எப்ரல் 07ல் சுதீர் செந்தில் + “உயிர் எழுத்து” சிங்கப்பூர் வருகை

80706283a

படைப்பிலக்கியத்தை முதன்மையாக கொண்டு தமிழ் இலக்கிய பத்திரிக்கையில் தனெக்கென ஒரு அடையாளத்தை உறுதி செய்திருக்கும் “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான சுதீர் செந்தில் ஏப்ரல் 09 மாதம் முதல் வாரத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் வாசகர்களை சந்திக்கவிருக்கிறார்.

ஏப்ரல் 4 முதல் 6 திகதிவரையிலான மலேசிய சுற்றுப்பயணம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனை ( 016-4806241)தொடர்பு கொள்ளவும்

சிங்கப்பூர் சந்திப்பு

சிங்கப்பூர் ஆங் மோ கியோ நூலகத்தில் அமைந்துள்ள தக்காளி அறையில் ஏப்ரல் 7ம் திகதி (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 6.00 மணிமுதல் 8.30மணிவரை உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்திலுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

ஏற்பாடு:  வாசகர் வட்டம்

ஆதரவு:ஆங் மோ கியோ பொது நூலகம்

அந்தரங்க ஆடைகளைக் களவாடியவன் – சுதீர் செந்தில் 

 

இரவு

ஒளி உமிழும் நிலத்தில் இருந்து

வெளியேறிக்கொண்டிருந்தது

 

பூனையின் கால்களோடு திரிந்தவன்

உன் அடர்ந்த காட்டில்

பெருகும் வாசனையில்

வேர்களைத் தேடி நிலம் அலைகையில்

நெருப்புக் கோழி ஒன்று துரத்த

அது

நீ விரித்த மாய வனத்தில்

தலை புதைத்து வீழ்ந்தது

 

பின்

ஒரு குறியாய் நிமிர்ந்து

உன்னுள் நுழைகையில்

இதழ்கள் பருகி ருசித்தாய்

 

ஆந்தைகள் அலரும் கனவில்

விரிந்த ரகசியத் தடங்களின் வழிபற்றி

உன் உயிரை உறிஞ்சத் துடிக்கும்

அட்டைப்புழுக்கள் சூழ்ந்திருக்க

உன்னுள் உயிர்த்து

உன்னுள் மரிப்பவன்

 

மரணமும்

உயிர்ப்பும் இல்லாத பெருநகரின்

சந்தடி மிக்க வணிக வளாகத்தில்

உன் அந்தரங்க ஆடைகளைக்

களவாடிச் சென்றவனை

குரல்வளை கடித்து

உயிர் தின்றபொழுது

 

நீ

நீலவானமாய் விரிய

பொழிந்த மழையில்

மயக்கம் கலைந்தவன்

 

வானத்திற்கு அப்பால்

நீ வெண்மேகமாய்

மறைந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.

 

 

 

– ஞாநி- யின் சிங்கப்பூர் வருகைக்கு + ஓ போடுவோம்

 

gnani_home_img1

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாட்டில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் கலந்து கொள்ள ஏப்ரல் 10-ன்று அன்று, வெகுஜனப் பத்திரிக்கையில் கலகக்குரல் எழுப்பி வரும் ஞாநி சிங்கப்பூர் வருகிறார். முத்தமிழ் விழா மற்றும், நண்பர்கள் ஏற்பாடு செய்யும் சந்திப்புகளில் இரு தினங்கள் கலந்துகொள்கிறார். ஏப்ரல் 15 அன்று மலேசியா சென்று அங்கு சில நாட்கள் தங்கவிருக்கும் இவர், இவ்விரு நாடுகளில் உள்ள இலக்கிய எழுத்தாளர்கள் வாசகர்களை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

 

