உதயா

உதயா

சமாதானப்படுத்தும் வார்த்தைகள் இல்லை
புன்னகைக்கிறாய்.

உதயா
இன்னும் எத்தனை இரவுகள் தான் உறக்கம் கலைப்பாயோ.

உதயா

உன் பிரியத்தின் மொழியை செவிமடுக்கிறேன்
பாதம் வரையில் பரவிவிட்டாய்

உதயா

நிகழ்வன போக்கில் நானும்

உதயா
இங்கு நான் இல்லை

உதயா

நீ மட்டும் தான்
நான்.

அவநி

ஒன்பது
பத்து
i எழுதும் அவநிதாவிற்கு
ஆதிரா பேய் பிடித்துவிடுகிறது
அம்மாவின் கண்ணமிழுத்து
நல்ல பாப்பா செல்ல பாப்பா சொல்லி
உறங்கப்போகிறாள்

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த நேரத்தில் தேக்காவில்… கிருபா ரோடு குடை கேண்டியன் மாறிவிட்டது. வெகு சிலர் தான் மது அருந்துவதை பார்க்க முடிந்தது. என்னருகில் ஸ்டிரா போட்டு கிங்பிஷர் குடிப்பவரையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன் ஒரு போத்தலை நீண்ட நேரமாக குடித்துக்கொண்டிருந்தார். பருக்கைகளை கொத்தி தின்ன வரும் புறாக்களுக்கு என்ன ஆனது.. சிக்சிக் என்று குரல் எழுப்பி கள்ள சிகரெட் விற்பன்னர்கள் இன்னும் அலைந்து திரிகின்றனர். யாரைப்பற்றியும் கவலையற்ற ஒருவன் உரத்த குரலில் குடும்ப பிரச்சினையை தொலைபேசிக்குள் தீர்க்க முயன்று கொண்டிருந்தான். ஆந்திரா மெஸ்ஸின் அடையாளங்கள் அப்படியேத்தான் இருந்தது. நிறைய மனிதர்கள் தனித்து கைபேசியில் லயித்துப்போயிருந்த இந்தப் பொழுதில் நான் என்னவானேன்.