தனி

நண்பர்களுக்கு

 வணக்கம்!

 “தனி” மௌனத்தில் உறைந்துகிடக்கும் தனிமையான தீராத பொழுதுகளை பெரிதுபடுத்தாமல் புறக்கணிப்புக்கு இலக்காகும் பரப்பில் தனியாக (SOLIDARITY) குரல் எழுப்பக்கூடிய வடிவமாக உருவெடுக்க “நாம்” நண்பர்கள் குழுவினரின் புதிய முயற்சியாக தொடர்கிறது.

“தனி” இதழ் ஆகஸ்ட் மத்தியில் நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக  அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறோம். திட்டமிடப்படாத நாள் ஒன்றில் உங்களுக்கு அழைப்பு வரும் கலந்துகொள்ளுங்கள்.

 “தனி” – அடுத்த இதழுக்கான படைப்புகள் தொகுத்துக்கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ற்குள் உங்களின் படைப்புக்களை எனக்கு அனுப்பிவையுங்கள்.

 “தனி” – இதழ் இருமாதங்களுக்கு ஒரு முறை கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருக்கிறோம். இதழ் சிறப்பான முறையில் வடிவமைத்துகொண்டு வர ஆகக்குடிய செலவில் ஒரு பகுதி நிரந்தர வருவாய் தரும் விளம்பர ஆதரவு நிறுவனங்களை தேடிக்கொண்டிருக்கிறோம்,  அதனால் தங்களுக்கு தெரிந்த அறிந்த விளம்பர ஆதரவு நிறுவனங்கள் இருந்தால் “தனி” இதழினை அறிமுகப்படுத்துங்கள்.

நட்புடன்
பாண்டித்துரை

+65 82377006

pandiidurai@yahoo.com

thanimagazine@gmail.com

அக்கப்போருக்கு ஒரு ½ பதில்

பாண்டி லெட்சுமி அம்மா செம்ம வாங்கு வாங்கியிக்காங்க, ம் நான் தான் வின்னர்னு நிருபிச்சிட்டாங்க! நீங்க படிக்கலையா? படிச்சிருந்தா இந்நேரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 4 பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருப்பிங்களேனு நண்பர்கள் குலாம்ல இரண்டு பேரு கேட்டாங்க.

 என்னத்தங்க சொல்ல அடுத்த வருசம் புத்தகமா வருதுனு நினைச்சுக்கிற பக்குவம் ”குலாம்”கிட்டயும் இல்ல ”ஆம்” கிட்டயும் இல்ல.

வேறு நிறுவனத்திற்கு பணி மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. காத்தால 6 மணிக்கு போன மறுக்கா வர்றதுக்கு இரவு 9 மணி அதுக்கும் மேலயும்…. அதுக்கு அப்புறம் சமைக்கணும், செரைக்கணும்னு  இத்யாதி த்தியாதினு கொஞ்சம் கொஞ்சம் இருக்குங்க.

அட அப்படானு கொஞ்சம் குஞ்சை சொறிஞ்சு ஆசுவாசபடுத்திக்கலாம்னு நெனைக்கவே நேரம் இல்லை. இதுல பதிலு கேள்வினு …

இனிமே எழுதனும்ம்மானு முதல்ல யோசிப்போம் கடைசியாவும் யோசிப்போம் அதுக்கு முதல்ல வல்லினத்தை போய் படிக்கணும். ”குலாம்” சொன்னது போக ”ஆம்” சொன்னதுபோக மிச்சம் மீதி துக்கடானு ஏதாவது இருக்கும்ல… இருக்காத பின்னே!

என்னத்த இருந்து என்னத்த ஆகப் போகுது சரஸ்வதி போய் படிக்கணும்ல…

சரஸ்வதி போய் சரியா படிக்கணும்ல …

சரஸ்வதி போய் சரியா வெளக்க போட்டு படிக்கணும்ல …

welcome croda

எனது இளைய சகோதரன் இரா.சக்திவேல்  croda Singapore pte ltd – ல் பணிபுரிய இணைந்ததை வரவேற்று croda-வின் இதழான croda way – ல் இரா.சக்திவேல்-i வரவேற்றுள்ளனர்.

sak croda

croda-வில் புதிதாக பணிபுரிய இணைபவர்களை இந்த இதழ் வழியே  croda வரவேற்று உற்சாகப்படுத்துகிறது.

 

நன்றி: croda way