வாசகனுடனான கலந்துரையாடல்

இந்த உரையாடலை செம்மைபடுத்தி உதவிய படைப்பாளர்  விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு இந்தநேரத்தில் நன்றி சொல்கிக்கொள்கிறேன். அப்படியே முகம்காட்டமறுத்து இந்த உரையாடலை சாத்தியபடுத்திய நண்பருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வில் இப்படி சில அடையாளங்களை விட்டுச்செல்லுங்கள் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்

ஒரு வாசகனின் கருத்துக்களை இதழ்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் ஒரு வாசகனுடனான கலந்துரையாடலாக எந்த இதழ்களும் முன்னெடுத்துள்ளதா என்பது தெரியாத நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிந்துகொண்டு ஓய்வுநேரங்களில் நூலகம் இலக்கிய நண்பர்களுடனான தொலையாடல் என பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு வாசகனுடன் இரவுநேரத்தில் பலஅடுக்கு குடியிருப்பின் பூங்கா பகுதியில் அமர்ந்து பேசிய விசயங்களை அப்படியே இங்கு பதிவுசெய்திருக்கிறேன். அந்த வாசகன் முகம் இங்கு தேவையா என்ற கேள்விக்கும் அந்த வாசகனே தேவையில்லை என்றதன் அடிப்படையில் உரையாடல் தொடர்கிறது….. – :பாண்டித்துரை

சிங்கப்பூர் படைப்புக்களை வாசித்ததுண்டா?

 வல்லினம் இதழ்வழியே ரெ.பாண்டியன்,  உயிரோசை இதழ்வழியே இந்திரஜித் என்று சிலரை வாசித்திருக்கிறேன். இந்திரஜித்திடம் ஒரு மொழியிருக்கிறது அந்த மொழியில் அவர் சிறப்பாக  இயங்கிக்கொண்டிருக்கிறார் புனைவுக்கான மொழி என்று  சொல்லலாம் வாசிக்கும் போது நம்மை ஈர்க்கக்கூடியதாக அது இருக்கிறது.  சிங்கப்பூரில் இருந்து வரக்கூடிய பதிவுகளில் இந்திரிஜித்துடைய பதிவு முக்கியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. கனகலதாவையும் குறிப்பிட்டுச்சொல்லலாம்.

சிங்கப்பூரின் கவிதைச்சூழல் எப்படி இருக்கிறது?

இங்கு இன்னும் புதுக்கவிதையை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்டவில்லை. ஒரு திறந்த மனநிலையில் யாரும் இங்கு இல்லை. இவர்கள் இன்னும் மரபு சார்ந்து எழுதக்கூடியவகைளை கவிதை என்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். கவிதை அமைப்புக்களுக்கு வரக்கூடியவர்கள் புதுக்கவிதை எழுதினாலும் அதனை தாண்டி செல்வதற்கனா ஒரு களத்தை அமைப்பவர்களாக இங்கு யாரும் இல்லை, மேலும் அங்கு கற்பிக்கப்படுவது நீங்கள் எழுதுவது தொடக்கம், இன்னும் நீங்கள் சிறப்பாக செயல்படவேண்டும் கவிதையின் உச்சத்தை அடையவேண்டும்  என்றால் மரபினை பின்பற்றுங்கள் என்று கற்பிக்கப்படும் போது அதனை கவனமாக குறிப்பெடுக்கப்படும்போது அதற்கான சாத்தியங்கள் அறவே கிடையாது. உனக்கு என்ன மொழியிருக்கிறது அதனை உன்னுடைய அனுபவழியே நீ கொடுத்தாலே அது சிறப்பான ஒன்றாக வெளிவரும்.

