அந்த மிருகம்
எப்படி இந்தக் காட்டிற்குள் வந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களோடு ஒன்றிணைந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல ஊளையிட்டது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல வேட்டையாடியது என்று
அந்த மிருகம்
எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மிருகமாகியது என்று
அந்த மிருகம்
எப்படி அந்த மிருகத்தை பின்தொடர்ந்தது என்று
இரையாகிக்கொண்டிருக்கும் ஒரு மிருகத்தை
பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
கவித நல்லாருக்கு.
நாமும் மிருகமனம் கொண்டதால்தான்
ஒரு கொடூரத்தைக் கூட ஒரு காட்சியாய்
நிகழ்வாய் இயல்பாய் எடுத்துக் கொள்ளமுடிகிறதோ..
மனதை மிக லேசாய் கீறிப் போகும் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்