உயிரோசை சில கவிதைகள்

 

நாதஸ்வர சப்தத்தோடு
கலைஞரின் வாழ்த்துச்செய்தியை
ஏந்தி வந்த கூட்டத்தை
திரும்பிப் பார்த்தவர்கள்
கவனிக்கத் தவறியிருக்கக்கூடும்
வாய்பொத்தி சிரித்து வந்த
சிறுமி ஒருத்தியையும்
அவளை ஒத்த சிறுவனாக மாற
வாய்பொத்தி சிரித்த என்னையும் 

——————————————————————–
ஒரு வேப்பமரமும்
வெள்ளம் சிதைத்த வீடொற்றின்
நவீன பக்கத்தில்
நின்று கொண்டிருக்கிறோம்
மகிழ்ச்சியாக இருக்கலாம்
வேப்பமரம் வெட்டப்பட்ட கனத்தையும்
வெள்ளம்  சிதைத்த சுவற்றின்
மிச்ச செங்கற்களை உருவிய பொழுதையும்
நினைக்காது இருக்கும் வரை

 நன்றி:உயிரோசை.காம்

ஏதாவது செய்

ஏதாவது செய்   –   கவிஞர் ஆத்மாநாம்

 

ஏதாவது செய் ஏதாவது செய்

 உன் சகோதரன்

பைத்தியமாக்கப்படுகிறான்

உன் சகோதரி

நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்

சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ

ஏதாவது செய் ஏதாவது செய்

கண்டிக்க வேண்டாமா

அடி உதை விரட்டிச் செல்

ஊர்வலம் போ

பேரணி நடத்து

ஏதாவது செய் ஏதாவது செய்

கூட்டம் கூட்டலாம்

மக்களிடம் விளக்கலாம்

அவர்கள் கலையும்முன்

வேசியின் மக்களே

எனக் கூவலாம்

ஏதாவது செய் ஏதாவது செய்

சக்தியற்று செய்யத் தவறினால்

உன் மனம் உன்னைச் சும்மா விடாது

சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை

பேடி என்றும்

வீர்யமிழந்தவன் என்றும்

குத்திக் காட்டும்

இளிச்சவாயர்கள் மீது

எரிந்து விழச் செய்யும்

ஆத்திரப்படு

கோபப்படு

கையில் கிடைத்த புல்லை எடுத்து

குண்டர்கள் வயிற்றைக் கிழி

உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்

தின்று கொழிப்பவரை

ஏதாவது செய் ஏதாவது செய்

 

நன்றி:ஆத்மாநாம்

பாண்டியன் தட்டச்சு செய்யட்டும்

பிழைதிருத்துபவர்

வரத்தவறிய ஒருநாளில்

பாண்டியன்

பாரதிதாசனை தட்டச்சுசெய்திருந்தான்

எல்லோரும் பார்க்க தட்டச்சை

சில பிரதிகள் எடுத்து விநியோகித்ததில்

பாரதிதாசன்

பாதிதாசானாக மாறியிருந்தான்

பாதிதாசனை அறியாதா பாண்டியன்

செத்தொழியும் நாளெனுக்கு திருநாளாக

எம்பெருமான் முருகப்பெருமானை வேண்டிநிற்க

அருள்பாளித்தார்

தினையளவு நாட்டினில்

“தீ” யளவும் பயிராகா

பாண்டியன் தட்டச்சுசெய்யட்டும்

பாதிதாசைனையும்

பாவிதாசனாக

இ-ஊரானை நப்புக்காட்ட

ஊரானை ஒப்புக்காட்டி

நடக்கும் நடக்கும் நடக்கும் நடக்கும்

மக்கள் முன்னே

பாண்டியன் தட்டச்சுசெய்யட்டும்

பாரதியாரையும்

பாறையாக

பறையாக

எம்பெருமான் முருகப்பெருமான் அருள்பாளித்தார்

பாண்டியன் தட்டச்சுசெய்யட்டும்

©pandiidurai