முகவை இராம்-ன் பிள்ளைத்தமிழ்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகமும், பெக்கியோ சமூகமன்றத்தாரும் இணைந்துப் படைக்கும் கவிச்சோலை நிகழ்வு வரும் ஞாயிறு மாலை (03-10-2010) பெக்கியோ சமூகமன்றத்தில் நடக்கவுள்ளது..   (Near farrer park mrt – owen road – cambridge road)

நிகழ்வில் படித்த, பிடித்த,வடித்தக் கவிதைகள் அங்கமும், முகவை இராம் அவர்களின் “பிள்ளைத்தமிழ் இலக்கிய உரையும் இடம்பெறும்.

இம்மாத போட்டிக் கவிதையின் தலைப்பு “பகலில் தோன்றிய நிலவு”…

கெட்டிமேளம் கெட்டிமேளம்……..

நமக்கில்லைங்க (வீட்ல ஆடி போய் ஆவணி வரட்டும் மகாலெட்டுமி மாதிரி (மாதிரியாம்க) பொண்ணு வரும்னு சொல்லிட்டாங்க)  நண்பன் சதிஸ்குமாருக்கு… (22.08.2010)

 திருப்பத்தூர் (சிவகங்கை) ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் B.Com முடித்து வெளியேறியபோது மனதிற்கு நெருக்கமாக கிடைத்த நண்பர்கள் இரு கைகளின் விரல்களுக்குள் அடங்கிவிடுவர். அதில் ஒருவிரல் இராமனாதபுரத்து சதிஸ்.

 சதிஸ்னதும் நண்பர்கள் எல்லோருக்கும் பளிச்சுனு மனதில் தோன்றுவது அவனோட சிரிப்பும், ”சொல்லுங்கப்பு” (அந்த அப்புவும்தான்) இரண்டும் தான் என்று நினைக்கிறேன்.

 கடந்த ஜனவரி வீடு குடிபுகும் நிகழ்விற்காக சென்றிருந்தபோது அம்மு சித்தியை சந்திக்க கோயம்புத்தூர் சென்றிருந்தேன், அப்போது சதீஸ் உடன் அதிகாலை நேரத்தை பகிர்ந்துகொண்டேன். உறவு சார்ந்த விரிவின் மூன்றாம் மனிதன் தனிமை படுத்திக் கொண்டதை, சிங்கப்பூர், கட்டாரி என்று பேசிக்கொண்டே காலையில் கண்ணயர்ந்துவிட்டேன். புதுமனை விழாவிற்கு நண்பன் விமலுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்திருந்தான்.

 அதன் பின் நண்பர்கள் எல்லோரும் கடந்த ஜீலையில் நண்பன் சீனிவாசன் திருமணத்தில் சந்தித்துக்கொண்டனர். என்னால்தான் கலந்துகொள்ள இயலவில்லை. சிங்கப்பூர் வந்தபின்பு இவனோடு சேர்த்து மூன்று நண்பர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது (கலந்துகொள்ள இயலவில்லை).

 இங்கு வந்த பின்பு அதீதமான தொலையாடல்கள் விரல்விட்டு என்னும் அளவு மின்னஞ்சல்கள் என நட்பு தொடர்கிறது. தொலையாடல் வழியே வாழ்த்து சொல்வது வருத்தமாகத்தான் இருக்கிறது (சதீஸ் திருமணத்திற்கு அம்மாவும் அக்காவும் சென்று வருவதாக சொல்லியிருக்கறார்கள்.)

 சும்மா கண்ணாடிக்கா போட்டு கலக்கலா நிக்கிறது சதிஸ்னு நீங்க நெனைச்சா இல்லைங்கண்ணா அது அடுத்த விரல் ஹைடெக் சரவணன் (ஆளா பார்த்தாவே ஹைடெக் தெரியுதில்லையா) கருப்பு கலர் டீ-சர்ட் தான் புதுமாப்பிள்ளை சதீஸ்குமார். அந்த பக்கம் இருப்பது இன்னொரு விரல் அவுக பேரும் சரவணன் – (கல்லூரியில் இவர் வரைந்த டைனோசர் ஓவியம் ரொம்ப பிரபலம்)

Good bye சிங்கப்பூர்

சிங்கப்பூர் வந்த இந்த 4 வருடங்களில் சில நெருக்கமான நண்பர்களை கண்டடைந்திருக்கிறேன். அந்த சிலரில் அறிவுநிதியின் நெருக்கம் அதீதமானது.

பேசும்போதெல்லாம் சினிமா, சீமான், செழியன், அய்யப்பமாதவன், அரவிந்தன், கவிதை என இவற்றுள் ஏதாவது ஒன்றை தொட்டுச் சென்றிருப்போம்.

அரவிந்தன், அய்யப்பமாதவன், செழியனின் பரிட்சயம் அறிவுநிதியாலே எனக்கு சாத்தியப்பட்டது. அதன் நீட்சியாக ”பிரம்மா” கவிதைத்தொகுப்பு, ”நாம்” காலண்டிதழ், ”தனி” குறும்படம் தாயாரிப்பு என்று கடல்வெளிக்குள் சில தடங்களை என் வழியே அறிவுநிதி விட்டுச்செல்கிறார்.

ஆம் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சமதள மனத்துடன் சென்னையை நிரந்தரப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிவிட்டார்.

அறிவுநிதிக்கு இனி சென்னைதான் முகவரி.

 2011ல் வெகுவான மாற்றங்களை அறிவுநிதியிடம் எதிர்நோக்கும் சிங்கப்பூர் நண்பர்கள் ஏராளம்.