ஊரில் இருந்த காலகட்டத்தில் வீட்டில் ஆவியும் ஜீவியும் அப்பா பிடித்துவருவார் (அக்கா தம்பி போட்டியில் படிப்பதற்கு முன்னுரிமை எனக்குத்தான்) . பின்னர் நான் கர்நாடகா மாநிலத்தில் ஹாசன்னில் பணிபுரிந்த காலகட்டத்தில் வாசிப்புக்கு துணையிருந்தது தினத்தந்தியுடன் ஆவி ஜீவி தான். சிங்கப்பூர் வந்து எழுத ஆரம்பித்த பின்னர் ஆவி புடிப்பதை நான் விட்டாலும் எனது சகோதரன் புண்ணியத்தால் டிசம்பர்-08 வரை புடிக்க முடிந்தது. இடை பட்ட காலத்தில் ஞாநி ஆவியில் இருந்து விலகி குமுதம் இதழுக்கு எழுத ஆரம்பித்தது தற்செயலாகத்தான் தெரியும், ஞாநி குமுத்திற்கு மாறிய ஆச்சிரியத்தை கண்டடைய கைப்பற்றிய அந்த குமுதம் இதழ் பற்றி வேறொரு பதிவு போட்டிருந்தேன்.

 

அதை படிக்கனும் நினைச்சா இங்க கிளிக்குங்க.

 

ரோபாவின் முன் . என்னுள்ளே

 

இப்ப ஆவி குமுதம் எப்பவாவது நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் படிப்பதுண்டு. ஞாநி பாமரன் என்று இணையபக்கத்திற்கு வந்தமை ஞாநியை மட்டும் வாசிக்கும் வெகுஜனபத்திரிக்கைக்கு இழப்பாக இருந்தாலும் இணையப் பரிச்சயம் இணையவசதி என எடுத்துக்கொண்டால் சொற்பமான எண்ணிக்கைக்கு முன் பத்திரிக்கை விற்பனை ஒன்றும் பாதாளத்திற்குள் சென்றுவிடாது(இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு).

 

ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் என்போன்றவருக்கு ஞாநியின் இந்த வருகை (சிங்கப்பூல் + இணையம்) ஒரு கொண்டாட்டம் தான்.

 

குட்டு : கடந்த ஆண்டு கண்ணதாசன் விழாவில் ஒரு நாட்டுப்பாடலை பாடி முடித்தபின் பேசிய பேச்சிற்காக திரைப்பட நடிகை ஆச்சி மனாகரம்மாவிற்கு

 

சொட்டு: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு

 

பூஞ்செண்டு: இன்று காலை என்னை தொடர்பு கொண்ட முதல் அழைப்பில் என்ன பாண்டி தூங்கிட்டியா? தொந்தரவு செய்திட்டேனா? எனும் வினவலுக்கு பின் ஞாநியின் வருகை பற்றிய செய்தியை சொன்ன எழுத்தாளர் சித்ரா ரமேஷ்அவர்களுக்கு.

 

ஞாநியின் இணையப்பக்கம்: http://www.gnani.net

ஞாநியின் வருகைக்கு

போடுவோம்

 

குறிப்பு: ஞாநியின் சிங்கப்பூர் வருகை பற்றிய அழைப்பிதழ் இனிமேல் தான் எனக்கு வரும் என்பதால் நிகழ்வு குறித்த தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.

 

மலேசிய எழுத்தாளர் மஹாத்மனுக்கு

 

மஹாத்மனுக்கு வருத்தத்துடன் சில வரிகள்

வணக்கம் மஹாத்மன்

நான் விரும்பி படிக்கும் ஒரு எழுத்தாளனை இப்படியாவது சந்திக்க முடிந்ததே மகிழ்ச்சியாக இருக்கிறது.

வரலாறு பற்றி வாய் திறப்பதற்கு முன் இனி உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன்.

பல சிக்கு என்று ஒரு சிக்கை முன்வைத்து, சில மூட்டைகளையும் அவிழ்திருக்கிறீர்கள். அவிழ்தமைக்கு நன்றி.

பின்னூட்டம் சார்ந்து .நவீன் என்னை தொடர்பு கொண்டபோது (தொடர்பு கொண்டதன் முதன்மையான விசயம் இறுதியில் வருகிறது) தெளிவு படுத்திய ஒன்றை உங்களுக்காகவும் சொல்லிவிடுகிறேன்.

