‪#‎சத்குரு(S)

பிரச்சினையை பிரச்சினையாக அணுகும் போது நம் முன் பூதகரமாக எழுந்து நிற்கிறது.
‪#‎சத்குரு

எல்லாவற்றிலும் ஒரு கணக்கு போட்டு வாழும் மனிதர்களாகவே நாம் இருக்கிறோம்.

‪#‎சத்குரு

அவரவருக்கு அவரவர் செய்கை நியாயம்.
‪#‎சத்குரு

சத்குரு யாரெனக் கேட்பவர்களே மெல்ல சத்குருவாகிறார்கள்.
‪#‎சத்குரு

நம்மை பற்றி பிற(ர்)(ழ்) சொற்களை நேரிடையாக சொல்லாதவர்கள் நம் அன்பை பெருகின்ற தூரத்தில் இருப்பதில்லை.
‪#‎சத்குரு

நம் வாழ்க்கைகான பாடத்தை நம்மைச் சுற்றி உள்ளவர்களே கற்றுத் தருகிறார்கள்.
‪#‎சத்குரு
நாம் என்ன எதிர் பார்க்கிறோமோ அதைத்தான் பிறர் நம்மிடம் எதிர் பார்க்கிறார்கள்.
‪#‎சத்குரு

இங்கு சினிமாவை போன்று இரண்டரை மணிநேரத்தில் எதுவும் நடந்திடப் போவதில்லை

‪#‎சத்குரு

நம் எண்ணங்களே நட்பை தீர்மானிக்கிறது.
‪#‎சத்குரு

நாம் பிறருக்கு கற்றுக் கொடுப்பவராகவும், பிறரிடமிருந்து கற்றுக் கொள்பவராகவும் இருக்க வேண்டும்

‪#‎சத்குரு

யமுனா வீடு

யமுனா வீடு
………………….

ஒரு நெடியநாளின் சிறுதுயரை
கடந்து வருவதில்
யாரிடம் கதை கேட்டு
யாரிடம் கதை சொல்வது
என்ற குழப்பத்தில்
அழத்தொடங்கும் யமுனாவிற்கு
சமாதானம் தேவைப்படுகிறது
அம்மாச்சியின் முகம் பார்க்கிறாள்
அப்பாவின் முகம் பார்க்கிறாள்
அம்மாவின் முகம் பார்க்கிறாள்
சமாதானத்திற்கான புன்முறுவலை
யார் தருகிறாளர்களோ
அவர்களைப் பற்றிக்கொண்டு சமானதானம் அடைகிறாள்
சமாதானம் அடையும் யமுனாவிற்கு
ஒரு நெடியநாள் இன்றோடு முடியாது
நாளை பொழுதில் ஆரம்பமாகும் – என்று
தெரிந்தே இருக்கிறது.

‪#‎பாண்டித்துரை

அவநிதாவின் சொல்

aav

ஒரு கவிதை
‘அவநிதாவின் சொல்’

அவநிதாவின் சொல்
‘புய்யி’

அவநிதாவின் சொல்
‘சாக்கி’

அவநிதாவின் சொல்
‘அய்யிறா’

அவநிதாவின் சொல்
‘குய்யி’

அவநிதாவின் சொல்
‘அம்மக்கா’