இந்த நாளின் மகிழ்ச்சியாக
எதைச்சொல்லலாம்
யமுனா வீட்டின் 8-வது கவிதையை
சூபர்வைசர் இராஜேந்திரனின் காலம் சென்று திரும்பியதை
வீடுதேடி அலைந்த டூலெட் நாயகனுடன்
காட்சிக்கான கட்டடங்களைத் தேடி வாகனத்தை செலுத்தியதை
முடிதிருத்தம் செய்து
இன்னும் கொஞ்சம் அழகனாக்கி ரசித்ததை
நட்சத்திரம் பிரேம்குமாரின் நேர்காணலை எடிட் செய்ததை
இந்த நீண்டதொரு மழைக்கு
குட்வில் கடைக்குப்போய் அருந்தப்போகும் ஒரு தேநீர்
அதன்பின்னர் கிளர்த்தப்போகும் அவளின் ஞாபகத்தை
சென்னைத்தெருவில் நடந்து சென்றதை
இந்த நாளின் மகிழ்ச்சியாக
எதைச்சொல்லலாம்