/10/15/சாமிக்கும்-மேல-செளமியா/

thanks: Poems by லதாமகன்

3 thoughts on “படித்ததும் பிடித்ததால் பகிர்ந்து கொள்கிறேன்

  1. லதாமகன் சொல்கிறார்:

    மிக்க நன்றி நண்பரே!

  2. பாண்டித்துரை சொல்கிறார்:

    இந்த கவிதையை எழுதிய உங்களுக்குதான் நன்றிசொல்லவேண்டும் லதாமகன்

  3. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    முதல் கவிதையிலேயே கொள்ளை போனது மனது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s