அப்பு ‘குட்டி’ கவிதைகள்

இரு கைகளை சிறகாய் விரிக்கும்
அப்புகுட்டிக்கு
உயரபறக்க வேண்டுமாம்
தூக்கச் சொல்கிறான்.

appu

நிரல்யா

நிரல்யாவோடு விளையாடுகிறேன்
ஒரு குழந்தையாவதற்கான
விளையாட்டுகளை கற்றுத்தருகிறாள்
தொட்டுச் சிரிக்கிறேன்
நிரல்யாவாக.

asd

7th MAY 2015 – நதிமிசை நகரும் கூழாங்கற்கள்

இரண்டு ஆண்டுகளா கவிதை எழுதாமல் இருந்தவன் சில மாதங்களாக உதயா, அப்புகுட்டி, மதுவுக்கு தெரிந்த கவிதைகள் என்று கிறுக்க ஆரம்பித்துள்ளேன். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற எந்த ஒரு புத்தக நிகழ்வுக்கும் செல்லவில்லை. பணிச்சுமை என்று தப்பித்துக்கொண்டிருந்தேன். இன்றும் அப்படி தப்பிக்கவே நினைத்திருந்தேன். எம்.கே 10 பெண்களின் கவிதைகள் தொகுப்பு என்ற ஒரு பவுன்ஸரை போட்டுவிட்டார். மனம் உட்லண்ட்ஸ் நோக்கி திரும்பிவிட்டது.

நதிமிசை நகரும் கூழாங்கற்கள் எழுத்தாளர் எம்.கே.குமார் தொகுத்த சிங்கப்பூர் பெண்கவிஞர்களின் கவிதை தொகுப்பு இன்று மாலை வெளியிடப்படுகிறது.

வாழ்த்துகள் கொமாரு smile emoticon

அடுத்த ஆண்டும் ஒரு புத்தகம் வரலாம். சிங்கப்பூர் கவிதைகளில் படித்ததில் பிடித்ததாக எம்கேயின் விமர்சனப்பார்வையோடு

வரட்டுமே wink emoticon

விழாவிற்கு வருக
கவிதை தொகுப்பு பெறு(ரு)க smile emoticon

1q

2016

அடுத்த ஆண்டு புதுமையான முறையில் என்னுடைய முதல் கவிதை தொகுப்பை வெளியிடலாம் என்றிருக்கிறேன். ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016 வரை தினமும் ஒருவரை சந்தித்து வெளியிடுவதே அந்த புதுமை … 5 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு வரவேற்புரை, தலைமையுரை, நூல் விமர்சனம், சிறப்புரை, நன்றியுரையென எல்லாம் அடியனே மேற்கொள்ளவிருக்கிறேன். புத்தகவெளியீட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ளவும்.

123

உதயா

உதயா

உதயா

உனக்காகத்தான் என் கோபங்களைகூடத் தின்றுவிடுகிறேன்.

உதயா

பைத்தியமாவதும் அதிலிருந்து விடுபடுவதையும், விடுபடுவதும் பின்னர் பைத்தியமாவதையும் அத்தனை எளிதாக்கிவிட்டாய்.

உதயா

கடலலையாய் எழும்பித் தெறிக்கும் உன் சொற்களுக்குள் நீந்திக்கொண்டிருக்கிறேன்.

உதயா

நீ இல்லாத உலகம்
நிழற்படங்களால் நிரம்பியிருக்கிறது.

உதயா

ஆடிய களத்தில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

உதயா

நீ விட்டுச்சென்ற புன்னகைகளால் நிரம்பியது இந்த உலகம்.

உதயா

நீ உறக்கத்திலேயே இரு. உன் உறுப்புகள் வழியே விழித்துக்கொண்டு.

உதயா

8 தினங்களாக உறக்கத்திலிருக்கிறாய். உன்நினைவோடு விழித்துக்கொண்டிருக்கிறேன்.

உதயா

மழை வருகிறது, உறக்கத்திலிருக்கும் உன்னை எழுப்பும் சூட்சுமத்தோடு

உதயா

இந்த நினைவிலும் நீ நிழற்படங்களை கோர்த்துக்கொண்டிருக்கிறாய்.

உதயா

இந்த நினைவலையிலிருந்து மீண்டெழ வேண்டும்.

உதயா

என்ன நினைவுகளோடு உறங்கிக்கொண்டிருக்கிறாயோ
எழுந்து வா… உன்னை கை பற்றி அழைத்துச்செல்ல யார் யார் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டாமா

உதயா

சொல்லாத கதை ஒன்றை சொல்லப்போகிறேன்

உதயா

உன்னிடம் சொல்லத்தவிற்ப்பதற்கான காரணங்கள் எதுவுமில்லை, எல்லாம் உன் அன்பே.

உதயா

கருணையோடு பேசச்சொன்னாய்,
பேசிக்கொண்டிருக்கிறேன்.

உதயா

கோபப்படும்போதெல்லாம் அதீதமான பிரியத்தின் மொழியென மெளனித்துவிடுகிறேன்.

உதயா

நம்மை பற்றி அவர் அப்படி பேசப்போவதில்லை.
அவரைப்போலல்லவே உலகம்

உதயா

ஓ வென்று அழச்சொன்னாய். வெக்கையாக இருக்கிறது, என்ன செய்யட்டும்.

உதயா

நாம் அவர்களாக வேண்டாமே

உதயா

இந்த நேரத்தில் ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் தேவதைகளை தரிசிப்பதற்காக காத்திருக்கிறேன்.

உதயா

இப்படி என்னை எழுத வைப்பது நீ மட்டும்தான்.

உதயா

அவளுக்கான அன்போடு விற்றுத்தீராத ரோஜாக்களை வாங்கவேண்டும்

உதயா

ரோஜா செடிகளை பதியம் செய்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. ஞாபகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய