வீடு தேடி வரும் கோலம் – ஞாநி

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

ஞாநி

– ஞாநி- யின் சிங்கப்பூர் வருகைக்கு + ஓ போடுவோம்

 

gnani_home_img1

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாட்டில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் கலந்து கொள்ள ஏப்ரல் 10-ன்று அன்று, வெகுஜனப் பத்திரிக்கையில் கலகக்குரல் எழுப்பி வரும் ஞாநி சிங்கப்பூர் வருகிறார். முத்தமிழ் விழா மற்றும், நண்பர்கள் ஏற்பாடு செய்யும் சந்திப்புகளில் இரு தினங்கள் கலந்துகொள்கிறார். ஏப்ரல் 15 அன்று மலேசியா சென்று அங்கு சில நாட்கள் தங்கவிருக்கும் இவர், இவ்விரு நாடுகளில் உள்ள இலக்கிய எழுத்தாளர்கள் வாசகர்களை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

 

ஊரில் இருந்த காலகட்டத்தில் வீட்டில் ஆவியும் ஜீவியும் அப்பா பிடித்துவருவார் (அக்கா தம்பி போட்டியில் படிப்பதற்கு முன்னுரிமை எனக்குத்தான்) . பின்னர் நான் கர்நாடகா மாநிலத்தில் ஹாசன்னில் பணிபுரிந்த காலகட்டத்தில் வாசிப்புக்கு துணையிருந்தது தினத்தந்தியுடன் ஆவி ஜீவி தான். சிங்கப்பூர் வந்து எழுத ஆரம்பித்த பின்னர் ஆவி புடிப்பதை நான் விட்டாலும் எனது சகோதரன் புண்ணியத்தால் டிசம்பர்-08 வரை புடிக்க முடிந்தது. இடை பட்ட காலத்தில் ஞாநி ஆவியில் இருந்து விலகி குமுதம் இதழுக்கு எழுத ஆரம்பித்தது தற்செயலாகத்தான் தெரியும், ஞாநி குமுத்திற்கு மாறிய ஆச்சிரியத்தை கண்டடைய கைப்பற்றிய அந்த குமுதம் இதழ் பற்றி வேறொரு பதிவு போட்டிருந்தேன்.

 

அதை படிக்கனும் நினைச்சா இங்க கிளிக்குங்க.

 

ரோபாவின் முன் . என்னுள்ளே

 

இப்ப ஆவி குமுதம் எப்பவாவது நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் படிப்பதுண்டு. ஞாநி பாமரன் என்று இணையபக்கத்திற்கு வந்தமை ஞாநியை மட்டும் வாசிக்கும் வெகுஜனபத்திரிக்கைக்கு இழப்பாக இருந்தாலும் இணையப் பரிச்சயம் இணையவசதி என எடுத்துக்கொண்டால் சொற்பமான எண்ணிக்கைக்கு முன் பத்திரிக்கை விற்பனை ஒன்றும் பாதாளத்திற்குள் சென்றுவிடாது(இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு).

 

ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் என்போன்றவருக்கு ஞாநியின் இந்த வருகை (சிங்கப்பூல் + இணையம்) ஒரு கொண்டாட்டம் தான்.

 

குட்டு : கடந்த ஆண்டு கண்ணதாசன் விழாவில் ஒரு நாட்டுப்பாடலை பாடி முடித்தபின் பேசிய பேச்சிற்காக திரைப்பட நடிகை ஆச்சி மனாகரம்மாவிற்கு

 

சொட்டு: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு

 

பூஞ்செண்டு: இன்று காலை என்னை தொடர்பு கொண்ட முதல் அழைப்பில் என்ன பாண்டி தூங்கிட்டியா? தொந்தரவு செய்திட்டேனா? எனும் வினவலுக்கு பின் ஞாநியின் வருகை பற்றிய செய்தியை சொன்ன எழுத்தாளர் சித்ரா ரமேஷ்அவர்களுக்கு.

 

ஞாநியின் இணையப்பக்கம்: http://www.gnani.net

ஞாநியின் வருகைக்கு

போடுவோம்

 

குறிப்பு: ஞாநியின் சிங்கப்பூர் வருகை பற்றிய அழைப்பிதழ் இனிமேல் தான் எனக்கு வரும் என்பதால் நிகழ்வு குறித்த தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.