qw

நேற்று ஒரு முகம் இருந்தது
இன்று ஒரு முகம் இருக்கிறது
நாளை ஒரு முகம் இருக்கும்
முகம் பற்றி பேச வேண்டாமென
முகமறிந்த ஒரு முகம் சொல்கிறது
முகம் முகம்மல்லவென்று.

மந்தையிலிருந்த ஆடுகள் ம்மே என்றது
மந்தையிலிருந்து வெளியேறிய முதல் ஆடு ம்மே என்றது
மந்தையிலிருந்து வெளியேறிய இரண்டாவது ஆடும் ம்மே என்றது
மந்தையிலிருந்து வெளியேறிய மூன்றாவது ஆடும் ம்மே என்றது
மந்தையிலிருந்து வெளியேறிய 4வது ஆடு மௌனமாக கடந்து சென்றது