நண்பேன்டா

2005 பெங்களுரில் இருந்த காலகட்டத்தில்தான் இந்த கவுஜை எல்லாம் எழத ஆரம்பித்தது. அட இம்புட்டு நாளா எங்கிட்டு இருந்துச்சுனு கண்ணாடி முன்னாடி நின்னு தேடுனப்ப எழுதனது

‘’பேரன் லவ்வி போட்டு போட்டு
பேராசை
உன்னனை விட
நான் அழகா இருப்பதா’’

இதையெல்லாம் உடனிருந்து படிச்ச ஒரே என் கல்லூரி நண்பேன்டா விஜயகுமார் கவுஜையில கலக்குற பாண்டி ம் ம்னு என்னா எழுதுனாலும் இது கவுஜை இது கவுஜைனு சொல்லி சொல்லி இம்மாந்துண்டா வளர்த்துவிட்டான்.
vijay
இன்னைக்கு பூனைக்குட்டி, அரவிந்தன், நாய்குட்டினு பிண்ணி நவீனமா கவுஜை எழுது றேனா பெங்களுர்ல விஜய் போட்ட விதை மக்கா..

நண்பேன்டா விஜய் அந்த கவுஜை யாருக்காக எழுதுனது ஞாபகம் இருக்கா ?

அப்பாலிக்கலாம் குந்துனா கவுஜை, நின்னா கவுஜை, படுத்த கவுஜைனு கலக்குன கவுஜைக்கெல்லாம்
விஜய் க்கு நன்றி சொல்லணும்பா
கத்தி சொல்லவா
நன்றி தலை

 

சிங்க ராஜா நிதிலன்

நிதிலனுக்கு ஒரு கதை சொல்லத் தொடங்கினேன்
ராஜாகாலத்து கதை
குதிரை மீதேறி வருவாரே அந்த ராஜா
குதிரை மீதேறிய ராஜா காட்டுக்குப் போனாராம்
ராஜாவின் குதிரை டக் டக் டக் டக் டக் என்று பறந்தோடியதை
டக் டக் டக் டக் என்று சொல்லிக் காண்பித்தேன்
நிதிலன் க்ளுக் என்று சிரித்து வைத்தான்
காட்டுக்குப் போன ராஜா
புள்ளி மானை பார்த்து அம்பெய்தாராம்
துள்ளிக் குதித்தோடியது புள்ளிமான் என்று
துள்ளிக் குதித்துக் காட்டினேன்
நிதிலன் க்ளுக் என்று சிரித்து வைத்தான்
யானையை பார்த்த ராஜா
வெட்டிவைத்த அகழியை நோக்கி விரட்டிச் சென்றார் என்று
யானையைப்போல வாலை ஆட்டி ஆட்டி நடந்து காட்டினேன்
நிதிலன் க்ளுக் க்ளுக் என்று சிரித்து வைத்தான்
செம்பூத்தொன்று பறந்தொடியதை
படபடவென்று அடித்துக் காண்பித்தேன்
நிதிலன் க்ளுக் என்று சிரித்து வைத்தான்
மாலையான வேளையில் ராஜா வேட்டையை முடிந்து திரும்ப நினைக்கையில்
சிங்க ராஜா வந்தாராம்
யாரு வந்தாராம் சிங்க ராஜா
சிங்க ராஜாவை பார்த்த ”ராஜா”
வேட்டை முடிஞ்சிடுச்சு நாளைக்க பார்ப்பமா என்று குதிரையை விரட்ட
ஆவ் ஆவ் என்று தலையை ஆட்டி கர்ஜித்தாராம் சிங்க ராஜா என்று சொல்ல
தலையை மேலும் கீழும் ஆட்டிய நிதிலன்
நான்தான் அந்த சிங்க ராஜாவுக்கும் என்று சொல்லும் தோரணையில்
க்ளுக் என்று சிரித்து வைத்தான்

அன்பதிகாரம்

ஞாபகமிருக்கிறதா
உன்னை சந்தித்த நாளொன்றில்
நீயாகவே இரு என்றேன்
நினைத்துக்கொண்டேன்
நானும் அப்படியே இருக்கப்போவதாக
நீ நீயாகவே இருக்கிறாய்
நானும் இருக்கிறேன்
நீயாக