இந்தநாளின் மகிழ்ச்சியாக
எதைச்சொல்லலாம்
ஐபோன் 12 புரோ-மேக்ஸ்
தம்பி பெருமாள் அடித்திருக்கும் மொட்டையை
பாடலாசிரியர் வாசனை மணமூட்டிய
அஞ்சப்பர் விருந்துணவை
அப்சாக் கல்லூரி காலத்தில் முணுமுணுத்த
காஞ்சிப்பட்டில் சேலைகட்டிய பாடலை
மாண்டாய் எஸ்டேட் பாய் கடை தேநீரை
தேக்காவில் ஒரு பாலம் இருந்த லதாவின் சிறுகதையை
மாலைப்பொழுதில் மேலாளருடன் அமைந்த நீண்டதொரு உரையாடலை
சன்னல் வந்து எட்டிப்பார்த்த
அந்த அவநிதாவை
ரூட்டு தலயை
இந்தநாளின் மகிழ்ச்சியாக
எதைச்சொல்லலாம்