உதயா

உதயா
என்ன ஆனது உனக்கு
30நிமிடங்களாக நடை மேடை c க்கும் d க்கும் இடையே நடந்து கொண்டிருக்கிறாய்.

உதயா
என்னோடு நீ இருக்கிறாய்
பிறகென்ன வேண்டும்.

உதயா

உன்னைப் பற்றிய ஞாபகங்களை மட்டுமே சேமித்து வைக்கிறேன்.

உதயா

எப்போதும் போலத்தான் இருக்கிறேன்
பேரன்பால்

உதயா

பேரன்பால் உருவான எனக்கான கோபங்கள் உன்னிடம் மட்டும்தான்

உதயா

உணர்வுகளை புரிந்துகொள்ளும் உன்னிடமிருந்துதான் ஆரம்பமாகிறது எனதன்பு

உதயா

உனக்கு தெரிந்த நான் மட்டும் தான் இப்படி.

உதயா

இதுதான் அன்பென ஒவ்வொரு முறையையும் சொல்லத்தெரியவில்லை.

உதயா

உன்னை திண்ணும் மௌனம் கற்கிறேன்.

உதயா

இங்கு எல்லோருக்கும் பேசத் தெரிந்திருக்கிறது.

உதயா

எதைச் செய்தாலும் ஒரு சரியை கண்டுபிடித்து விடுகிறேன்.

உதயா

இன்னும் பக்குவப்படுத்து
கல்லாவதற்கான காலநிலை இருக்கிறது

உதயா

எத்தனை முறை சொன்னாலும் இன்னுமொரு முறை என்கிறாய்.
உனக்காவே பழகிக்கொள்கிறேன்

உதயா

ஏதோ ஒரு நம்பிக்கையில் நகர்ந்துவிடுகிறது
இன்றைய பொழுது