யமுனா வீடு

ஸ்தோத்திரம் சொல்லிய அவள்
அந்த புலர் பொழுதின்
பச்சைநிற சமிக்கையில் சாலையை கடக்கிறாள்
மெல்ல இருள் விலக்கிய வாடகை டாக்சி ஒன்று சன்னமாக அவளை மோதி நிற்கிறது.
சாலையில் நிலைகுழைந்தவள்
நியாபகப்படுத்தி சமிக்கையை சரிபார்க்கிறாள்
பச்சையில் ஒளிர்து கொண்டிருக்க
டாக்சி ஓட்டுனர் கீழிறங்கி வருகிறார்
அவளின் ஒவ்வாமையை பார்த்து பதற்றமடைந்தவராய்
கைகளை கூப்பி அழும் பாவனையில் ரட்சிக்க வேண்டுகிறார்
ஞாபகங்களை மீள பெற்ற அவளும்
கை கால் சிராய்ப்புகளை கெத்தி கடக்க முற்பட
சீன ஓட்டுனர்
அவள் வீடடையும்வரை வந்துதவுவதாகச் சொல்ல மறுக்கிறாள்
இருந்தும் சீனருக்கு அவளின் கெந்தல் நடைகண்டு
வாகனத்தில் அழைத்து செல்கிறார்
15 நிமிட பயணநேரமும் சீனரே பேசிக்கொண்டிருக்கிறார்
காவல்துறையை அழைத்து புகார் செய் மகளே
மருத்துவ மனைக்கு அழைத்து செல்லவா மகளே
புன்னகையால் அதுவும் வேண்டாம் என்றவளை
நீ கர்த்தரின் பிள்ளையானவளா என்கிறார்
ஆம் என ஆமோதித்தவளிடம்
அதான் என்னை மன்னித்தாயா
நானும் கர்த்தரின் பிள்ளையானவன்தான்
ஆனால் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன்
உன்னால் மட்டும் எப்படி அன்பு செய்யமுடிகிறது
உன்னைப்போல மகள் ஒருத்தி எனக்கு இருக்கிறாள்
வேறெதுவும் உதவிகள் தேவைப்பட்டால் அழை மகளே என்றவர்
அவள் வீடடைந்தபின்னும்
அவள் சென்ற திசைநோக்கி துயர்கடந்து நின்றுகொண்டிருந்தார்
கர்த்தரின் பிள்ளையானவளின் அன்பினால்…

#பாண்டித்துரை

அதியா

அதியா

பெரும் மழைக்கான அறிகுறிகள்
தொட்டிச் செடிகளை பத்திரப்படுத்துகிறேன்

அதியா

தேநீருக்காக காத்திருக்கும் நேரத்தில்
பிரியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
தேநீர் அருந்திய பிறகு
என்ன பேசப்போகிறோம்.

அதியா

ஆலயம் செல்கிறேன்
என்னற்ற முகங்களில் தரிசனம்
இவ்வளவு தான் என் இறையன்பு.

அதியா

பற்றிக்கொண்டிருக்கும் கைவிரல்களை எடுத்துவிடாதே
கொஞ்சம் கருணையாக இருக்கிறது.

#‎பாண்டித்துரை‬

யமுனா வீடு

யமுனா வீடு
………………….

அவளுக்கென
சொல்வதற்கு
நிறைய வார்த்தைகள் இருந்தும்
மௌனமாகிவிடுகிறாள்
வலியது அன்பு

 

யமுனா வீடு
…………………

துயரம் கடந்து
பூரித்து போயிருக்கிறாள்
நிலவின் அன்பைத் தருமபவளின்
கதை சொல்லப்போகும் வீடு
வலிகள் சுமந்த பயணத்தில்
அன்பு ததும்பும் ஒரு வீடு
அவளுக்கானது
அவர்கள் சொல்லக்கூடும்
இனி
அவளுக்கென்ன

 

யமுனா வீடு
…………………

அவளுக்கென்ன
எழுதிவிடுகிறாள்
இந்த பொழுதிற்கான அன்பை
வலிந்த சொற்கள் கொண்டு
வலி
அவளுடையது