நிதிலனுக்கு ஒரு கதை சொல்லத் தொடங்கினேன்
ராஜாகாலத்து கதை
குதிரை மீதேறி வருவாரே அந்த ராஜா
குதிரை மீதேறிய ராஜா காட்டுக்குப் போனாராம்
ராஜாவின் குதிரை டக் டக் டக் டக் டக் என்று பறந்தோடியதை
டக் டக் டக் டக் என்று சொல்லிக் காண்பித்தேன்
நிதிலன் க்ளுக் என்று சிரித்து வைத்தான்
காட்டுக்குப் போன ராஜா
புள்ளி மானை பார்த்து அம்பெய்தாராம்
துள்ளிக் குதித்தோடியது புள்ளிமான் என்று…
துள்ளிக் குதித்துக் காட்டினேன்
நிதிலன் க்ளுக் என்று சிரித்து வைத்தான்
யானையை பார்த்த ராஜா
வெட்டிவைத்த அகழியை நோக்கி விரட்டிச் சென்றார் என்று
யானையைப்போல வாலை ஆட்டி ஆட்டி நடந்து காட்டினேன்
நிதிலன் க்ளுக் க்ளுக் என்று சிரித்து வைத்தான்
செம்பூத்தொன்று பறந்தொடியதை
படபடவென்று அடித்துக் காண்பித்தேன்
நிதிலன் க்ளுக் என்று சிரித்து வைத்தான்
மாலையான வேளையில் ராஜா வேட்டையை முடிந்து திரும்ப நினைக்கையில்
சிங்க ராஜா வந்தாராம்
யாரு வந்தாராம் சிங்க ராஜா
சிங்க ராஜாவை பார்த்த ”ராஜா”
வேட்டை முடிஞ்சிடுச்சு நாளைக்க பார்ப்பமா என்று குதிரையை விரட்ட
ஆவ் ஆவ் என்று தலையை ஆட்டி கர்ஜித்தாராம் சிங்க ராஜா என்று சொல்ல
தலையை மேலும் கீழும் ஆட்டிய நிதிலன்
நான்தான் அந்த சிங்க ராஜாவுக்கும் என்று சொல்லும் தோரணையில்
க்ளுக் என்று சிரித்து வைத்தான்

மக்களை சிரிக்க வைப்பதென்பது மாபெரும்கலை .தாங்கள்
அதில் வெற்றிபெற்றுள்ளீர்கள்.நிதினுடன்’ களுக்’கென்று சிரித்து மகிழ்ந்தேன்.