Category Archives: நாடகம்
தனி
நண்பர்களுக்கு
வணக்கம்!
“தனி” மௌனத்தில் உறைந்துகிடக்கும் தனிமையான தீராத பொழுதுகளை பெரிதுபடுத்தாமல் புறக்கணிப்புக்கு இலக்காகும் பரப்பில் தனியாக (SOLIDARITY) குரல் எழுப்பக்கூடிய வடிவமாக உருவெடுக்க “நாம்” நண்பர்கள் குழுவினரின் புதிய முயற்சியாக தொடர்கிறது.
“தனி” இதழ் ஆகஸ்ட் மத்தியில் நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறோம். திட்டமிடப்படாத நாள் ஒன்றில் உங்களுக்கு அழைப்பு வரும் கலந்துகொள்ளுங்கள்.
“தனி” – அடுத்த இதழுக்கான படைப்புகள் தொகுத்துக்கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ற்குள் உங்களின் படைப்புக்களை எனக்கு அனுப்பிவையுங்கள்.
“தனி” – இதழ் இருமாதங்களுக்கு ஒரு முறை கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருக்கிறோம். இதழ் சிறப்பான முறையில் வடிவமைத்துகொண்டு வர ஆகக்குடிய செலவில் ஒரு பகுதி நிரந்தர வருவாய் தரும் விளம்பர ஆதரவு நிறுவனங்களை தேடிக்கொண்டிருக்கிறோம், அதனால் தங்களுக்கு தெரிந்த அறிந்த விளம்பர ஆதரவு நிறுவனங்கள் இருந்தால் “தனி” இதழினை அறிமுகப்படுத்துங்கள்.
நட்புடன்
பாண்டித்துரை
+65 82377006
மிருகம் நாடகம் பற்றி மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் பார்வை