சை.பீர்முகமது – ப.கா வா.கோ – சில புகைப்படங்கள்

22.02.09 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தங்கமீன் பதிப்பகத்தால் வெளியிடபட்ட மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமுதுவின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் புகைப்படம்.

 

s8 நண்பர் பாத்தேறலுக்கு ஜோதி மாணிக்கவாசத்திற்கு சிறப்பு செய்கிறார் ஆசிரியர். தென்றல் ஆசிரியர், கோ.புண்ணியவான்.

s9தென்றல் ஆசிரியருக்கு நினைவுப்பரிசு, முனைவர் ரெத்தினவேங்கடேசனுக்கு நினைவுப்பரிசு, ஜோதி மாணிக்கவாசத்திற்கு நினைவுப்பரிசு.

s1

ஜோதி.மாணிக்கவாசகம், கவிஞர் அமலதாசன், தங்கமீன் பதிப்பகம் பாலுமணிமாறன்.

s2விழாவிற்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதியினர், முதல் பிரதியை பெருகிறார் புதுமைத்தேனீ மா.அன்பழகன், எழுத்தாளர்கள் சை.பீர்முகமது.

s3எழுத்தாளர் கோ.புண்ணியவான், புரவலர் முஸ்தபா, பள்ளி மாணவன் எழுத்தாளர்  கே.பாலமுருகன்.

s4மலேசிய எழுத்தாளர்களால் புரவலர் போப்ராஜ் அவர்களுக்கு நினைவுபரிசு வழங்கப்படுகிறது, வலைபதிவர்கள் கோ.வி கண்ணன் & ஜோ (அவர் திரும்பி இருப்பதால் மிச்சப் பெயரை நீங்க கண்டுபிடிங்க)

s5கவிஞர் அழலதாசனுக்கு நினைவுப்பரிசு, பாடகர் குணசேகரன், நூல் வெளியீடு.  

s7கே.பாலமுருகனுக்கு நினைவுப்பரிசு, கோ.புண்ணிவானுக்கு நினைவுப்பரிசு, தென்றல் ஆசிரியர் வித்யாசாகர்.

s6ஆர்வமாக கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு எழுத்தாளர் புத்தகம் பரிசளிக்கப்படுகிறது, விழா மேடையில், சை.பீர்முகமது கோ.புண்ணியவான்.

‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’

சிங்கப்பூர் எழுத்தாளர் பாலுமணிமாறன்-ன் தங்கமீன் பதிப்பகம் வெளியீடாக மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது-வின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை தொகுப்பு 22.02.2009 அன்று சிங்கப்பூரின் தேசிய நூலகவாரியத்தின் ஆதரவுடன் தேசிய நூலகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது. சிறு தீவுக்குள் பிளவுபட்ட பல்தமிழ் அமைப்புகளின் தேடல் என்பது மிகமிக குறைவு. அதுவும் மாற்றுச் சிந்தனை என்றால் என்ன என்ற கேள்விகளுடன், தமிழ் தமிழ் என்ற ஒருமுகசிந்தனையில் பன்முக படைப்பாக்கும் திறன் அற்றவர்களையாவது உருவாக்குமா என்றால் என்னத்தை சொல்ல என்பதே என்னிலிருந்து பதிலாக வெளிப்படும்.  தமிழ்முரசு நாளிதழ் ஒன்றே ஆகப்பெரிய முதலும் கடைசியுமான இலக்கிய இதழாக நம்பிக்கொண்டும், ஜெராக்ஸ் தொணியிலான கவிதையும் அதனையும் கடந்த எழுத்து பிரபஞ்சத்தை என்னவென்றும் கேட்பதற்கும்,  விமர்சன களமற்ற எழுத்தாளர்களுக்கு  மத்தியில்,  ஒரு கதைசொல்லி முடிக்கும் முன் கடந்துவிடக்கூடிய தூரமாக இருக்கும் மலேசியாவின் எழுத்தாளர்கள் வருகை சிங்கப்பூருக்கு அவசியமான ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது.

 

உங்களுக்கும் தோன்றினால்

வாருங்கள்

பயாஸ்கோப்காரனையும் வான்கோழியையும் கண்டடைவோம்

 

பாண்டித்துரை

inv-front-rev

inv-back

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒரு கவிதைப்பயணம்!

 

 

navarasam20end

கோடம்பாக்கத்து சினிமா குத்துக்களிலிருந்து விலகாமல் தமிழ்தொலைக்காட்சிக்கான அடையாளங்களை தக்கவைத்திருக்கும் சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சி, தமிழ்சேவைக்கான பண்பலையை சமீபத்தில் அதிகரித்து வண்ணத்திரை என்ற புதிய தொலைக்காட்சி சேவையை தொடங்கியிருக்கிறது. ஆனால் என்னைப்போன்று தொழிற்பேட்டையில் தங்கி பணிபுரிபவர்களால் வண்ணத்திரையை காணவியலாது என்பது பெருத்த வருத்தமாக ஒன்றும் இருக்காது, திரைக்குவரும் அன்றே தங்குதடையின்றி கிடைக்கும் கள்ள தமிழ்சினிமா வட்டுக்களால்.

