அகநாழிகை – இதழ் 5 ல் வெளிவந்த கவிதை

மே  மாத பிறந்தநாளுக்குப் பின்
சரியாக இரவு 12 மணிக்கெல்லாம்
யாரோ
குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்
 பல்வேறு சந்திப்புகளில்
என்னை அவதானித்த
அந்த யாரோ
 என்னோடு பேசத் தயங்குவதாகவும்
அதனால்தான்
இந்தக் குறுஞ்செய்தியென்று
உங்களை எனக்கு பிடித்திருக்கிறதுமு
அதனால்
ஒரு முத்தம் கொடுக்க அனுமதிப்பீர்களா
நீங்கள் மறுத்தாலும் கொடுப்பேன் என்று
ஒவ்வொரு இரவிலும்
பேசத் தயங்கியவனின் குறுஞ்செய்தி
முத்தம் முலை என படர்ந்து
அக்குளில் வேர்வையை நிரப்புகிறது
 சன்னலை திறந்து காற்றோட்டத்தை தேடுகிறேன்
நிலவின் குளிர்ச்சி
இரவுக் காற்றின் மனத்தோடு
மீண்டும் ஒரு முறை
அந்தக் குறுஞ்செய்தியை வாசித்தபின்
உறங்கப்போகிறேன்

நன்றி: அகநாழிகை