உயிர் எழுத்து (செப்டம்பர்2010) இதழில் சில கவிதைகள்

1. சிகப்பு விளக்கு சமிக்கையில் …
நிறுத்தப்பட்ட வாகன ஓட்டுனர்களை
ஈர்த்து விடுகிறாள்
ஸ்டாப் சிக்னல் காட்டி
எதிர்புறத்தை சென்றடையும் சிறுமி

2. சின்னா வாம்மா
சக்தி மாமாம்மா
பூச்சாண்டி பேசறாங்களாம்
அந்த வீட்டின் தொலைபேசி அழைப்புகளுக்கு
ஒரு சிறுமி பதிலளிக்கிறாள்

3.
6-மாத இடைவெளிக்குப் பின்
இளாவைச் சந்தித்தேன்
2½ வயதைக் கடந்திருந்தால்
…புத்தகப்பையை சுமந்து கொண்டு
புளோக்கின் தரைத் தளத்தினுள் சுற்றத் தொடங்கியவள்
நீதி என்று பெயர் சொல்லி அழைக்கவும்
வாடா போடா
வார்த்தை விளையாட்டையும் கற்றிருந்தாள்
ஓடுவதற்கும்
பதுங்கிக் கொள்ளவும்
கற்றுத் தருகிறாள்

4.
எவ்வளவோ முயற்சித்தும்
முடியவில்லை
அவளால் முடிகிறது
வணக்கம்
ஜெகஜோதி பேசறேன்

5.

ஒவ்வொரு வீட்டின்
தொலைபேசி அழைப்புக்களை
ஒரு சிறுமி திறக்கிறாள்
உடன்
…பேசும் மொழியையும்

நன்றி: உயிர் எழுத்து,  ஜெகஜோதி &  இளமுகில்

புதிதாய் இரண்டு முகங்கள்

29.08.2010 அன்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 20வெள்ளி கட்டணத்தில் திரு.பிரபஞ்சன் பயிற்றுவித்த அரைநாள் (இந்த அரை சரியா) (இல்லை இந்த அறை சரியா) (அறையில் நடந்ததால் உங்களின் வசதிக்கான 1/2  போட்டுக்கொள்ளுங்கள்) சிறுகதை பயிலரங்களில் கலந்துகொண்டேன். சிறுகதை பயிற்சிக்கு  புதிதாக இரண்டு இரண்டு முகங்களோடு, இரண்டு இரண்டு எழுத்தாளர்கள், இரண்டு இரண்டு வாசகர்கள், இரண்டு இரண்டு மாணவர்கள், இரண்டு இரண்டு ஆசிரியைகள், இரண்டு இரண்டு கவிஞர்கள், இரண்டு இரண்டு மனிதர்கள் என இரண்டு இரண்டாய் வந்திருந்தனர்.
 
என்னை நானே பார்த்துக்கொண்டேன்.  ஒரு முகம் அறைக்குள் நுழைந்ததும் கர்மசிரத்தையாக கவனிப்பது போன்ற தோற்றத்துடன் பிரபஞ்ச அசைவுகளை உற்று பார்த்துக்கொண்டிருந்தது. இன்னொரு முகம் கொஞ்சம் காபி கொடுத்தால் தேவலாம் போல இருக்கு atleast ஒரு வாட்டர் பாட்டில்… ம்கூம் அடுத்த முறை வரும்போது பிடித்துக்கொண்டே வந்துவிடவேண்டும் என்று உறங்கி உறங்கி எழுந்துகொண்டிருந்து. இல்லை எழுதிக்கொண்டிருந்தது
 
ச்சேய் ஒரு அருமையான நிகழ்வினை தவறவிட்டுவிட்டோமே 20 வெள்ளி கட்டி உறங்கிக்கொண்டிருக்கிறோமே நேற்று ஒரு 2 வெள்ளி செலவு செய்திருந்தால் உறங்காமல் இருந்திருப்பேனே…
 
ஒரு நல்ல எழுத்திற்கு, அது என்ன நல்ல எழுத்து? நியாமான எழுத்திற்கு, அது என்ன நியாயம்? என்றெல்லாம் பேசினார்கள் என்று, சிறுகதை பட்டறை ஆரம்பத்திற்கு முன்னும்,  முடித்தபின்னும் பேசிக்கொண்டிருந்தனர்.  நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
 
நூலக அதிகாரி மணியம் அவர்கள் நிழ்வின் உச்ச பட்ச கருத்துக்களை பிரியமானவர்களிடம் விவரித்துக்கொண்டிருந்தார் அருகே விவரமில்லாதவனாய் நின்றுகொண்டிருந்தேன்.
இன்னும் சிலர் அவர் இருந்தும் கிடைச்சிருக்கே, இவர் இருந்தும் கிடைச்சிருக்கே என்று பேசிக்கொண்டனர். அவர் முகத்தையும் பார்த்தேன் இவர் முகத்தையும் பார்த்தேன். இரண்டு முகங்கள் ஒன்று அவருடையது இன்னொன்று இவருடையது.
 
