இந்தநாளின் மகிழ்ச்சியாக
எதைச்சொல்லலாம்
ஜோ பகிர்ந்த பொங்கல் கவிதைப் படங்களை
தேக்காவின் கடைகளெங்கும் முளைத்து நிற்கும் கரும்புக் கட்டை
ரங்கூன் சாலையிலிருக்கும் சங்கீதா பவனின்
மணக்கும் பில்டர் காபியை
‘தோட்டம்’ நடிகர் சிங்கை ஜெகன் மற்றும்
இசையமைப்பாளர் சபீர் பற்றி அமைந்த
சுந்தருடனான நட்புரையாடலை
வாகன ஓட்டத்தில் ஆடச்செய்த
பாடலாசிரியர் மதிசியம் பாலா எழுதிய
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதய்யாவை
இளஞ் சிவப்பு நிறத்தை
இந்தநாளின் மகிழ்ச்சியாக
எதைச்சொல்லலாம்