இங்கு பேசுபவர்கள் மரபின் அடிப்படை பற்றி பேசுகிறார்களே தவிற அதற்குள் உள்ள செய்தியை யாரும் பேசுவதில்லை அவர்களுக்கு மூன்று அடி வரவேண்டும் நான்கு அடிவரவேண்டும் என்ற அக்கறைதான் அதிகம் இருக்கிறது அதில் செய்யப்படுவது கவிதை கிடையாது. இதனாலே இவர்களிடம் புதிய மொழியில்லாமல் போய்விட்டது. சங்கக்கவிதைகளை படிக்கும் போது நமக்கு அதில் ஒரு புதுமை தெரியும் ஆனால் இன்று எழுத்கூடிய மரபுசார்ந்த கவிதைகளை படிக்கும்போது தேவையற்ற சொற்கள்தான் முன்னிற்கின்றன். கவிதைனு சொல்லமுடியாது செய்யுளுனும் சொல்லமுடியாத நிலைமையில் இருக்கிறது. மரபிலிருந்து விடுபடுதல் என்பது வெறும் வடிவ விடுபடல் மட்டுமல்ல எனும் புரிதல் வரவேண்டும். அது காலத்தின் தேவை என்ற புரிதலை போல.

உங்கள் நண்பர்களிடம் அவர்களின் கவிதை பற்றி பேசியதுண்டா?

பேசியதுண்டு. கவிதை வாசிக்கிறாங்க பரிசு வாங்குறாங்க ஆனா அவர்களிடம் ஒரு வாசிப்பு கிடையாது. கவிதையைப்பற்றிய உரையாடல் அவர்களிடம் இல்லை. கவிதையின் இயங்குதளம் குறித்த பிரஞ்கை இல்லாமல் இருக்கிறார்கள். கவிதையின் பரிசோதனை முயற்சிகளை வெறும் வடிவமாற்றமாக கருதுவது போல தோன்றுகிறது. எழுதுவது எல்லாமே போலியான ஒன்று ஏற்கனவே உருவான ஒன்றிலிருந்துதான் இவர்களின் கவிதை பிறக்கிறது. அது சொல்லாடல் உருவாக்கமுறை அதே அர்த்தங்களை திரும்ப உருவாக்குகிறார்களே தவிர புதிய முயற்சி புதிய கருத்து புதிய சொல்லாடல்களை அவர்கள் உருவாக்கவில்லை தாஜ்மஹால் என்ற தலைப்புக்கு எதிரான ஒருகவிதையை அன்று நான் பார்க்கவில்லை காதல் கவிதைதான் அதை தவிர்த்த கவிதைகளை பார்ப்பது அரிது.  அவர்களை பொறுத்தவரை காதல்தான் எல்லோரின் முன்னும் எடுபடும் என்ற எண்ணப்போக்கு இருக்கிறது. நீங்கள் பேசுவதை யார் கேட்பது நீங்கள் வேறுமாதிரியாக பேசும்போது எதிரானவர் என்ற முத்திரை குத்தப்படுகிறது. என்ற எண்ணம் இருக்கலாம். இவங்க கவிதை எழுதுறாங்க ஆன இவர்களை கவிஞர்களுனு அடையாபடுத்தமுடியாது அதற்கான முதல்அடியைக்கூட எடுத்துவைக்கவில்லை. கவிதைக்காக பயணிக்ககூடியவர்களா அல்லது ஆத்மார்த்தமா இயங்கக்கூடியவராக இங்கு யாரும் இல்லை. நிறைய அற்பணிப்பு தேவை கவிதை பற்றி நிறைய வாசிக்கவேண்டும். மொழியின் உச்சபட்ச செயற்பாடு கவிதையில்தான் என்பதை உணர்ந்துகொள்ளலே முதன்மையானது

சரி இப்ப சொல்லுங்க நான் கவிஞனா இல்லையா?

சிரித்துக்கொண்டு… நீங்கள் முயற்சிக்கிறீர்கள் உங்ளுடைய வெளிப்பாட்டு வடிவங்கள் எளிதாக இருக்கிறது. வார்த்தைகளை கையாளுவதற்கு முயற்சிக்கிறிங்க அதனால நீங்கள் கவிஞனாக இன்னும் ஈடுபாட்டுடன் கூடிய வாசிப்பு வேண்டுமென நினைக்கிறேன். ஒரு ஈர்ப்புல இயங்கஆரம்பிச்சிருக்கிங்க உங்களுக்கான வடிவத்திற்கு நீங்கள் முயற்சிக்கிறிங்கனு சொல்லலாமே தவிற வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை . ஆனாலும் இன்று எழுதுகிற ஆகபெரிய கவிஞர்களின் துவக்கம் இது மாதிரிதான் இருந்தது. அவர்களின் தொடர்ந்த இயக்கமே அவர்களை உந்தி தள்ளியது.

