Category Archives: நிகழ்வு
நேசிக்கப்படவேண்டியவர்கள்
ஒவ்வொரு சந்திப்பும் ஏதோ ஒருவிதத்தில் முக்கியமானதாகவிடுகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் யாரோ ஒருவர் வசீகரித்து விடுகிறார்கள். ஓவியர் உமாபதியின் கவிதைநூல் வெளியீட்டிற்கு சென்றிருந்தேன். நிகழ்வில் பேசியவர்களின் பேச்சிலிருந்து காதல் பற்றிய கவிதைதொகுப்பு என்று அறியமுடிந்தது. படித்துமுடிப்பதற்குள் ஒருவித அயற்சிவந்துவிடும். சிவக்குமார் என்பவர் கவிதை வாசித்தார். அவரை பற்றிய அறிமுகத்தில் நிகழ்விற்கு புதியவர் எ…ன்று தெரிந்தது. ஏதோ ஒன்றில் அரவிந்அப்பாதுரையை ஞாகபடுத்தினார். அருகில் இருந்த துரைபிராசாந்தனிடம் யார் என்றேன். நாடக நடிகர் வசந்தம் தொலைக்காட்சியில் நாசி பிரியாணியில் நடித்திருப்பதாகச் சொன்னார். அகல்யா-வை விரும்பி பார்த்த பொழுது நாசிபிரியாணியையும் பார்த்திருக்கிறேன். சிவக்குமார் ஞாபகத்திற்கு வரவில்லை. உண்மையை பேசுபவர்களும், பாசாங்கற்ற மனிதர்களும் நேசிக்கப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள்