அதியா

அதியா

பெரும் மழைக்கான அறிகுறிகள்
தொட்டிச் செடிகளை பத்திரப்படுத்துகிறேன்

அதியா

தேநீருக்காக காத்திருக்கும் நேரத்தில்
பிரியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
தேநீர் அருந்திய பிறகு
என்ன பேசப்போகிறோம்.

அதியா

ஆலயம் செல்கிறேன்
என்னற்ற முகங்களில் தரிசனம்
இவ்வளவு தான் என் இறையன்பு.

அதியா

பற்றிக்கொண்டிருக்கும் கைவிரல்களை எடுத்துவிடாதே
கொஞ்சம் கருணையாக இருக்கிறது.

#‎பாண்டித்துரை‬

யமுனா வீடு

யமுனா வீடு
………………….

அவளுக்கென
சொல்வதற்கு
நிறைய வார்த்தைகள் இருந்தும்
மௌனமாகிவிடுகிறாள்
வலியது அன்பு

 

யமுனா வீடு
…………………

துயரம் கடந்து
பூரித்து போயிருக்கிறாள்
நிலவின் அன்பைத் தருமபவளின்
கதை சொல்லப்போகும் வீடு
வலிகள் சுமந்த பயணத்தில்
அன்பு ததும்பும் ஒரு வீடு
அவளுக்கானது
அவர்கள் சொல்லக்கூடும்
இனி
அவளுக்கென்ன

 

யமுனா வீடு
…………………

அவளுக்கென்ன
எழுதிவிடுகிறாள்
இந்த பொழுதிற்கான அன்பை
வலிந்த சொற்கள் கொண்டு
வலி
அவளுடையது