இந்திய எழுத்தாளர்களுக்கு ஒதுக்ககூடிய (1/2 / 1) பக்கத்தில் மலேசிய படைப்பாளர்களை எழுதச் சொல்லலாமே என்ற .நவீன் வினவலுக்கு எதற்கைய்ய தனி நாடான சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்? அந்த இடத்திலும் மலேசிய எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே? சரிதனா இல்லையா

கொள்ளையை பற்றி ஒருவர் பேசி முடித்துவிட்டார் விட்டார். நீங்கள் கொள்கையை (மனவலியை) பற்றி பேசியிருக்கிறீர்கள். கவிஞர் வந்துவிட்டு சென்றதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் போல….

இந்த விமர்சனங்களுக்கு உரிய இருவரும் வாய் திறக்கும்போது இன்னும் கொஞ்சம் உண்மையை உணரலாம் என எல்லோரும் நினைக்கலாம்.

திறப்பார்களா?

என் மீதே எனக்கு விமர்சனம் உண்டு (இப்ப கூட என்னைய கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டேன்) மனுஸ்யபுத்திரன் பயணத்தில் அவருக்கு உடல் மனரீதியான வலி எற்பட்டிருப்பின் அதற்காக வருந்துகிறேன். இனி அதுபோல் இதபோல் எப்போதும் நடக்ககூடாது.

அட இனிமே நடந்து முடிஞ்ச உடனே என்ன நினைச்சிங்கனு சொல்லிப்புடுங்கய்யா அப்பத்தான் அடுத்து எவனும் வரமாட்டான். கூட்டம்னு கூட்டமாட்டான். நீங்க இரண்டு மூன்று வருசம் என்று பொத்தி பொத்தி வச்சு பேசுற பயபுள்ளைக போல.

கே.பா, பா.மு எதிர்படடால் வாய் பொத்தி போவிங்க போல. அட முழுப்பெயரை வெளிப்படுத்த இல்லையா. ஏம்பா பா.து நீதான் சொல்லலாம்ன நீங்கள் வைத்த எழுத்துக்கள் மீது நடந்துகொண்டிருப்பவன்.

///கற்றிருக்கலாம்///

அட மனிதர்களோடு பழகுவதில் அப்படி என்னையா காண்டு உணக்கு. ///பணம் பண்ணுவது/// வரவு செலவு கணக்கு பார்கணும்னு எதிர்பார்கிறிங்க போல, இருங்க கேட்டுச் சொல்லுதேன்.

///ஆண்மையை வெளிப்படுத்துதல்///

அட சொக்கா!

முதல் அடிக்கு இங்கு 3-வது அடியில் ஆண்மை பீறிடுகிறதப்பா.

வல்லினம் இதழ் சார்ந்து என்பதை நீங்கள் தப்பா புரிஞ்சுண்டேள். இருங்க தெளிவா விளக்கிடுறேன். வல்லினம் விற்பனை சார்ந்து .நவீன் என்னை தொடர்பு கொண்டிருந்தார். அது சார்ந்து நான் அனுப்பிய சில மின்னஞ்சல்களுக்கு அவரிடமிருந்து பதில் அஞ்சல் வந்து குவிந்துவிட்டது அதான். வல்லினம் விற்பது 5 புத்தகம்தான் அதற்மேல் படிக்ககூடிய நண்பர்களிடம் தேடிச்செனறு கொடுக்கிறேன். இங்கு எல்லோரிடமும் வெள்ளிகளை எதிர்பார்க்க முடியாது. ஆக 5 புத்தகத்திற்கு மேலான தொகையை நான் குடுக்க நேர்ந்தால் அது எனது சம்பாத்திய பணம் என்று எழுதியிருந்தேன். இதற்கு நவின் தொடர்பு கொண்டு நீங்க கவிதைதனமா எழுதியிருந்திங்களா அந்த பார ஒன்றும் ரியலை பாண்டி! என்ன பாண்டி உங்களை விற்கச் சொல்லி கஷ்டப்படுத்திட்டேனானு (எனக்கு மனிதர்கள் தான் முக்கியம்) (தன் தேவை சார்ந்து) அப்ப பிரச்சினை இல்லைதானேனு,

இல்லை.

