நேசிக்கப்படவேண்டியவர்கள்

 

ஒவ்வொரு சந்திப்பும் ஏதோ ஒருவிதத்தில் முக்கியமானதாகவிடுகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் யாரோ ஒருவர் வசீகரித்து விடுகிறார்கள். ஓவியர் உமாபதியின் கவிதைநூல் வெளியீட்டிற்கு சென்றிருந்தேன். நிகழ்வில் பேசியவர்களின் பேச்சிலிருந்து காதல் பற்றிய கவிதைதொகுப்பு என்று அறியமுடிந்தது. படித்துமுடிப்பதற்குள் ஒருவித அயற்சிவந்துவிடும். சிவக்குமார் என்பவர் கவிதை வாசித்தார். அவரை பற்றிய அறிமுகத்தில் நிகழ்விற்கு புதியவர் எ…ன்று தெரிந்தது. ஏதோ ஒன்றில் அரவிந்அப்பாதுரையை ஞாகபடுத்தினார். அருகில் இருந்த துரைபிராசாந்தனிடம் யார் என்றேன்.  நாடக நடிகர் வசந்தம் தொலைக்காட்சியில் நாசி பிரியாணியில் நடித்திருப்பதாகச் சொன்னார். அகல்யா-வை விரும்பி பார்த்த பொழுது நாசிபிரியாணியையும் பார்த்திருக்கிறேன். சிவக்குமார் ஞாபகத்திற்கு வரவில்லை. உண்மையை பேசுபவர்களும், பாசாங்கற்ற மனிதர்களும் நேசிக்கப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள்

 

இரையாகிக்கொண்டிருக்கும் மிருகம்

அந்த மிருகம்
எப்படி இந்தக் காட்டிற்குள் வந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களோடு ஒன்றிணைந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல ஊளையிட்டது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல வேட்டையாடியது என்று
அந்த மிருகம்
எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மிருகமாகியது என்று
அந்த மிருகம்
எப்படி அந்த மிருகத்தை பின்தொடர்ந்தது என்று

இரையாகிக்கொண்டிருக்கும் ஒரு மிருகத்தை
பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்

 

என்ன செய்துவிட்டேன்

எனக்கு தெரிந்த
எல்லா நாட்களும் அப்படியே இருக்கின்றன

எடுத்துக்கொண்ட ப்ரியங்களை
திரும்பபெற
காத்திருத்தலில்
என்ன இருக்கப்போகிறது
உனக்கு தெரியும்

தொலைந்துபோவது
ஒரு பாவனைதான்

திரும்ப வருவதும்
ஒரு பாவனைதான்

குட்டப்பனோடு உரையாடி
நீண்ட நாட்களாகிவிட்டது
நீண்ட நாட்களில்
என்ன செய்துவிட்டேன்
குட்டப்பனோடு உரையாடுவதை தவிர்த்து

 

இரவிற்குமட்டும் தெரியும் அழுகையும் எனதன்பும்

நீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.

மயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.

இந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.

இன்று
கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்
பைத்தியமாக இருந்தேன்
குழந்தையாக இருந்தேன்
ஒரு மாதிரியாக இருந்தேன்
மொத்தத்தில் இருந்தேன்

இன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது

கேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….

கியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..

இரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —  

 

திரு-பூர்வீக-சதிர்

நூல் வெளியீட்டு விழா

 நாள்: நவம்பர் 2,  புதன் கிழமை நேரம்: மாலை 6.00 மணி

இடம்: புரோகிராம் வளாகம்

ஜீவன் ஜோதி பில்டிங் 107 பாந்தியன் சாலை எழும்பூர் சென்னை – 2

 

வெளியிடப்படும் நூல்கள்

 அன்பின் ஆறாமொழி

(கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்: முபீன் சாதிகா

வெளியிடுபவர்: இந்திரா பார்த்தசாரதி

பெறுபவர்:ஜமலான்

நூல் அறிமுக உரை

 இந்திரா பார்த்தசாரதி

ஜமலான்

அமிர்தம் சூர்யா

திரு-பூர்வீக-சதிர்

(நாவல்)

ஆசிரியர்: அரவிந் அப்பாதுரை

வெளியிடுபவர்: எஸ்.ராமகிருஷ்ணன்

பெறுபவர்: தமிழச்சி தங்கபாண்டியன்

நூல் அறிமுக உரை:

பிரபஞ்சன்

எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழச்சி தங்கபாண்டியன்

 

ஏற்புரை: முபீன் சாதிகா

அரவிந் அப்பாதுரை

 

நிகழ்சி தொகுப்பு: பா.உதயகண்ணன்

 தொடர்புக்கு: 98401 54652 94446 40986

வெளியீடு:

பாலம் பதிப்பகம் (பி) லிட்

25 அபிராமி அபார்ட்மெண்ட்ஸ்

3வது பிரதான சாலை

தண்டிஸ்வரர் நகர்

வேளச்சேரி

சென்னை – 600042

 

“தனி”

 
 
 
அழைப்பது
பாண்டித்துரை + 65 82377006
ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341

அன்புனா என்னடா?

இதுதான் அன்பு என்று எப்படி அவளுக்கு சொல்வது?

துயரங்களும் கோபங்களும் ஒருவகையான அன்புதான் புரிந்துகொள்ளும் போது………

அதீதமான மௌனம்கூட அழகான அன்புதான்…….

ஒரே அன்பை என்னை சுற்றிய எல்லோருக்கும் எப்படி பகிர்ந்தளிப்பது ?

என்னை சுற்றிய மனிதர்களை அவதானித்து நேசிக்க கற்றுக்கொள்கிறேன் மனிதர்கள் மாற மாற அன்பென நினைத்ததும் மாறிக்கொண்டிருக்கிறது……..

மனிதர்கள் மீதான புரிதலில் அன்பென நாம்தருகின்ற எல்லாம் எதிர்கொள்பவர்களால் மாறிப்போகின்றன

எல்லோர் மீதும் ஏதோ ஒரு தருணத்தில் நான் கொண்ட கோபங்களை புறம்தள்ளி என்னிடம் கனிவாக பேசும்போது புரிபடுகிறது நாமும் கொஞ்சம் அன்பாய் இருந்திருக்கிறோம் என்று

அந்த கொஞ்சம் நிறையவேண்டும் என்ற எண்ணங்கள் அவ்வப்போது எழுந்துசெல்லும்….

நான் தரவிரும்பும் அன்பினை மழலை, அம்மா, ஆசிரியர், மருத்துவர் இவர்களின் வரிசையில் தேடிக்கொண்டிருக்கிறேன்…….

அன்பைத் தொடர
ஆதிசிவனை தேடுகிறேன்
சிவம் சொல்லும் பதிலொன்றில்
பிறழும் மனிதனாக
புரிபடுகிறது!