திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு

சென்னை: திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில் இலவசமாக மிக்சி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம், ஆடு மாடு தருகிறோம், தண்ணீர் தருகிறோம், இலவச பஸ் பாஸ் தருகிறோம் என்று சரமாரியாக இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர்.

 தமிழகத்தின் இந்த அரசியல் இலவச அறிவிப்புகள் நாடு முழுவதும் பரபரப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை இலவச நாடு என்று வட இந்திய மீடியாக்கள் கிண்டலடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவது போல அமைந்துள்ளது சில கட்சிகள் அறிவித்துள்ள இலவச அறிவிப்புத் திட்டங்கள். இந்த இலவச அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தேர்தல் முடிவுகளையும் நிறுத்தி வைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

வழக்கு தொடர்ந்துள்ள டிராபிக் ராமசாமி தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்

வரலாற்றுக்குள்ளே தேடு. அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.

விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.

————————————————————————————————————————-

நொடியில் நொறுங்கியவனுக்காக……

http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html

5 thoughts on “திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு

  1. செல்வராஜ் சொல்கிறார்:

    இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை . கட்சிக்காக மட்டுமே அரசியல் செய்கின்றனர் . மக்களுக்கு நல்லது செய்ய என்று யாரும் இல்லை . காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போனால் தான் இந்தியாவிலிருந்து ஊழலை ஒழிக்க முடியும் . இந்த இரு திராவிட கட்சிகளும் இல்லாமல் போனால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் . அதுவரை நம் கதி ?

  2. jawahar சொல்கிறார்:

    kevalam

  3. balu சொல்கிறார்:

    Good start. Well done sir.

  4. இலவச அரிசி, பருப்பு, மிக்ஸி, கிரைண்டர், தருவதற்கு பதில் பேசாமல் மூணு வேளை சாப்பாடையும் இலவசமா கொடுத்துட்டா அம்புட்டு பேரும் இன்னும் மகிழ்ச்சியா இருப்போம்ல! அதையும் வீடு வீடா வந்து கொடுத்துட்டா இன்னும் நல்லாயிருக்கும். அடுத்த தேர்தலில் இதை எதிர்பார்க்கலாம். பார்ப்போம்.

  5. பாண்டித்துரை சொல்கிறார்:

    hai chitirai vedikaran

    tks for ur reading and feedback

பின்னூட்டமொன்றை இடுக