அட சொக்கா!

எனக்கு விருப்பமான இதழ்களை நண்பர்களுக்கு படிக்கச்சொல்லி நான் கொடுப்பது வழக்கம். அபபடி சமீபகாலமாக சமநிலை சமுதாயம் என்னும் இதழை நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன். முதல் முறையாக சென்று 5 புத்தகங்களை அள்ளும் போது கடைக்காரன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான்.

சுயபுராணம் என்ன செய்ய

மேட்டருக்கு வருவோம்.

உன் தேவை சார்ந்த நான் அனுப்பிய கேள்விகள் கொண்ட மின்னஞ்சலுக்கு பதில் இல்லை.

இப்ப தெளிவா குழப்புறேன்.

உன்னுடைய தேவைகளுக்கு மட்டும் தொடர்பு கொள்ள பாண்டித்துரை என்ன பரத்தையா?

பரத்தையோடு நீங்கள் பரிவாக பேசக்கூடியவர்கள் அல்லவா ? அதற்காகத்தான்யா அறுவைசிகிச்சை……

இதற்கு எந்த ஆத்மா ஆண்மைபீறிட வந்து 5-அடியில் பதிலிடப்போகிறதோ?

ம்பேசப் பேசத்தானே உன்னையும் என்னையும் பற்றிப் புரியும்.

.நவீன் வல்லினம் இதழினை என்னிடம் கொடுப்பதற்கு முன் மஹாத்மனிடம் கலந்துரையாடியிருக்கலாம். ஏன்னா என் முகம் பார்க்கா ஜோசியர் மஹாத்மன் //கற்றிருக்கலாம்// அட அவனா அப்படி இப்படினு நெற்றிக்கண்ணால் உணர்ந்ததை சொல்லியிருப்பார். ம் இப்ப ஒரு அனுபவம் .நவீனுக்க கிடைத்துவிட்டது.

என்னுடைய முதல் கவிதை தொகுப்பை உங்களிடம் தருகிறேன் மஹாத்மன் அச்சிட்டு வெளியிட்டுத் தாருங்கள்.

தருவீர்கள் தானே.

பாண்டித்துரை
சிங்கப்பூர்.

அஞ்சடியில் பின்னூட்டம் இட்ட இந்த பதிவு தொடர்பான சுட்டி: ‘விபச்சாரியின் யோனியை’எப்படி உடைத்துப் பார்ப்பது?!

 

எழுத்தாளர்விழா – அவுஸ்திரேலியாவிலிருந்து

wrap-11

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்- அறிந்ததைப்பகிர்ந்து- அறியாததை அறிந்துகொள்வதற்காகஅவுஸ்திரேலியாவிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படைப்பாளிகளை வருடாந்தம் ஒன்றுகூடச்செய்யும் எழுத்தாளர்விழா எதிர்வரும் ஏப்ரில் மாதம் 11 ஆம் திகதியன்று விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் முழுநாள் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது.

 

கல்தோன்றி மண் தோன்றாக்காலம் என்று வாய்ப்பாடுகளைச் சொல்லிக்கொண்டிராமல்- கலை, இலக்கியத்துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எம்மவர்களை ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமாக பல பணிகளை முன்னெடுப்பதற்காகவும் இந்த எழுத்தாளர் விழா இயக்கம் தொடர்ந்து செயல்படுகிறது.

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத்தமிழர்கள் இலங்கைக்கும் பிஜித்தீவுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் லம்பெயரந்திருந்தபோதிலும், அமரர் புதுமைப்பித்தன் ஈழத்தில் மலையகத்தில் தமிழர்களின் நிலை குறித்து துன்பக்கேணியில் எழுதியிருந்தாலும்- பிஜித்தீவில் கரும்புத்தோட்டங்களில் தமிழ் மக்கள் வடித்த கண்ணீரை அறிந்து மகாகவி பாரதி கேட்டிருப்பாய் காற்றே.பாடியிருந்தாலும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்என்ற பதம் பேசுபொருளாகியது ஈழத்தமிழர்களின் அந்நிய தேச புலப்பெயர்வுக்குப்பின்புதான்.

