சொற்சுவை 2010 (ந.பாலசுப்ரமணியன்)

ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் (திருப்பத்தூர்) கல்லூரியில் வணிகவியல் படித்தபோது சிங்கப்பூர் பற்றிய கனவுகளும் சிங்கப்பூர் செல்லவேண்டும் என்ற எண்ணங்களும் எழுந்ததாக ஞாபகம் இல்லை. எனது வணிகவியல் பேராசிரியர் ந.பாலசுப்ரமணியன்

அவர்கள் அவரின் சிங்கப்பூர் பயண அனுபவத்தையும் பாரதியார்ஆக வேசமிட்டதையும் முஸ்தபா கடை பற்றியும்  இன்னும் சில பயணஅனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்று அவரை கலைப்பித்தர்கள் கழகம் ஏற்பாடு செய்த சந்திப்பில் சந்தித்தபோது ஞாபகமாய் வந்துசென்றது.

டேய் நீயும் எழுதிறியா கல்லூரியில் படிக்கும் போது நீ எழுதியதில்லையே என்று குழந்தைக்கான துள்ளலுடன் பேசிக்கொண்டிருந்தார். கல்லூரி  நாட்களில் என் நண்பர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இருந்த நெருக்கம் எனக்கு இல்லாதது பற்றி கொஞ்சம் வருத்தமாக இருந்தது

14.11.2010 முதல் 20.11.2010 வரை பேராசிரியர் டாக்டர் தா.மணி (முதல்வர்- கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேலைச் சிவபுரி – புதுக்கோட்டை) மற்றும் பேராசிரியர் ந.பாலசுப்ரமணியன் (துணை பேராசிரியர் வணிகவியல் துறை  ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி திருப்பத்தூர்-சிவகங்ககை) இருவரும் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்  அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்

 

படித்ததும் பிடித்ததால் பகிர்ந்து கொள்கிறேன்

சாமிக்கும் மேல செளமியா

ஒவ்வொரு பலூனாய்
உடைத்துக் கொண்டிருக்கிறாள்
செளமியாக்குட்டி
பலூன்
உடைந்து கொண்டிருக்கிறது
வெடிச்சிரிப்புடன்.
o
விளையாடி முடித்து
தூக்கிப்போடுகிறாள்
செளமியாக்குட்டி
சோகத்தில்
கைகால்களை உடைத்துக் கொள்கின்றன
அறிவில்லாத பொம்மைகள்.
o
நிறையக்கேள்விகளுடன்
விடிகிறது
செளமியாவின் காலை.
கேள்விகளுக்கு
பயந்து சிலைக்குப்பின் ஒளிந்து பார்க்கிறார்
கடவுள்
o
நான் அம்மா செல்லம்.
அவங்கதான் நான்
குட்டிப்பாப்பாப்பாவா இருக்கும்போது
எறும்புகடிக்காம இருக்க தொப்பைக்குள்ள வச்சுருந்தாங்க
என்கிறாள்.
தூக்கத்தில் உதட்டசைத்து
கடவுளிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறாள் போலும்.
o
குழந்தையும் தெய்வமும் ஒன்று
என்றேன் செளமியாவிடம்
இல்லப்பா நான் சாமிக்கும்
மேல
சாமிக்கு என்னமாதிரி சிரிக்கத்தெரியாது
என்றாள்.
சரிதான்.

http://silarojakkal.wordpress.com/2010/10/15/சாமிக்கும்-மேல-செளமியா/

thanks: Poems by லதாமகன்

அசிங்கம்னா என்னடா (தலைவிதி)

முனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடரா வருதுனு நண்பர்கள் பலர் சொல்லவும், கடந்த இதழின் அக்கப்போரை முந்தாநேற்று ஒரு தோழி படித்துவிட்டு அலறி அடித்து ஓடிவந்து நீ படிச்சியாடானு கேட்கவும்…
நீயும்மாடினு கேட்டு வைத்தேன்.
 
நேற்று இரவு அலுவலக மாதாந்திர கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திருப்பிய பின் நள்ளிரவில் உயிரோசையை வாசித்துவிட்டு வல்லினம் அகப்பக்கதை வாசிக்கத் தொடங்கினேன்…
 
ம.நவீன்-ன் எதிர் வினையை வாசித்து முடித்தபின் எனக்குள் எழுந்தது ஒரே கேள்விதான்!
 
வல்லினம் அகப்பக்கத்தில் தனது புகைப்படத்துடன் ம.நவீன் பக்கங்கள் என்று விளம்பரப்படுத்தியுள்ள  http://vallinam.com.my/navin/  எனும் தளத்தில்தான். ”இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை” – ”ம. நவீன்” எனும் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது…
 
ஆக அப்படி இருக்க…  

 
அந்த தளத்தில் வாசித்த எனக்கு, வல்லினம் அகப்பக்கத்திற்கு தனது எதிர்வினையை பா.அ.சிவம் அனுப்பியதை, அசுத்தத்தை  ஏற்படுத்தியதாக ம.நவீன் எழுதியதை நினைத்து எக்குக்கு தப்பாக சிரித்துவைத்தேன்.
 
வல்லினம் இதழினை வெளியில் இருந்து யாரேனும் வந்துதான் அசுத்தப்படுத்தவேண்டுமா?
 
குறிப்பு:
ஜெயமோகனின் குறிப்பினை மட்டும் குறிப்பிட்டுவிட்டு எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் மனுஸ்யபுத்திரன் குறிப்புகளை விட்டு விட்டீர்களே (அவர்கள் வருந்தக்கூடும்)  மிஸ்டர்.
 
நன்றி: வல்லினம் மற்றும் லும்பினி
 
வாசக வேண்டுகோள்: –
  
முனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடராக வெளிவரவில்லையென்று அத்தகைய பத்திக்கான வாசகர்கள் வருந்துவதாக பேசிக்கொள்கிறார்கள்…
 
முனைவர் லெட்சுமியின் அக்கப்போர்க்கு முழுப்பதிலாக அடுத்த வாரத்தில் கிடைக்கும் ஓய்வு நாளில் சின்னப்புள்ளைத்தனமாக சிலவரிகளை எழுதி பதிவிட நினைத்துள்ளேன்.
 
வல்லினம் அகப்பக்கத்தில் அக்கப்போர் தொடரட்டும் அப்போது மணக்கும் அல்லவா?