வீடு தேடி வரும் கோலம் – ஞாநி

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

ஞாநி

இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள் – 23.08.09 @ தக்காளி அறை

நாள்: 23.08.2009

 நேரம்: மாலை 4.30மணிக்கு

இடம்: அங்மோ கியோ வட்டார பொது நூலகம் தக்காளி அறை (இரண்டாவது தளம்)

இருவர் சந்திக்கும்போது தான் காதல், காமம், குரோதம், என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு இந்த பிரபஞ்சம் மெல்ல விரிவடைகிறது.

இவர்களும் சந்திக்கிறார்கள,; விரல் நுனிக்குள் சுருங்கிவிட்ட இணையப் பெருவெளியில் சந்திப்பதுடன் சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், சமூகம், மொழி, பண்பாட்டுடன் நட்பின் கரங்களை உயர்த்திப் பிடிக்கும், இவர்களின் இணைய உலக பயண எழுத்தின் நுட்பத்துடன் சந்தித்த தளங்களை…..

சிங்கைவாழ் பதிவர்களான

கோவி.கண்ணன் அவர்கள்

குழலி அவர்கள் அப்பாவி

 முருகேசன் அவர்கள்

 முகவை ராம் அவர்கள்

நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இவர்களுடன் 15-ற்கும் மேற்பட்ட வலைதள எழுத்தாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கலந்துரையாடலிலும் பங்கு பெறவிருக்கின்றனர்.

அனுமதி இலவசம்

அன்புடன் அழைப்பது

வாசகர் வட்டம் நண்பர்கள். http://vasagarvattam.blogspot.com

சிங்கை பதிவர்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு www.singaporetamilblogers.blogspot.com

www.sgtamilbloggers.com

 www.tamilveli.com

v.vattam