இந்தநாளின் மகிழ்ச்சியாக எதைச் சொல்லலாம் – 05

இந்தநாளின் மகிழ்ச்சியாக

எதைச்சொல்லலாம்

ஐபோன் 12 புரோ-மேக்ஸ்

தம்பி பெருமாள் அடித்திருக்கும் மொட்டையை

பாடலாசிரியர் வாசனை மணமூட்டிய

அஞ்சப்பர் விருந்துணவை

அப்சாக் கல்லூரி காலத்தில் முணுமுணுத்த

காஞ்சிப்பட்டில் சேலைகட்டிய பாடலை

மாண்டாய் எஸ்டேட் பாய் கடை தேநீரை

தேக்காவில் ஒரு பாலம் இருந்த லதாவின் சிறுகதையை

மாலைப்பொழுதில் மேலாளருடன் அமைந்த நீண்டதொரு உரையாடலை

சன்னல் வந்து எட்டிப்பார்த்த

அந்த அவநிதாவை

ரூட்டு தலயை

இந்தநாளின் மகிழ்ச்சியாக

எதைச்சொல்லலாம்

#பாண்டித்துரை

யமுனா வீடு – 09

யமுனா வீடு
இரண்டு பேருந்து மாறிச் செல்லும் தூரத்தில்,
நகரத்தின் கடைசியில் இருக்கிறது……

யமுனா வீட்டில்,
யமுனா,
யமுனாவின் அம்மாவோடு,
நாய்க்குட்டியும் இருக்கிறது…….
ஞாயிற்றுக் கிழமையில்….
வாசு அண்ணா வந்து செல்கிறான்.

வெளிப்புற கிரில்கதவு சாத்தப்பட்டு,
உயரத்தில் கொக்கி மாட்டப்பட்டிருக்க,
தபால்காரன் வருகையும்,
பால்காரன் வருகையும்,
அரிதாகிப் போன நாட்களில்……
அபூர்வமாய் யாரேனும்
வழி தவறி விசாரிக்க வந்தால்
கீரிச்சிடும் கிரில் சப்தத்தில்
குறைத்திடும் நாய்க்குட்டியோடு,
யமுனாவும் சேர்ந்து கொள்கிறாள்…

Thanks : http://www.minkirukkal.com/%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-9/

கடலோரத்துப் பறவை.

கடலோரத்தில் இருந்த பறவை

நகரின் நடுப்பகுதிக்குப் பறந்து சென்றது

அங்கு தன்னையொத்த பறவையைப் பார்த்தது.

வாயேன் வனம் பார்ப்போம் என்று

கைகளைப் பின்னிக் காற்றில் பறந்து சென்றது

மரக்கிளைக்கும் நீரூற்றுக்கும் தாவித் தாவி

வனம் பார்த்த அக்கா பறவையும் தங்கை பறவையும் பறக்கத்துடித்தன.

பிரியாணிக்காகச் சற்று இளைப்பாறின

பறப்பதன் அடையாளமாக

இரு தற்படத்தைப் பத்திரப்படுத்திக்

கூடு நோக்கித் திரும்பியது

கடலோரத்துப் பறவை.

#பாண்டித்துரை