உமா கதிருடன் உரையாடியது நேர்காணல்

2 ஜனவரி, 2017  

ஒரு தேநீரும், இரண்டு ரொட்டி பரோட்டாவும் சாப்பிடும் நேரத்தில் உமா கதிருடன் இன்று உரையாடியது நேர்காணல் வடிவில்….

கேள்வி: இந்த ஆண்டு (2016) வாசிப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய புத்தகமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

உமாகதிர்: குழந்தை பருவம் பற்றி எழுதிய எழுத்தாளர்களில் யூமாவாசுகியை குறிப்பிடலாம், அந்த வரிசையில் ஒரு சிறுவன் ஊட்டியில் வாழ்ந்த நாட்களை அழகாக பதிவு செய்த “வெலிங்டன்” நாவலைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய நாவல் கேள்வி: இந்த ஆண்டு (2016) பார்த்த திரைப்படங்களில் மிகவும் பிடித்த படங்களாக எதைச் சொல்லலாம்? உமாகதிர்: ஒரு தாத்தாவைப் பற்றிய திரைப்படம், நாடோடி வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருப்பார்கள். தாத்தாவிற்கு நாடோடியாக வாழ வேண்டும் என்ற ஆசை, அதற்கான சந்தர்ப்பத்தை மகன் பணம் கொடுத்து அமைத்துத் தருகிறான். இடையர்களோடு ஒருத்தனாக ஒரு கிராமத்து முதியவர் எதைப் பற்றியுமான கவலைகள் இன்றி பயணம் செய்வதைப் பதிவு செய்த கன்னடப்படமான “திதி”யும் மாராத்தி திரைப்படமான “சாய்ரட்”டையும் சொல்லலாம். தமிழில் “ஜோக்கர்” திரைப்படத்தை குறிப்பிடலாம்.

கேள்வி: சமீபத்தில் சிங்கப்பூர் வந்த கவிஞர் யவனிகா ஸ்ரீராம்முடனான சந்திப்பு?

உமாகதிர்: கவிஞர்கள் எல்லாம் இருக்கமாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், ஆனால் நேரில் பழக இருக்கம் இல்லாத சாதரணமாக பழகக்கூடியவராக யவனிகா இருந்தார். எல்லா தரப்பு மனிதர்களிடமும் உரையாடக்கூடியவர்.யவனிகாவுடனான உரையாடல் வழியே நமக்கு கற்றுக் கொள்வதற்கு நிறைய விசயங்கள் இருக்கிறது. கேள்வி: மகன் நவீனனுக்கு இலக்கிய வாசிப்பு, புத்தகங்கள் & எழுத்தாளர்களின் அறிமுகத்தை ஏதோ ஒரு விதத்தில் ஞாபகப்படுத்துவன் சூட்சுமம் என்ன?உமாகதிர்: விவசாயின் மகன் விவசாயம் சார்ந்து ஏதேனும் தெரிந்து கொள்வது போல, எனது தந்தை அரசு வேலை பார்ப்பவர் ஓய்வு நேரங்களில் வார சஞ்சிலுகைகளை வாசிப்பார், அதை பார்த்து கொண்டிருக்கும் எனக்கும் வாசிப்பில் ஆர்வம் வந்தது. அப்படித்தான் நான் வீட்டில் இருக்கும் போது புத்தகங்களை வாசிப்பேன், திரைப்படங்கள் பார்ப்பேன். அந்த இரண்டையும் நவீனன் பின் தொடர்கிறான்.

கேள்வி: சிறுகதை எழுத விரும்புவது…

உமாகதிர்: ஆர்வத்தோடு சரி. வாசிப்பவர்கள் எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் சிறுகதை எழுத வேண்டும் என்று தோன்றும், அப்படித்தான் அதற்கு நிறைய வாசிப்பு வேண்டும். கேள்வி: பரபரப்பான சிங்கை சூழலில், எந்த ஒரு காட்சியையும் நின்று அவதானிப்பது அரிது. நீங்கள் கடந்து செல்லும் நிறைய மனிதர்களை அவதானிக்கிறீர்கள், ஏன்? உமாகதிர்: வாசிப்புதான் காரணம்.நாஞ்சில் நாடனின் “சதுரங்கக்குதிரை”யில் ஒரு காட்சி வருகிறது. நாரயணன் ஒரு விற்பனை பிரதிநிதி, விற்பனைப் பிரதிநிதிக்குரிய டார்க்கெட்டை அந்தந்த மாதத்தில் தொட வேண்டும். மகராஸ்டிராவில் ஒரு குக்கிராமத்தில் ஆர்டர் எடுக்கச் செல்வார், அங்கு அவருக்கு ஆர்டர் கிடைக்காது. இந்த மாதம் என்ன செய்வது உணவிற்கு கூட பணம் இல்லையே என்று கவலையோடு செல்லும்போது, அவரை தாண்டிச் செல்லும் ஒரு கரும்பு லாரியின் மேல் உள்ள சிறுமியை கவனிப்பார் அந்த சிறுமியும் இவரைப் பார்த்தவுடன் ஒரு கரும்பை உருவி உடைத்து அவரது திசை நோக்கி எறிவாள், அந்த கரும்பை பிடித்து இவர் சாப்பிடுவார். அப்படித்தான் ஒரு விரத்தியான சூழலில், ஒரு அன்பு நம்பைப் பற்றி யோசிப்பதற்கோ அன்பு செய்யவோ தயாராகத்தான் இருக்கிறார்கள். அது இலக்கிய வாசிப்பு வழியாக கண்டிப்பாக எல்லோருக்கும் வரும், அந்த மாதிரியான காட்சிதான். சோர்வுற்றவனுக்கு கிடைக்கும் ஒரு மாத்திரைப்போல! புத்தக வாசிப்பின் வழியே, பிற மனிதர்களை அவதானிப்பது வழியே கிடைக்கிறது..

