என்ன செய்துவிட்டேன்

எனக்கு தெரிந்த
எல்லா நாட்களும் அப்படியே இருக்கின்றன

எடுத்துக்கொண்ட ப்ரியங்களை
திரும்பபெற
காத்திருத்தலில்
என்ன இருக்கப்போகிறது
உனக்கு தெரியும்

தொலைந்துபோவது
ஒரு பாவனைதான்

திரும்ப வருவதும்
ஒரு பாவனைதான்

குட்டப்பனோடு உரையாடி
நீண்ட நாட்களாகிவிட்டது
நீண்ட நாட்களில்
என்ன செய்துவிட்டேன்
குட்டப்பனோடு உரையாடுவதை தவிர்த்து

 

சாப்பிட வாருங்கள்: “ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” 12.02.2012 – ஜீராங் ஈஸ்ட் நூலகத்தில்

 

 

.

வாசகர் வட்டம் – கவிதை அனுபவங்கள்

அன்புள்ள வாசகர் வட்ட நண்பர்களுக்கு,

29ஆம் தேதி ஜனவரி மாதம் அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெற இருக்கிறது. வாசகர்கள் தாங்கள் படித்தப் புதுக் கவிதைகள், கவிதை அனுபவங்கள், படிமங்கள், புதுக் கவிதை வடிவங்கள், புதுக் கவிதை தோற்றம், வளர்ச்சி இவைக் குறித்துப் பேசலாம். தமிழில் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நூலகம் பேராதரவு தருகிறது. எனவே தொடர்ந்து இதை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இம்முறை கவிதைகளோடு ஒரு புதிய தொடக்கமாக தொடங்குவோம்.

நாள்: 29-1-12 ஞாயிறு

மாலை: 5.00 மணி

தலைப்பு: புதுக் கவிதைகள்

இடம்: அங் மோ கியோ நூலகம் டொமேட்டோ அறை முதல் மாடி (Singapore) 

 அன்புடன் வாசகர் வட்டம் சார்பாக

சித்ரா