மேதகு வே.பிரபாகரன் சில வரிகள் – 2

தலைவரின் சிந்தனைகள் என்ற புத்தகத்திலிருந்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உதிர்த்த சில சிந்தனைத்துளிகள்

 _40685781_203prab-ap

 

  • இந்திய  இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில் வெற்றிதோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன. தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

 

  • உண்மையில் எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது எமது கையில் எமது பலத்தில் எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நீதியும் நியாயமும் எமது பக்கமாக இருந்தால் மட்டும் போதாது நாம் வலிமைபெற்றவர்களாக இருக்க வேண்டும். போராடும் திறமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். தளராத உறுதி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

 

  • தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகவழிகாட்டியாகதிகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

 

  • இந்தியாவின் இராணுவத் தலையீடும் ஆதிக்க விஸ்தரிப்புக்கொள்கையும் பயமுறுத்தல்களும் தென்னாசியாவின் சிறியபலங்குன்றியநாடுகளின் சமாதானத்திற்கும் ஸ்திரநிலைமைக்கும் பங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.

 

  • தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை. அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும் உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் எதிர்பாராமல் இருக்கவில்லை. இந்தச் சவால்கள் எழுந்த போதெல்லாம் நாம் அதைத் துணிந்து எதிர்கொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும் நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை. ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.

 

 

வே.பிரபாகரன்

நூல் – தலைவரின் சிந்தனைகள் (1995)

 

 

 

 

மேதகு வே.பிரபாகரன் சில வரிகள்-1

_40685781_203prab-ap

தலைவரின் சிந்தனைகள் என்ற புத்தகத்திலிருந்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உதாத்த சில சிந்தனைத்துளிகள்

 

1.       நான் பெரிது

நீ பெரிது என்று

வாழாமல் நாடு

பெரிதென்று

வாழுங்கள். நாடு

நமக்குப் பெரிதானால்

நாம் எல்லோரும்

அதற்குச் சிறியவர்ளே

எமது நிலையற்ற

வாழ்விலும் பார்க்க

நாட்டின் வாழ்வே

பெரியது.

பக்கம்-74

 

2.       தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை; அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக, எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாத்து அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும், உலக வல்லரசுகளின் கேந்தில இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும், நாம் எதாபாராமல் இருக்கவில்லை. இந்த சவால்கள் எழுந்த போதெல்லாம் நாம் அதை துணிந்து எதாகொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும், நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை;  ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.

பக்கம்-66

 

3.       இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில், வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை இந்த; யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

பக்கம் – 15

 

4.       ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல; அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு; ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

பக்கம் – 13

 

5.       எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீர்ர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகஆவ எமது தாயின் மடியில் அவாகளைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி,  காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.

பக்கம் – 71

 

 

வே.பிரபாகரன்

நூல் – தலைவரின் சிந்தனைகள் (1995)