அது வரைந்தவனின் மௌனம் பேசப்படும் காலமாக இருக்கலாம்.

குறுந்தகவலாகவும், தொலையாடலாகவும் இனி அறிவுநிதியின் நெருக்கத்தை நீட்டிக்கப்போவதில் பேசவும் எழுதவும் என்னை கூர்மைப்படுத்தலாம்.

நாளை இரவு (வெள்ளிக்கிழமை) பயணம்.

விமான நிலையம் சென்று விடைகொடுக்க ஆசை பணிச்சூழலில் சிக்கி இழப்பவற்றுள் இதுவும் ஒன்றாகிப்போனது.

இன்றிரவு அறிவை சந்திக்கப்போகிறேன்.  Carlsberg , Tiger பியர் சாப்பிடவேண்டும், கனவுகளை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு பேசவேண்டும். இறுக அணைத்து உறங்க வேண்டும்.

My Dear Arivu

 வரைந்தவனின் மௌனத்தை
வார்த்தையாக்கும்போது
காலம் உனதாகிறது

ஏதாகினும் செய்

இன்றவனுக்கு

பரிசுத்தமான ஒரு அப்பத்தைப் பரிசளிக்கலாம்
மண்டியிட்டுப் பிரார்த்திக்க வேண்டும்
அதற்கு தேவாலயம் செல்லவேண்டும் காதலியிடம் சொல்லி

காதலியிடம் சொல்லி
எனக்கான முத்தங்களைப் பரிசளிக்கலாம்
அதற்கு அவள் ஆமோதிப்பது சந்தேகமே
 
ஒரு கவிதை எழுதிப் பரிசளிக்கலாம்
அதற்கு அவளின்
ரஸவாத சொற்களை அறிந்திருக்க வேண்டும்
 
வோட்கா புட்டியைப் பரிசளிக்கலாம்
அதற்கு யாரேனும்
விமானத்தில் பயணிக்க வேண்டும்
 
அவனின் அறையைச் சுத்தப்படுத்தி பரிசளிக்கலாம்
அதற்கு அவன் புனிதஸ்தலமாக பாவித்து
உடனிருக்கும் நண்பர்களை ஆலிங்கனம் செய்துவிடலாம்

மெடிசாவின் மோலி மலரைப் பரிசளிக்கலாம்
கிரேக்க நாட்டிற்குச் செல்லவேண்டும்
அதற்கு தேவதைகளின் மொழியை அறிந்திருக்க வேண்டும்
 
திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும்
ஒரு சொல்லால் பரிசளிப்பதை
 
அதுவும் ஒரு குறுஞ்செய்தியாக
அதுவும் ஒரு தொலையாடலாக

என்னைத் தொடர்ந்து
யாரேனும்
இன்னும் சிலர்
மானசீக காதலிகளின்
 
நிரம்பி வழியும் அன்பினால்
நிரம்பி வழியும் பரிசுகளால்
 
தற்கொலை செய்து கொள்ள
உத்தேசித்தவன்
ஒத்திப்போட்டு
 
இரவு விருந்திற்கான ஓல்டு மங்க்கை
எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம்.
 
(க்கு)

நன்றி:உயிரோசை (உயிர்மை.காம்)

இலக்கிய வட்டம் – ஏப்ரல் 4- பேசுபவர். திரு. முகவை இராம்குமார்

நண்பர்களே,

ஏப்ரல் மாத இலக்கிய வட்டம் கூட்டத்திற்கு வாருங்கள் என அழைக்கிறோம்.

நேரம்: ஞாயிறு ஏப்ரல் 4- பிற்பகல் மணி 3

இடம்: கல்லாங் சமூக மன்றம் (கம்யூனிடி க்ளப்) -பூன் கெங் எம்- ஆர்- டி அருகில்

பேசுபவர். திரு. முகவை இராம்குமார்

தலைப்பு  : சிலம்பில் கண்ட சில செய்திகள்

அனவரும் வந்து சுவைக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

கேட்டவ(ர்) உள்ளம் கிறுகிறுத்துப் போம்வண்ணம்

தீட்டுவார் தம்முரையைத் தித்திக்கக் – கூட்டமாய்

ஏறிடுவோம் மாடி இவருரை

என்கின்ற வாரி நனைந்திடலாம் வா.

 

அகவை சிறிதுதான் ஆயினும் பேச்சில்

முகவையார்க் குண்டு முதன்மை – தகவுடனே

 சீராய் நமக்குச் சிலம்பின் சிறப்பெல்லாம்

காரா(ய்)ப் பொழிந்திடுவார் காண் .

 

சிலம்பில் ரசித்தபல செய்திகள் பற்றி

நலம்படச் சொல்லிடுவார் நண்பர்- விளம்புவதை

நாட்டமுடன் கேட்டுநீ நன்மை பலகாணத்

தேட்டையுடன் அங்கு திரள்.

சேதிபல கண்டார் சிலம்பி(ல்) இவர்தானும்,

ஆதியோ(டு) அந்தம் அவைதருவார் – யாதொன்றும்

சாக்குநீ கூறாமல் சட்டென்றே அங்குறுதல்

ஆக்கமுறு(ம்) ஆறென் றறி.

அன்புடன் வரத ராஜன்.

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு – சிங்கப்பூரில்

 

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு இந்த வெள்ளிக்கிழமை 12 மார்ச் 2010, மாலை 7 – 9 வரை நடக்க இருக்கிறது. இடம் வடபத்திர காளியம்மன் கோவில்.