 

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் தமிழ் எழுத்து இலக்கியத்திற்கான வெளி மிகச்சிறியது. சமீபகாலமாக நம்மைசுற்றி நாம் என்னும் நிகழ்வு வழியே கொஞ்சம் தொட்டுச்செல்கிறது. மற்றபடி தமிழக இலக்கிய ஆளுமைகள் வருகின்றபோது செய்திகளுக்கு இடையே கொஞ்சம் முகம்காட்டும். மேலும் சிங்கப்பூரில் பிரபலமான எழுத்தர்கள் நூல்வெளியிடும்போது கொஞ்சம் அவர்களின் நூல்பற்றிய பேச்சு என்று முடிந்துவிடும். இந்தியாவில் மொழி சார்ந்து அதிக எண்ணிக்கையில் இயங்குவது தமிழ் தொலைக்காட்சிகள் தான். அங்கேயே இலக்கியத்திற்கான இடம் என்று பார்க்கும்போது சமீபத்திய வருகையான மக்கள்தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியால் கொஞ்சம் அடையாளபடுத்தபட்டுள்ளது. அப்படி இருக்கையில் கோடம்பாக்கத்து சின்னத்திரையை ஜெராக்ஸ் செய்யும் வசந்தம், வண்ணத்திரையில் நாம் பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது.

 

ஆனால் இங்கு நடைபெறும் சின்ன சின்ன நிகழ்வுகள் சிறிய மகிழ்ச்சியை தருகின்றது. அப்படி சமீபத்திய நிகழ்வுதான் நவரசம். மனிதனின் ஒன்பதுவிதமான உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் இசை, நடனம் மற்றும் கவிதை என்ற மூன்று கலவையில் ஜனவரி 21 தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமை மாலை 8.00 மணியிலிருந்து 8.30மணியளவில் மார்ச் 25 வரை தொடரவிருக்கிறது.

 

கவிதையை எடுத்துக்கொண்டால் பயம், கோபம், அருவருப்பை உள்ளடக்கிய ஒன்பது உணர்வுகளையும் ஆண்கவிஞர் ஒருவர் பெண் கவிஞர் ஒருவர் பிரதிபலிக்கின்றனர். இங்கு பல்வேறு கவிஞர்களை அடையாளப்படுத்திய கவிமாலை அமைப்பினால் கண்டடைந்த கவிஞர்கள் பலர் இந்த நவரசத்தில் ஒரு ரசத்தை எழுதி வாசித்துள்ளனர். சிங்கப்பூர் எழுத்தாளரான பாலுமணிமாறன் இந்த நவரசத்தில் கவிஞர்களை ஒருங்கிணைப்பதிலிருந்து அவர்களைப்பற்றிய குறிப்புகளை எழுதுவதில் தொடங்கி, ஒரு ரசத்தை எழுதி வாசித்ததுடன் கவிதைக்கான பணிமுழுமையையும் மேற்கொண்டுள்ளார். ஒரு நாள் முழுமைக்கும் இருந்து ஒளிப்பதிவினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், ஒரு குழந்தைக்கு கிடைத்த புதிய விளையாட்டு களமாகத்தான் எனக்கு தோன்றியது. அங்கு கவிதை வாசித்த ஒவ்வொருவரும் புதிதாய் ஏதோ ஒன்றை கட்டமுற்பட்டதை சிரிப்பினூடாக பார்த்துக் கொண்டிருந்தேன். அருவருப்பு என்னும் ரசத்தில் உயிர் வலியின் உச்சரிப்பை கொஞ்சம் கவனமாக கேளுங்கள் என்று தொடங்கும் நான் எழுதி வாசித்த கவிதை மார்ச் 11 (புதன்கிழமை) அன்று 8.00 – 8.30 மணியளவில் ஒலிபரப்பாகிறது.

 

நவரசம் நிகழ்ச்சி நடைபெறும் நாட்குறிப்பு (Telecast Dates)

 

 

Ø       Episode 1- Introduction of Navarasas by performing artists – January 21

Ø       Episode 2- Sringara – காதல் – January 28

Ø       Episode 3- Hasya – நகைச்சுவை – February 4

Ø       Episode 4- Karunyam 3 – கருணை – February 11

Ø       Episode 5- Roudram – கோபம் (ரௌத்ரம்) – February 18

Ø       Episode 6- Veeram – வீரம் – February 25

Ø       Episode 7- Bhayanaka – பயம்  – March 4

Ø       Episode 8- Bhibhastsa அருவருப்பு – March 11

Ø       Episode 9- Adbhuta  அற்புதம் – March 18

Ø       Episode 10- Shantam – அமைதி (சாந்தம்) – March 25

 

நன்றி வசந்தம் தொலைக்காட்சி, பாலுமணிமாறன் & team of Navarasam.