இரையாகிக்கொண்டிருக்கும் மிருகம்

அந்த மிருகம்
எப்படி இந்தக் காட்டிற்குள் வந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களோடு ஒன்றிணைந்தது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல ஊளையிட்டது என்று
அந்த மிருகம்
எப்படி மிருகங்களைபோல வேட்டையாடியது என்று
அந்த மிருகம்
எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மிருகமாகியது என்று
அந்த மிருகம்
எப்படி அந்த மிருகத்தை பின்தொடர்ந்தது என்று

இரையாகிக்கொண்டிருக்கும் ஒரு மிருகத்தை
பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்

 

என்ன செய்துவிட்டேன்

எனக்கு தெரிந்த
எல்லா நாட்களும் அப்படியே இருக்கின்றன

எடுத்துக்கொண்ட ப்ரியங்களை
திரும்பபெற
காத்திருத்தலில்
என்ன இருக்கப்போகிறது
உனக்கு தெரியும்

தொலைந்துபோவது
ஒரு பாவனைதான்

திரும்ப வருவதும்
ஒரு பாவனைதான்

குட்டப்பனோடு உரையாடி
நீண்ட நாட்களாகிவிட்டது
நீண்ட நாட்களில்
என்ன செய்துவிட்டேன்
குட்டப்பனோடு உரையாடுவதை தவிர்த்து