கேள்வி: வாசிப்பு பற்றி சொல்ல விரும்புவது…

உமாகதிர்: வாசிப்புதான் ஒருவனை நல்வழிபடுத்தும். இலக்கிய வாசிப்பாளன் எவ்வளவுதான் கரடு முரடானவனாக இருந்தாலும் அவனை நல்ல வழிக்கு கொண்டு வந்துவிடும். நாம் வாழ முடியாத ஒரு வாழ்கையைதான் நிறைய நபர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை ஒரே வாழ்க்கை, அதனால் எல்லாருடைய அனுபவங்களையும் நம்மால் பார்க்க முடியாது, அதை எழுத்தாளன் செய்கிறான். வாசிப்பின் வழியே வாசிப்பாளன் உணர்கிறான்..

கேள்வி: எழுத்தாளர்களில் யூமாவாசுகியின் மீது மட்டும் ஏன் கூடுதல் ப்ரியம்?

உமாகதிர்: யூமாவாசுகியின் எழுத்தில் நாலு வரி எழுதினாலும் அதில் இரண்டு வரி மற்ற மனிதர்கள் பற்றிய அன்பு இருந்து கொண்டே இருக்கும். அதை தவிர்த்து அவரால் எழுதவே முடியாது. கவிதையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும் சகமனிதர்கள் மீதான அன்பு இருக்கும். எப்படி சலிக்காமல் அன்பு பற்றி ஒருவரால் எழுத முடிகிறது அதான்.

கேள்வி: திருவண்ணமலை என்றால் ஞாபகத்திற்கு வருவது?

உமாகதிர்: முன்பெல்லாம் அங்கு இருக்கும் ஒரு சந்தையும், கிரிவலம் ஞாபகத்திற்கு வரும், இப்போதெல்லாம் பவாதான் ஞாபகத்திற்கு வருகிறார்.

கேள்வி: ஏன் பவாசெல்லத்துரையின் ஞாபகம்?

உமாகதிர்: ஒருமுறை அய்யனார் விஸ்வநாத் தான் ஒரு கிரகபிரவேஷத்திற்கு அழைத்திருந்தார். அப்பகூட அய்யனாரை கிண்டல் செய்தேன், அங்கெல்லாம் சென்று ஜாலியாக இருக்க முடியாது என்று. சென்றது பவா வீடு, அங்கு சென்றபின்னர்தான் தெரிந்தது எழுத்து, ஓவியம், திரைப்படம் என நிறைய ஆளுமைகள் வந்திருந்தனர். நாம் பார்த்த கிரகபிரவேஷம் மாதிரி கிடையாது. வீட்டை இயக்குனர் பாலு மகேந்திரா திறந்து வைத்தார், அந்த வீட்டிற்குள் முதன் முதலாக சென்றது அந்த வீட்டை கட்டும்போது வேலை பார்த்தவர்கள், கரிசல் கிருஸ்ணசாமி என்று நினைக்கிறேன் அவர் பாடிய பாடல் அப்படி நிறைய விசயங்கள் அன்றய பொழுதில். அதனை தொடர்ந்து அடிக்கடி பவா வீட்டடிற்கு செல்ல ஆரம்பித்தேன். அந்த வீட்டில் எல்லாமே இருக்கிறது. இலக்கியம் இருக்கிறது, நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லா தரப்பு மனிதர்களும் அங்கு வருகிறார்கள், அப்படி வரும் ஆளுமைகள் அதற்கான கொண்டாட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு சாதரணமாக இருக்கிறார்கள் என்னைப் போன்றவர்களோடு உரையாடுகிறார்கள். யார் அங்கு சென்றாலும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான மரியாதை.

கேள்வி: அய்யனார் விஸ்வநாத் நட்பு பற்றி

உமாகதிர்: அய்யனார் வலை பதிவராகத்தான் அறிமுகம். நெருக்கமான தோழன், அதை உணரவைப்பார். அவரது அன்பு ரொம்ப பிடிக்கும், அதுவும் ரெண்டு பெக்க போட்டால் பீரிடும் அன்பு தனித்துவமானது. சமுகத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் பற்றி விசனப்பட ஆரம்பித்து விடுவார். அவருடைய மொழி அழகாக இருக்கும், அவருடைய கவிதைகள் அழகானது, ஒருவிதத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம். என் வாழ்வில் நான் கண்டடைந்த நல்ல நட்பு அய்யனார்.

கேள்வி: சிங்கப்பூர் இலக்கியம் பற்றி?

உமாகதிர்: சிங்கப்பூர் இலக்கியத்தை பொறுத்தவரை அதிகமாக வாசித்ததில்லை, வாசித்த ஒன்றிரண்டும் பெருத்த ஏமாற்றம்தான். காத்திரமான சிறுகதைகள் எழுதுவதற்கான எல்லாக் களமும் இருக்கிறது, ஆனால் அதற்கான நேரமும் உழைப்பும் யாரிடமும் கிடையாது. அதற்கான உழைப்பும் திறமையும் இருக்ககூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள், ஆனால் அப்படி யாரும் எழுத முன்வரவில்லை அல்லது முயற்சி எடுக்கவில்லைனு சொல்லலாம். ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டிய கட்டாயம் இங்கு, அதனாலான அழுத்தத்தோடு இருக்கிறார்களோ என்று தோன்றும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s