வண்ணநிலவன் + தி ஜானகிராமன் ( வாசகர் வட்டம் )

அன்புள்ள நண்பர்களுக்கு,

ஆக்ஸ்ட் மாதம் வாசிப்பை நேசிப்போம் மாதம்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நூலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டக் கதைகள் அம்மா வந்தாள் – தி ஜானகிராமன் கடல்புரத்தில் -வண்ணநிலவன் இந்த இரு நூல்களையும் படித்து ஒரு விமர்சனக்கட்டுரை, அல்லது புனைவுகளைப் பற்றிய ஒரு பார்வை, எழுத்து நடை, இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள், இவர்களை முன்னிறுத்தி பெண்ணீயம் போன்ற கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் அனைத்து நூல் நிலையங்களிலும் கிடைக்கின்றன.நிறையப் பிரதிகள் இருக்கின்றன. ஆகையால் இவற்றைப் படித்து கட்டுரைகளுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.கட்டுரைகள் படைக்கவில்லையென்றாலும்

ஒரு பார்வையாளராகவோ ஒருவாசகராகவோ கலந்து கொள்ளலாம். கட்டுரைகள் படிக்கப்படும் போது அவை குறித்தான கருத்துகள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் புத்தங்களைப் படித்து வந்தால் சிறப்பு!!!!

நிகழ்ச்சி: வாசகர் வட்டம்

இடம்: அங் மோ கியோ நூலகம்

அறை: டொமேட்டோ அறை (முதல் மாடி)

நேரம்: மாலை 5.00 மணி நாள்: 15-8-2010 ( ஞாயிற்றுக் கிழமை)

வாசகர் வட்டம் எந்த தலைமையும் இல்லாமல், எந்த அமைப்பையும் சாராமல் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி! எனவே இலக்கியப் பரிமாற்றம் என்ற ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும் என்ற விருப்புடன் மற்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறக்கணித்து விட்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று

வாசகர் வட்டம் சார்பாக அழைப்பது

அன்புடன் சித்ரா