இந்த நாளின் மகிழ்ச்சியாக எதைச்சொல்லலாம்
பாபாவின் சத்சரிதம் கேட்டு தொடங்கியதை,
2.30 – மணியளவில் தலைப்பாரத்திற்கு
சர்க்கரை சேர்க்காது பருகிய தேநீரை,
7 ம் எண்ணும் பிடிக்கும் என நினைத்ததை,
இந்த கடையில்தான் எனக்கு 4 இலக்கு எண்ணில்
ஆயிரம் விழுந்ததாக சொல்லிய தம்பியை,
வா இன்று யாருக்கு அந்த அதிஷ்டம் இருக்கும் என்று
சோதித்து பார்ப்போம் என்று பரிசுசீட்டு வாங்கியதை,
யார் காட்டுச் சிறுக்கி இவ என முனுமுனுத்த பாடலை,
இந்தச் சிறு மழைக்கு ஒதுங்கி பெரும் மழைக்காக காத்திருப்பதை,
சனிக்கிழமைகளில் மின்கிறுக்கல் மின்னிதழில்
வரவிருக்கும் யமுனாவீட்டை சரிபார்ப்பதை,
மிச்சமிருக்கும் பொழுதுகளில்
இப்படிச்சில மகிழ்வுகள் தொடர
சீரான வேகத்தில் வாகனத்தை செலுத்துவதை
இந்த நாளின் மகிழ்ச்சியாக
எதைச்சொல்லலாம்