இங்கு இருந்து இயங்கக்கூடிய எழுத்தாளர்களின் படைப்புக்களை ஏன் படைப்பு சார்ந்த பார்க்கபடுவதில்லை 

நமக்குள்ளே அடையாளப்படுத்துகிற மனநிலை வளர்ந்துகொண்டிருக்கிறது அப்படி அடையாளப்படுத்துவதன் மூலமாக தன்னுடைய தனித்துவத்தை முன்னிநிலைப்படுத்தும் மனநிலையில் இயங்குகிறார்கள். அடையாளம் ஒரு அதிகாரத்திற்கதான போக்கினைதான் உருவாக்கும். . இந்த சூழலில் அதற்கான அவசியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.அதுவே அவர்களை அந்நியப்படுத்திவிடுவதாக தோன்றுகிறது ஒரு வாசிப்பாளானனாக எனக்கு எந்த ஒரு அடையாளமும் தேவையில்லை மேலும் என்னுடைய வாழ்க்கையில் எது என்னை பாதிக்கிறதோ அது என்னுடைய எழுத்தாகும் அப்படி பார்க்கும் போது அதற்கானவர்கள் எழுதவேண்டும் அப்போது இந்த விமர்சனங்கள் எழப்போவதில்லை.

மலேசிய இலக்கியம்பற்றி….

அவர்களுக்கு ஒருவலியிருக்கிறது அதில் இருந்து வெளிவரும்படைப்புகள் கவனிக்கப்படுகிறது. கே.பாலமுருகனின் மலக்கூடத்தில் தோட்டத்தொழிலார்களின் வாழ்க்கையை சொல்லும் போது உணரமுடிகிறது.  நான் வாசித்தவரையில் இவருடைய எழுத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. மௌனம் இதழ் கவிதைகளுக்கான ஒரு இதழாக முயற்சிக்கிறது. கவிதை குறித்துபேசுவதற்கான இடமாக இருக்கிறது ஒரு நல்ல முயற்சி என்று சொல்லலாம்.

தமிழக எழுத்தாளர்களில் நீங்கள் விரும்பி வாசிக்ககூடியவர்களாக யார் இருக்கிறார்கள்?

புனைவுகளில் சோ.தர்மன், , அழகியபெரியவன் போன்றோரையும் கட்டுரை சார்ந்த ஆய்வியல் எழுத்துகளில் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றோரும் விருப்பமானவர்களாக சொல்லலாம்.

யார் யார் எல்லாம் இன்று கவனிக்ககூடிய கவிஞர்ககளாக இருக்கிறார்கள்?

நிறைய பேர் இருக்கிறார்கள். யவனிகா ஸ்ரீராம்,, செல்மா பிரியதர்ஷன்,, தமிழ்நதி,, சந்தானமூர்த்தி,, விஷ்ணுபுரம் சரவணன், கணேசகுமாரன் ஆகியோரை சொல்வேன்.

சாருநிவேதிதாவின் எழுத்தில் இன்று நேர்மைஇருக்கிறதா?

சாரு எழுத்துக்கு நேர்மையானவராகத்தான் இருக்கிறார். எந்த ஒரு ஒழுக்கத்திற்கும் கட்டுபட்ட மனிதராக தன்னை முன்னிலைபடுத்தியதில்லை. ஒழுங்கின்மை பற்றிய பெரிய அக்கறையை அவருடைய எழுத்து கவனம் கொள்வதில்லை அதனால அவரின் எழுத்திற்கு நேர்மையாகத்தான் இருக்கிறார் என்று சொல்லவேண்டும் ஆனால் பொதுவெளியில் சிலரை பற்றிய வார்த்தை பிரயோகம் அறமற்ற செயலாகத்தான் எனக்கு தோன்றுகிறது. ஒழுக்கத்தினை புரட்டி போடுவது மட்டுமே ஒருவரின் நேர்மையான செயல்பாடு என்ற முடிவுக்க வந்துவிடமுடியும் என தோன்றவில்லை. சமூக ஒழுக்கத்திற்கு எதிராக பேசுவது என்பது அச்சமூகம் மீதான பேரன்பிலிருந்து உருவாக வேண்டும்.