 

 புலம்பெயர்வு கலை-இலக்கியம் தொடர்பாக விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்திருக்கும் சூழலில், இந்த கடல் சூழ்ந்த கங்காரு நாட்டில் வாழ்கின்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வானொலி ஊடகவியலாளர்கள் நடன, நாட்டுக்கூத்து, நாடக கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தீவிரமான வாசகர்கள் அனைவரும் தத்தம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்று கூடும் எழுத்தாளர் விழாவை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தி வருகிறது.

 

 

 இந்த அமைப்பு அவுஸ்திரேலியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும். இதனது தொடர்ச்சியான கலை, இலக்கியப்பணிகளை அவதானித்திருக்கும் விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையம் வருடாந்தம் சிறிதளவு நிதியுதவியும் வழங்கிவருக்கிறது. அத்துடன் எழுத்துத்துறையுடன் ஈடுபாடுள்ள பலர் இச்சங்கத்தில் ஆயுள் சந்தா செலுத்தி நிரந்தர அங்கத்தவர்களாகவும் இணைந்து இயங்குகின்றனர்.


ஒன்பதாவது விழா       

 

 

 ஏதிர்வரும் ஏப்ரில் மாதம் நடைபெறவுள்ள ஒன்பதாவது விழாவில் கருத்தரங்கு, மாணவர் அரங்கு, கவியரங்கு, கலையரங்கு ஆகியனவற்றுடன் நூல்-.இதழ் விமர்சன அரங்கும் இடம்பெறவுள்ளன.

 

இம்முறை மல்லிகை 44 ஆவது ஆண்டு மலர், ஞானம் நூறாவது இதழ், யுகமாயினி மாத இதழ் ஆகியனவற்றுடன் ன்மார்க்கிலிருந்து விழாவுக்கு வருகைதரும் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் எழுதியுள்ள புதிய நாவல் மக்கள்;;;…மக்களால்…மக்களுக்காக…மற்றும் லண்டனில் வதியும் எழுத்தாளர் முல்லை அமுதன் தொகுத்துள்ள 44 மறைந்த படைப்பாளிகளைப்பற்றிய இலக்கியப்பூக்கள் ஆகியன விமர்சன அரங்கில் விமர்சிக்கப்படவுள்ளன.

 

 

 மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய மாநில நகரங்களில் வதியும் எழுத்தாளர்களும் இலங்கை, டென்மார்க்கிலிருந்து சில எழுத்தாளர்களும் ஒன்பதாவது எழுத்தாளர்விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

 

நன்றி: http://jeyamohan.in

அவர்கள் சாவதற்கு…

ltte_1

img_2316-1024x768

clymore_attack_01

சாவதற்கு அவர்கள்

தயாராகவே இருக்கிறார்கள்

 

ண்புணர்சிக்கு உட்படுத்தி

கொட்டடிக்குள் அடைபடுவதிலிருந்து

கொத்து கொத்தாய் வீழும் குண்டால்

குறையும் மனிதத்தை எதிர்த்து

சகோதர நாடு தரும்

சாக்கடை முகாம் கடந்து

 

சாவதற்கு அவர்கள்

தயாராகவே இருக்கிறார்கள்

 

தொல்லை தரும் வெள்ளை வேன்

வெள்ளை உடை தரித்த மனிதர்கள்

தொடரும் சோதனைச் சாவடி

இல்லா தேசம் வேண்டி

 

சாவதற்கு அவர்கள்

தயாராகவே இருக்கிறார்கள்

 

உண்ணா நோன்பிருந்து

தினம் ஒருவராய்த் தீக்குளித்து

போராளி உடை தரித்து

மூப்பைக் கண்டடைந்த பின்

 

சாவதற்கு அவர்கள்

தயாராகவே இருக்கிறார்கள்

 

                                      

@pandiidurai@yahoo.com

 

நிசி அகவல் – விமர்சனக் கூட்டம்

 

