தனி

நண்பர்களுக்கு

 வணக்கம்!

 “தனி” மௌனத்தில் உறைந்துகிடக்கும் தனிமையான தீராத பொழுதுகளை பெரிதுபடுத்தாமல் புறக்கணிப்புக்கு இலக்காகும் பரப்பில் தனியாக (SOLIDARITY) குரல் எழுப்பக்கூடிய வடிவமாக உருவெடுக்க “நாம்” நண்பர்கள் குழுவினரின் புதிய முயற்சியாக தொடர்கிறது.

“தனி” இதழ் ஆகஸ்ட் மத்தியில் நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக  அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறோம். திட்டமிடப்படாத நாள் ஒன்றில் உங்களுக்கு அழைப்பு வரும் கலந்துகொள்ளுங்கள்.

 “தனி” – அடுத்த இதழுக்கான படைப்புகள் தொகுத்துக்கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ற்குள் உங்களின் படைப்புக்களை எனக்கு அனுப்பிவையுங்கள்.

 “தனி” – இதழ் இருமாதங்களுக்கு ஒரு முறை கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருக்கிறோம். இதழ் சிறப்பான முறையில் வடிவமைத்துகொண்டு வர ஆகக்குடிய செலவில் ஒரு பகுதி நிரந்தர வருவாய் தரும் விளம்பர ஆதரவு நிறுவனங்களை தேடிக்கொண்டிருக்கிறோம்,  அதனால் தங்களுக்கு தெரிந்த அறிந்த விளம்பர ஆதரவு நிறுவனங்கள் இருந்தால் “தனி” இதழினை அறிமுகப்படுத்துங்கள்.

நட்புடன்
பாண்டித்துரை

+65 82377006

pandiidurai@yahoo.com

thanimagazine@gmail.com

ஒரு கவிதை (தங்கமீன் இணைய இதழில்)

குடியேறிய முதல்நாளில் இருந்து
உங்களுடைய பணி ஆரம்பமாகிறது
உன்னதமான ஒன்றைப் பற்றி
இளையர்களோடு உரையாடுகிறீர்கள்
ரகசிய சொல்லாடல்களைக் கையகப்படுத்த
சதுரங்க காய்களை நகர்த்தி
குட்டப்பனின் மனநிலையைப் பிரதிபலித்து
எல்லோராலும் நம்பப்படுகிறீர்கள்

உங்களைச் சந்தித்த பின்
அவரோடும் இவரோடும் இவர்?
எனும் கேள்வியைத் தோற்றுவித்து
நித்ய புன்னைகையுடன் வலம் வருகிறீர்கள்
அப்போதைக்கெல்லாம் உங்களின்
உட்சூம்பிய ஆதங்கம் தெரியவில்லை

ஒருநாள்
சூன்ய வெளியில் கல் எறியப்படுகிறது
பிறகொருநாள் காறி உமிழப்படுகிறது
மற்றொரு நாள் வசைச் சொல் பிரயோகிக்கப்படுகிறது
சலனமற்ற ஒருநாளில் மலத்தை துடைத்து எறிகிறார்கள்

இதன் பின்னணியில்
நீங்கள் இருக்கிறீர்கள் என்று நம்பப்பட்டு
அத்துனைக் கெட்டவார்த்தைகளும்
உங்களை நோக்கிப் பிரயோகிக்கப்படுகிறது
எப்போதும் போலவே
உங்களின் இதயம் துடித்துக் கொண்டிருக்க
லெட்சுமி கடாட்சமாய்
அவள் தோன்றப்போகும் கனவொன்றில்
நித்திய புன்னகையுடன் உறங்கப்போகிறீர்கள்.

நன்றி

http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=131

அகநாழிகை – இதழ் 5 ல் வெளிவந்த கவிதை

மே  மாத பிறந்தநாளுக்குப் பின்
சரியாக இரவு 12 மணிக்கெல்லாம்
யாரோ
குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்
 பல்வேறு சந்திப்புகளில்
என்னை அவதானித்த
அந்த யாரோ
 என்னோடு பேசத் தயங்குவதாகவும்
அதனால்தான்
இந்தக் குறுஞ்செய்தியென்று
உங்களை எனக்கு பிடித்திருக்கிறதுமு
அதனால்
ஒரு முத்தம் கொடுக்க அனுமதிப்பீர்களா
நீங்கள் மறுத்தாலும் கொடுப்பேன் என்று
ஒவ்வொரு இரவிலும்
பேசத் தயங்கியவனின் குறுஞ்செய்தி
முத்தம் முலை என படர்ந்து
அக்குளில் வேர்வையை நிரப்புகிறது
 சன்னலை திறந்து காற்றோட்டத்தை தேடுகிறேன்
நிலவின் குளிர்ச்சி
இரவுக் காற்றின் மனத்தோடு
மீண்டும் ஒரு முறை
அந்தக் குறுஞ்செய்தியை வாசித்தபின்
உறங்கப்போகிறேன்

நன்றி: அகநாழிகை