உயிர் எழுத்து
(ஏப்ரல்-09)
படைப்பிலக்கியத்தை முதன்மை படுத்தி தமிழகத்திலிருந்து வெளிவரும் “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியர் எழுத்தாளர் சுதீர் செந்தில் அயலக வாசிப்பாளர்களை அதிகரிக்க வேண்டிய எண்ணத்தில் ஒரு வார மலேசிய சுற்றுப்பயணமாக ஏப்ரல் மாதம் வந்திருந்போது ஒரு நாள் மாலைபொழுதை சிங்கப்பூர் வாசகர் வட்டம் நண்பர்களுகளுடன் ஆங் மோ கியோ பொது நூலகத்தில் பகிர்ந்துகொண்டார்.
“உயிர் எழுத்து” வெளிவந்ததன் காரணம், அதன் பின் திறந்துகொண்ட சிறுகதைக்கான வெளி, இதன் வழியே இன்னும் பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க சிறந்த எழுத்தாளர்களை நாம் கண்டையக்கூடும் என்பதையும் சொல்லி, இதழ் பற்றிய வாசக எண்ணங்களை அறிவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.
கவிதை குறித்தான கருத்தரங்கில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், இன்று எழுதிக்கொண்டிருக்கும் கவிதைகளுக்கு சமீபத்தில் மறைந்த கவிஞர் அப்பாஸ்-ன் பங்களிப்பு மிக அதிகம் என்றுரைத்தார்.
நிகழ்வில் மலேசிய மூத்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது உடன், சிங்கப்பூர் எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் என மிகச் சிலரே கலந்துகொண்டது வாசகர் வட்ட வாசிப்பின் தீவிரத்தை குறைப்பதாகவே தோன்றியது.