மார்ச் 15 2009 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு

அலுமினி கிளப்அண்ணா பல்கலைக்கழகம்

1,  போட் கிளப் ரோடு,  அடையாறு கேட் ஹோட்டல் சென்னை

nisi_invitation_final

நிசி அகவல்  – பக்கம் 48ல்

 

 

ஒரு மகிமை

 

அவள் கோயம்பத்தூருக்கு போய்விட்டாள்

நான் ஒழுங்காக இருந்த

வீட்டினில் விழுந்துகிடந்தேன்

நண்பர்கள் வந்துவிட்டனர்

ஒரே குடி கும்மாளம்

சிகரெட்டுக்கள் அணைக்கப்பட்டுவிட்டன

நான் அதி சுதந்திரவாதியாய் இருந்தேன்

இஷ்டம் போல்

என்னை வளைத்தேன் என் மூளையையும்

அவள் வேறொரு இடத்தில் உழன்று படுத்திருந்தாள்

நான் நண்பர்களுடன் குப்புறப் படுத்திருந்தேன்

அழகிய கனவான்றில் ஒரு பெண்ணுடன்

சல்லாபித்துக்கொண்டிருந்தேன்

புதிதான பெண் புதிதான நிர்வாணம்

புணர்தலில் உலகத்தைவிட்டு

விடைபெற நினைத்தேன்

விடிந்தபோது நண்பர்கள்

தலைதெறிக்க பணிக்கு திரும்பினர்

நான் வீட்டை ஒழுங்குக்கு கொண்டுவந்தேன்

ஊரிலிருந்து திரும்பியவள்

ஒரு சிகரெட் துண்டைக் கண்டுபிடித்துவிட்டாள்

 

 

நூல்  நிசி அகவல்

எழுத்து அய்யப்பமாதவன்

வௌயீடு ஆழி பதிப்பகம்

விலை ரூபாய் 60.00

 

 

“அநங்கம்”

 

2007ல் மலேசிய இதழான காதல்“” சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று காதல் இதழ் வெளிவரவில்லை எனினும் காதல் இதழ் மலேசிய மகாணங்களில் சில விதைகளை தூவியிருக்கிறது. அதில் விட்ட முளையாகத்தான் அநங்கம் இதழினை பார்க்கத்தோன்றுகிறது. மலேசியாவின் கெடா மகாணம், குறிப்பாக சுங்கைப்பட்டாணிக்கு மலேசிய இலக்கியத்தில் தனிச்சிறப்பு இருக்கிறது. அங்கிருந்துதான் அநங்கம் அரும்பியுள்ளது.

 

சமீபகாலமாக தமிழக சிற்றிதழ்களில் தொடர்சியாக தனது படைப்புகளை அளித்து வரும் மலேசிய இளம் எழுத்தாளர் கே.பாலமுருகன், மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அநங்கம் இதழினை வெளியிட்டுள்ளனர். தீவிர எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், வாசகர்களையும் இணைப்பது என்ற எண்ணத்தில் இதுவரை இரு இதழ்கள் வெளிவந்துள்ளன.

 

இதன் தொடர்ச்சியான மூன்றாவது இதழ் சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் வரும் சனிக்கிழமை 14.03.2009 அன்று, மாலை 4.30 மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்தில் தக்காளி அறையில் (இரண்டாவது தளம்) நடைபெறுகிறது.

 

நிகழ்வில் இதழ் ஆசிரியர் கே.பாலமுருகன் மலேசிய மூத்த எழுத்தாளர்கள் சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான்  உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு அறிமுகம் மற்றும் கலந்துரையாடலாக நிகழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. முழுநாள் பயணத்தை இரண்டு மணிநேரத்தில் கடக்கவிருக்கும் மலேசிய எழுத்தாள நண்பர்களுக்காகவும், வாசகர்களையும் எழுத்தாளர்களையும் அடுத்த கட்ட நகர்விற்கு இட்டுச் செல்லும் வாசகர் வட்ட நண்பர்களின் முயற்சிக்காகவும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க…

 

அன்புடன் அழைப்பது

பாண்டித்துரை  82377006

 

anangam-1