படித்ததும் பிடித்ததால் பகிர்ந்து கொள்கிறேன்

சாமிக்கும் மேல செளமியா

ஒவ்வொரு பலூனாய்
உடைத்துக் கொண்டிருக்கிறாள்
செளமியாக்குட்டி
பலூன்
உடைந்து கொண்டிருக்கிறது
வெடிச்சிரிப்புடன்.
o
விளையாடி முடித்து
தூக்கிப்போடுகிறாள்
செளமியாக்குட்டி
சோகத்தில்
கைகால்களை உடைத்துக் கொள்கின்றன
அறிவில்லாத பொம்மைகள்.
o
நிறையக்கேள்விகளுடன்
விடிகிறது
செளமியாவின் காலை.
கேள்விகளுக்கு
பயந்து சிலைக்குப்பின் ஒளிந்து பார்க்கிறார்
கடவுள்
o
நான் அம்மா செல்லம்.
அவங்கதான் நான்
குட்டிப்பாப்பாப்பாவா இருக்கும்போது
எறும்புகடிக்காம இருக்க தொப்பைக்குள்ள வச்சுருந்தாங்க
என்கிறாள்.
தூக்கத்தில் உதட்டசைத்து
கடவுளிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறாள் போலும்.
o
குழந்தையும் தெய்வமும் ஒன்று
என்றேன் செளமியாவிடம்
இல்லப்பா நான் சாமிக்கும்
மேல
சாமிக்கு என்னமாதிரி சிரிக்கத்தெரியாது
என்றாள்.
சரிதான்.

http://silarojakkal.wordpress.com/2010/10/15/சாமிக்கும்-மேல-செளமியா/

thanks: Poems by லதாமகன்

அகநாழிகை – இதழ் 5 ல் வெளிவந்த கவிதை

மே  மாத பிறந்தநாளுக்குப் பின்
சரியாக இரவு 12 மணிக்கெல்லாம்
யாரோ
குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்
 பல்வேறு சந்திப்புகளில்
என்னை அவதானித்த
அந்த யாரோ
 என்னோடு பேசத் தயங்குவதாகவும்
அதனால்தான்
இந்தக் குறுஞ்செய்தியென்று
உங்களை எனக்கு பிடித்திருக்கிறதுமு
அதனால்
ஒரு முத்தம் கொடுக்க அனுமதிப்பீர்களா
நீங்கள் மறுத்தாலும் கொடுப்பேன் என்று
ஒவ்வொரு இரவிலும்
பேசத் தயங்கியவனின் குறுஞ்செய்தி
முத்தம் முலை என படர்ந்து
அக்குளில் வேர்வையை நிரப்புகிறது
 சன்னலை திறந்து காற்றோட்டத்தை தேடுகிறேன்
நிலவின் குளிர்ச்சி
இரவுக் காற்றின் மனத்தோடு
மீண்டும் ஒரு முறை
அந்தக் குறுஞ்செய்தியை வாசித்தபின்
உறங்கப்போகிறேன்

நன்றி: அகநாழிகை

முகவை இராம்-ன் பிள்ளைத்தமிழ்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகமும், பெக்கியோ சமூகமன்றத்தாரும் இணைந்துப் படைக்கும் கவிச்சோலை நிகழ்வு வரும் ஞாயிறு மாலை (03-10-2010) பெக்கியோ சமூகமன்றத்தில் நடக்கவுள்ளது..   (Near farrer park mrt – owen road – cambridge road)

நிகழ்வில் படித்த, பிடித்த,வடித்தக் கவிதைகள் அங்கமும், முகவை இராம் அவர்களின் “பிள்ளைத்தமிழ் இலக்கிய உரையும் இடம்பெறும்.

இம்மாத போட்டிக் கவிதையின் தலைப்பு “பகலில் தோன்றிய நிலவு”…