இம்மூன்று படங்களையும் இயக்கியவர்கள் மட்டுமல்லாமல் தயாரித்தவர்களும் இளைஞர்கள் அதனாலேயே முந்தய தமிழ்சினிமா உருவாக்கி வைத்திருக்கும் சில பாசாங்குகளை தவிர்த்துவிட்டு இயங்கமுடிந்திருக்கிறது.

அன்னா ஹாசாரேவின் போராட்டம் தெலுங்கான போரட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவும் அதற்கு மத்திய அரசு இறங்கிவந்த போக்கும் ஏன் தமிழகத்தின் ஈழ ஆதரவு போரட்டத்திற்கு மிகப்பெரிய எழுச்சியோ மத்தியஅரசின் கரிசனமோ கிட்டவில்லை?

அன்ன ஹாசரேவின் போராட்டம் அவரே எதிர்பாரத ஒன்று இதன் பின்னணியில் கார்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தெலுங்கானவின் போராட்டம் ஒரு அரசியல் சார்பான ஒன்றானது என்றாலும் தெலுங்கான பகுதி மக்களிடையே அரசியல்வாதிகளிடையே ஒருவித புரிந்துணுர்வு இருக்கிறது அதனால் அந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதில் ஒன்றை நாம் காணலாம் தெலுங்கானா போராட்டம் மக்கள் எண்ணங்களிலிருந்து துவங்கியது, ஹசாரே விஷ்யம் போராட்டத்திலிருந்து மக்கள் மனத்தில் புகுத்துவது. ஹசாரே போராடாமல் இருந்தால் கூட பத்து வருடங்களுக்கு அப்போராட்டத்தை யாரும் நடத்தாமல் காலம் கழிந்துவிடலாம். ஆனால் தெலுங்கானா போராட்டம் அப்படி பட்டதல்ல. தலைவர்கள் முன்வராவிட்டாலும் அப்போராட்டம் நிகழ்வதை தவிர்க்கவியலாது.

ஆனால் இங்கு நிலைமைவேறு அன்று இருந்த தமிழக அரசு மத்திய அரசின் போக்கினை பின்பற்றக்கூடிய ஒரு அரசாக இருந்ததே தவிர ஈழம் சார்ந்த குரல்குடுக்ககூடிய அரசாக அல்லது அமைப்பாக இல்லை கண்துடைப்புக்காக சில சித்து வேலைகளை அவர்கள் செய்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஊழல் பிடிகள் மத்திய அரசிடமிருந்தன.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் தமிழ்த்தேசியம் பேசுகிற அமைப்புகளும் ஈழத்தை முன்னிருத்தி குறைந்தபட்ச வேலைத்திட்டத்தில் இயங்குய்வதற்கான அரசியல் நாகரீகம் அற்றவர்களாக இருந்தனர்.[இன்றும் இருந்து வருகின்றனர்] இதனாலேயே தமிழகத்தில் யார் யாருக்கு என்ன மாதிரியான வேலை கொடுக்கப்படவேண்டும் என்ற செயல்திட்டம் உருவாகவேயில்லை. இந்த பிரச்சினையை அகில இந்திய அளவில் கொண்டுசெல்லும் குறைந்த பட்சம் தென்னிந்திய அளவில் கொண்டுசெல்லும் பணி நடைபெறவில்லை. பாராளுமன்றத்திலும் இரண்டு பிரிவாக இருந்தே குரல் கொடுத்தனர். குறிப்பாக மனித உரிமை பேசும் இண்டலஷ்வல்களிடேஉண்மையான தகவல்கள் சரியான நேரத்தில் சென்றடைய இங்கு பணியாற்றிய யாரும் முனைய‌வில்லை.   திமுக விற்கு சமமான எதிர்கட்சி பார்ப்பனியத்தின் முகத்தோடிருந்ததால் ஈடுபாட்டுடன் அவர்களும் களமாற்றவில்லை. தேர்தல் வெற்றிக்கான உத்தியாக மட்டுமே அதை அதிமுக பயன்படுத்தியது.  அவரவரின் சுயநலமே அவர்களின் போரட்டங்களில் முன்னிநிலைப்படுத்தபட்டது. எல்லாருமே இங்கு  நாடகம்தான் நடத்துகிறார்கள் இதில் அரசியல் ஆதயாம்தான் முக்கியபங்கு. இங்கு இருக்கிற அமைப்பை கட்டிகாப்பவர்களாக இருக்கிறார்கள் அதனை உடைக்க சமன்படுத்த அக்கறை கிடையாது. ஒருமித்த குரல்கொடுத்து மத்திய அரசிற்கு நெருக்கடிகுடுக்ககூடியவர்களாக இவர்கள் இல்லை. ஈழ மக்கள் இதனை நன்கு அறிவர்.