3 நாள் நடந்தால் தான் ஓரளவிற்கு திருப்திகரமான ஸ்பரிசங்களை பெறமுடியும் என்று 1/2 நாளில் 6 கதைகளைச் சொல்லி கள்ளக்காதல் மாணவனை அவனுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியையை அந்த ஆசிரியையை அறிந்திராத என்னை கவர்ந்துசென்ற பிரபஞ்சன், பட்டறை முடிவில் கையெழுத்து போட்ட காகிதத்தை பத்திரமாய் மடித்து எங்கே வைப்பது என்று நினைக்காமல் எல்லாரும் பந்திக்கு சென்றுகொண்டிருந்தனர்
 
சாப்பிட்டுகொண்டிருந்த போது இந்திரஜித் வந்துகொண்டிருக்கிறார் என்று நண்பர் மணிவேல் சொல்ல எனக்குள் ஆர்வம், ச்சேய் ஒரு குறுஞ்செய்தி அனுப்பிகூட வாழ்த்து சொல்லவில்லை, நேரில் பார்க்கப்போகிறோம் கை குலுக்கி வாழ்த்திவிடுவோம் என்று நண்பருக்கு அடுத்தடுத்த வந்த இரண்டு அழைப்புகளிலும் அண்ணன் வர காத்திருக்கதொடங்கினேன்.
 
இந்திரஜித் அண்ணன் புதிதாய் ஏதேனும் முகத்தோடு வரலாம் வரக்கூடும் வந்தால் எப்படி அவரை அடையாளம் கண்டுகொள்வது என்று யோசிக்கத்தொடங்கினேன். குழப்பங்களுக்கு எல்லாம் அண்ணன் எப்போதும் இடம் கொடுக்காதவர் அதே முகத்தோடு வந்திருந்தார், அந்த புன்னகை அதுதான் அதேதான் அண்ணனே தான் மீண்டும் குழப்பம் எல்லா நிகழ்வுகளிலும் பெரும்பாலும் இந்த பாண்டித்துரை தென்படுவானே? நேற்று கல்பா அடிக்க எங்கே போயிருப்பான் என்றெல்லாம் யோசிப்பதற்கு முன்பே சிரித்துவைத்தேன் யோசிக்கவில்லை என்றாலும் சிரித்துவைப்பேன் நான் அப்படித்தான் சிரிப்பதற்கெல்லாம் யோசிப்பதில்லை.
 
அந்த நிகழ்வு அப்படித்தான்யா இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்த நிகழ்விற்கு செல்லாதது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.
உயிரோசையில் இந்திரஜித் அண்ணனின் கட்டுரையைத்தான் முதலில் கிளிக் செய்வது. தொடர்ச்சியாக இரண்டு மூன்று வாரங்கள் வாராதபோது நண்பர் ஷாநவாஸிடம் அண்ணன் கட்டுரையை காணோமே என்று கேட்பேன், ஆமாம் பாண்டி என்று சொல்வார் ம் என்பேன் வருத்தம் இழையோடியிருப்பதை அவர்கண்டுகொள்ளமாட்டார், நானும் காட்டிக்கொள்ளமாட்டேன்.
 

அசிங்கம்னா என்னடா (தலைவிதி)

முனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடரா வருதுனு நண்பர்கள் பலர் சொல்லவும், கடந்த இதழின் அக்கப்போரை முந்தாநேற்று ஒரு தோழி படித்துவிட்டு அலறி அடித்து ஓடிவந்து நீ படிச்சியாடானு கேட்கவும்…
நீயும்மாடினு கேட்டு வைத்தேன்.
 
நேற்று இரவு அலுவலக மாதாந்திர கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திருப்பிய பின் நள்ளிரவில் உயிரோசையை வாசித்துவிட்டு வல்லினம் அகப்பக்கதை வாசிக்கத் தொடங்கினேன்…
 
ம.நவீன்-ன் எதிர் வினையை வாசித்து முடித்தபின் எனக்குள் எழுந்தது ஒரே கேள்விதான்!
 
வல்லினம் அகப்பக்கத்தில் தனது புகைப்படத்துடன் ம.நவீன் பக்கங்கள் என்று விளம்பரப்படுத்தியுள்ள  http://vallinam.com.my/navin/  எனும் தளத்தில்தான். ”இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை” – ”ம. நவீன்” எனும் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது…
 
ஆக அப்படி இருக்க…  

 
அந்த தளத்தில் வாசித்த எனக்கு, வல்லினம் அகப்பக்கத்திற்கு தனது எதிர்வினையை பா.அ.சிவம் அனுப்பியதை, அசுத்தத்தை  ஏற்படுத்தியதாக ம.நவீன் எழுதியதை நினைத்து எக்குக்கு தப்பாக சிரித்துவைத்தேன்.
 
வல்லினம் இதழினை வெளியில் இருந்து யாரேனும் வந்துதான் அசுத்தப்படுத்தவேண்டுமா?
 
குறிப்பு:
ஜெயமோகனின் குறிப்பினை மட்டும் குறிப்பிட்டுவிட்டு எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் மனுஸ்யபுத்திரன் குறிப்புகளை விட்டு விட்டீர்களே (அவர்கள் வருந்தக்கூடும்)  மிஸ்டர்.
 
நன்றி: வல்லினம் மற்றும் லும்பினி
 
வாசக வேண்டுகோள்: –
  
முனைவர் லெட்சுமியின் அக்கப்போர் தொடராக வெளிவரவில்லையென்று அத்தகைய பத்திக்கான வாசகர்கள் வருந்துவதாக பேசிக்கொள்கிறார்கள்…
 
முனைவர் லெட்சுமியின் அக்கப்போர்க்கு முழுப்பதிலாக அடுத்த வாரத்தில் கிடைக்கும் ஓய்வு நாளில் சின்னப்புள்ளைத்தனமாக சிலவரிகளை எழுதி பதிவிட நினைத்துள்ளேன்.
 
வல்லினம் அகப்பக்கத்தில் அக்கப்போர் தொடரட்டும் அப்போது மணக்கும் அல்லவா?