மை சாரா

இன்று காலை 7.30க்கு மின்தூக்கியில் அலுவலக பணிக்குச் செல்லும்போது அந்த சீனக் குழந்தையை சந்தித்தேன். பெயர் மைசாரா என்றாள்,  தெய்வத்திருமகள் திரைப்படதில் வரும் குழந்தையின் சாயலைகொண்டிருந்தாள். என் வீட்டிற்கு மேலே உள்ள ஒரு தளத்தில் ஏதோ ஒன்றில் தான் அவள் வசிக்கிறாள்நான்கு மாதகாலமாக இதே நேரத்தில் அலுவலகம் செல்லும் நான் இன்றுதான் அவளை சந்தித்தேன். என்னுடைய பெயரை சொன்னேன் புன்னகைத்தாள். வீட்டைவிட பள்ளியில்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினாள். அங்குதான் அவளுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாலாம்,  அவளோடு பள்ளிவரை சென்று வர ஆசையிருந்தும் அவளை புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணமிருந்தும் நான்கு மாதத்திற்கு பிறகு சந்திக்கும்  அந்தநாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு கார் நிறுத்தம் நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

மை சாரா என்னை ஞாபகம் வைத்திருக்க கூடும்……

இவானும் நேற்றிரவும்

 

நேற்றிரவு
நீண்ட நாட்களுக்கு பின்பு
அவள் கனவில் இவான்
தலையணையை அணைத்து
தூங்கிக்கொண்டிருந்தாள்
தலையை மெல்ல வருடி
நெற்றியில் ஒரு முத்தம் இட்டான்
கண்களை சுருக்கிக்கொண்டு புரண்டு படுத்தவள்
நாய்குட்டி பொம்மையை தள்ளிவிட
விழித்துகொண்ட நாய்க்குட்டி
இவான் மீது தாவி குதித்தது
அவளுக்கான செய்திகளை
நாய்குட்டி பொம்மையிடம்
சொல்லிக்கொண்டிருக்கையில்
வ்வ்வ்வ் என்ற ஒலி எழுப்பி
நாய்குட்டி பொம்மை
தனக்கும் தூக்கம் வருவதாக சொன்னது
தட்டிக்கொடுத்து
அவள் கைகளுக்குள் பத்திரப்படுத்தினான்
அவளும் நாய்க்குட்டியும்
உறக்கத்தில்
தனிமையில் துன்புற்ற இவான்
தலையை மெல்ல வருடி
அவள் இதழ்களை  ஈரப்படுத்த
கண்களை சுருக்கிக்கொண்டு

நாய்க்குட்டியை இறுக அணைத்துக்கொண்டாள்
வ்வ்வ்வ் என்ற ஒலி எழுப்பிய

நாய்க்குட்டி

ஆழ்ந்த உறக்கத்தில்
மிச்ச செய்திகளுடன் இவானும் உறங்கப்போகிறான்
அவள் வரும் கனவொன்றில்

 

©pandiidurai@yahoo.com