முத்துக்குமாருடன் பலசகோதரர்களையும் செங்கொடிசகோதரியையும் நாம் இழந்ததை தவிர இங்கு ஈழம் சார்ந்த மாபெரும் புரட்சியோ போராட்டமே ஏற்படவில்லை.அப்படி உருவாவததை அரசு அனுமதிக்காது என்றாலும் அரசிற்கு ஆதரவான சக்திகள் அதை தடுத்துவிட்டனர் என்றும் சொல்லலாம். மேலும் ஈழமக்களை நம்முடன் பிணைந்த ஒருவராக பார்க்கமுடியாது. நாம் ஒரு மொழிபேசும் மனிதரக்ளாக இருக்கலாம் ஆனால் அவர்கள் வாழக்கூடிய நிலபரப்பு அதன் ஆட்சிமுறைகள் அரசியல் அமைப்பு வாழ்க்கைச்சூழல் எல்லாம் வெவ்வேறான வலைகளில் பின்னப்பட்டுள்ளது. நம்மில் ஒருவராக அவர்களை பார்க்கமுடியாது பிரிதொரு தேசிய இனமாகத்தான் நாம் பார்க்கலாம். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நமக்கு தாளவியலாத பெருவலியிருக்கும் ஆனால் அவர்கள் விரும்பக்கூடிய ஒருவாழ்க்கையை அடைய நாம் ஒருசார்பாக இருக்கமுடியுமே தவிர ஒட்டுமொத்த தீர்வையும் தரக்கூடியவர்களாக நாம் இருக்கமுடியாது.

 

இங்கு பணிபுரியக்கூடிய அனுபவம் எப்படி இருக்கிறது போகும்போது என்ன எடுத்துக்கொண்டு போகப்போகிறீர்கள்?

இழப்பு அதிகம்தான்னு சொல்லணும். எனக்கும் என் மகனுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நாளைக்கு போனாலும் சரியாகுமானு தெரியலை. என்னுடைய உழைப்புக்கு சரியான ஊதியம் தரப்படலைனுதான் சொல்லணும்.. அனுபவம்னா இங்கு இருந்தபோது எனக்கு கிடைத்த பலதும் எனக்கு பின்னால் வரக்கூடியவர்களுக்கு கிடைக்ககூடாதுனுதான் சொல்லுவேன். சீனர்களுடன் பழகியபோது அவர்கள் இணையாக நடத்தியது பிடித்திருந்தது. இங்கிருந்து போகும் போது இங்கு இருக்ககூடிய அந்த ஒழுங்கு என்னுடைய தேசத்தில் இருக்கணும்னு ஆசைப்படுவேன்.

ஒரு வாசிப்பாளனாக எந்தமாதியான இன்பத்தை படைப்புகள் கொடுக்கிறது ?

வாசிப்பு தரும் உணர்வை இதுதான் என துல்லியமாக சொல்லிவிடமுடியுமென்று தோன்றவில்லை.நல்ல‌ படைப்பு என்பது ஒரு அனுபவத்தை நமக்கு கடத்துகிறது. அந்த அனுபவம் நமக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் வேலை செய்துகொண்டே இருக்கிறது. அந்த அனுபவம் நமக்கான வாழ்வியலில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதிலிருந்து அப்படைப்பு நமக்கு எவ்வளவு நெருக்கமானது என விளங்கிகொள்ளலாம் என நினைக்கிறேன்.

நன்றி: singaporecliche.com

One thought on “வாசகனுடனான கலந்துரையாடல்

  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    நா ன்தான் உங்களுடன் கலந்து உங்கள்- கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவன். இப்பொழுது நான் கேட்கிறேன் இந்த கேள்விகளெல்லாம் நான் எழுதிக்கொடுத்ததுதானே!. .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s