புதுகை அப்துல்லாவின் வருகையும் என் முதல் பதிவர் சந்திப்பும்

pag

1, 2, 3. புதுகை அப்துல்லாவின் புன்னகைதுளிகள்
4. விடைபெறும் ஜெகதீசன் புதுகை அப்துல்லா
5. கிரி முன் பவ்யமாக புதுகை அப்துல்லா

 pudugaitamil.blogspot.com

சிங்கப்பூர் வலை பதிவர்கள் சந்திப்பு சில வருடங்களாக நடக்கிறது. நேரமின்மையும் தொடர்ச்சியான வலைப்பக்க வாசிப்பின்மையாலும் கலந்துகொள்ளவியலாமல் இருந்தது. புதுகை அப்துல்லாவின் சிங்கப்பூர் வருகையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு சந்திப்பில் கடந்த ஞாயிறு 12.01.09 அன்று கலந்துகொள்ள நேர்ந்தது.

செந்தில்நாதனும், ஜெகதீசனும் நிகழ்வு தொடங்கும்முன்னே விடைபெற்றனர். ஜெகதீசன் கொண்டுவந்திருந்த இனிப்பினை (அல்வா சாமியோவ்) சுவைக்க நேர்ந்தது. நிகழ்வு பற்றிய அழைப்பில் குறிப்பிட்டிருந்த மங்களவிளக்கேற்றுதல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை, புரியவில்லையும்கூட, அந்த நேரத்தில் மறந்துவிட்டேனும்கூட. டொன்லீயின் சந்திப்பு பற்றிய பத்தியினை படிக்கும்போதுதான் பளிச்சிட்டது. நிகழ்வில் பெரியவாள், கோவியார் என்று சில பதிவர்கள் பூங்காவினை இரு சுற்றி வந்ததை நிகழ்விற்கான அரங்க தேர்வு என்று நினைத்துவிட்டேன். அடுத்த சந்திப்பில் ஜோதியில் ஐக்கியமாகவேண்டும் ஆனால் லக்கிலுக்கின்  வலைபதிவில் உள்ள இந்த வரிகள் “நான்கு பேர் குடிக்கும் இடத்தில் ஐந்தாமவன் ஒருவன் குடிக்காமல் வேடிக்கை பார்ப்பது என்பதே வன்முறைதான்” ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது உடன் எனது கல்லூரி தோழனான ஜீனியர் முரளியும்.

விக்கி என்ற விஜய் ஆனந்தும், முகவை ராம், அதிரை ஜாமாலும் கொஞ்சம் தாமதமாக கலந்துகொண்டனர். விக்கியின் விழியின் முன் பலர் சரண்டர் ஆகியிருக்ககூடும். புதுகை ராம்மிடம்தான் அதிக நேரமாக பேசிக்கொண்டிருந்தேன். என்னைபற்றியும் அவரைப்பற்றியுமான எழுத்து வலை என்று பின்னிச்சென்றது.

புதுகை அப்துல்லாவை பேசச் சொல்லியவுடன் அபுதாபி 2 சிங்கப்பூர் தொடரும் அதிரை ஜமாலுடனான நட்பின் தொடக்கத்தில் தொடங்கி வலைஉலகின் நுழைவு, அதே நேரத்தில் இயங்கதொடங்கிய 45ற்கும் மேற்பட்ட வலைபதிவர்களின் பயணங்கள், சமீபத்திய பரபரப்பான பட்டாம்பூச்சி விருது, சென்னை வலைபதிவர்கள் சந்திப்பு, திரட்டி பற்றிய பகிர்வு, வலைபதிவர் நர்ஸீமின் பதிவான அப்பா பேருந்து நிலையம், மகன் விமானநிலையம் (ஒப்பீட்டிலான சிறுகதை என்று நினைக்கிறேன்) என்ற சில நிமிட பகிர்வே போதுமானதாக இருந்தது முகமறிய நண்பரின் முதல் சந்திப்பில்.

வலைபதிவின் தொழில்நுட்ப பிரச்சினைகளையும் ஒருவொருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். எனக்கான சந்தேகங்களை டொன் லீ, கோவியார், கிரி என்று இனிமேல்தான் சார் நீங்க கேளுங்களே, சார் நீங்க கேளுங்களே சார் நீங்க கேளுங்களே (இந்த இடத்தில் பொல்லாதவன் கருணாஸை நினைத்துகொள்ள வேண்டும்) என்று……… அவர்களுக்கு நான் பொல்லாதவன் ஆகக்கூடும்!

 இந்த சந்திப்பு பற்றி ஏற்பாட்டிற்கு முக்கிய காரணகர்த்தாவாக கோவி.கண்ணன் மற்றும் ஜோசப் பால்ராஜ் இருக்ககூடும் என்று நினைக்கிறேன் நிகழ்வின் முடிவிற்கு பின் தாக சாந்திக்காக (பச்சை தண்ணிங்ண்ணா) நிசமா நல்லவனின் வருகைக்காக காத்திருந்தோம் காத்திருந்தோம் …….. அவரு நிசமா நல்லவராங்க! (நம்புங்க நிசமா நல்லவருதான் டாக்சி கிடைக்காம காத்திருந்திருக்கிறார்)

நிசமா நல்லவரின் டாக்சிக்கான காத்திருப்பின் இடம் நோக்கி பதிவர்கள் நகர எனது வேறு ஒரு நிகழ்வினால் நிசமா நல்லவன் உள்ளிட்ட சிலரை பார்க்கமுடியவில்லை. ஓர் ஆச்சர்யம் கடந்த சில சந்திப்புகளில் நண்பர் அகரம் அமுதாவும் கலந்து கொண்டு சில மீட்புருவாக்க ஞாபங்களை பதித்து சென்றது (எங்கிட்ட சொல்லவே இல்லைங்க) ….. பயணங்களின் தொடர்ச்சியாய் இனி முகமறியா நண்பர்களை சந்திக்ககூடும் அவர்கள் விட்டுச்செல்லும் புன்னகையை மீட்டெடுப்பதற்கு.

பாண்டித்துரை

அபுதாபி – சென்னை – சிங்கப்பூர்

 

பயணத்தின்

திசைகள்

மாறிக்கொண்டே இருக்கின்றன

ஆனால்

பயணம்?

 

 

தொடரும் நட்பு

page111

அதிரை ஜமால் + புதுகை அப்துல்லா  

(11.01.2009 புதுகை அப்துல்லா சிங்கப்பூர் சிறப்பு பதிவர் சந்திப்பில்)