கடமைக்காக சில நன்றிகள்

பிரம்மா இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் கடந்துவிட்டது. இடைப்பட்ட நாட்களில் நாம்மின் நஞ்சினை பருகியபோதையில் தொய்ந்துபோயிருந்தேன். நண்பர் ஒருவர் சொன்னது என்ன பாண்டி கவிஞர் ஆகிட்டிங்க”! எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம எப்ப கவிஞராக! இவருடனான நட்பே கவிதையால்தானே கிடைத்தது என்று நினைக்கதொடங்கிய நாட்களில்…. இன்னொரு நண்பரும் என்ன பாண்டி கவிஞராகிட்டிங்க என்றார். அட நான் கவிதை எழுதுவதாக நினைத்துக்கொண்டிருப்பதோ உண்மை. இன்னும் சிலர்கூட பாண்டி உங்க கவிதை ஒரே இருண்மையாக இருக்கு ஆனாலும் பரவாயில்லை இப்படியும் ஒன்று வேண்டும்தானே என்பர். நான் எழுதுவது எனக்காக. நான் எழுத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுடன் சிரிக்கும் எழுத்துக்கள் கைபிடித்து நடனமாடத்துவங்குகிறது, என் தனிமையிலும், அந்தரங்கத்திலும் எட்டிப்பார்த்து என் நெற்றியில் முத்தங்களை பதிப்பதில் இன்றுவரை முயற்சிக்கிறது. எனக்காக எழுதக்கூடியவை எல்லாம் கதையாகவும், கவிதையாகவும் இல்லாமல் மழலையின் கிறுக்கல்களாக மாறக்கூடிய கணங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 

பிறகொருதருணம்தான் நண்பர் ஒருவர் சொன்னார் பாண்டி புத்தகம் போட்டுட்டிங்களா அப்பனா நீங்க கவிஞர் என்று. அப்ப முன்னாடி நான் கவிஞர் இல்லையா என்றேன். (முன்பு நான் பொய் போலவும் இப்பொழுது உண்மைபோலவும்) அப்பவும்தான் ஆனா இப்பத்தான் நீங்க கவிஞர் என்றார்.

 

என்ன கொடுமை ப்ரேம்.

 

நன்றி சொல்ல எழுதப்போய் நான் நான்னு பேசிக்கிட்டிருக்கியேடா ப்ரேம்.

 

இதுல என்ன கொடுமைனா ப்ரேமு நான் போட்டது கால் புக்கு (1/4 -book )

 

என்ன பாண்டி பெக்கு கணக்குல சொல்லுற ப்ரேம்

 

நான்கு பேர் எழுதுன பிரம்மாவில் என் பங்கு ஒரு 15 பக்கம் இருக்கும். இப்ப என்னைய எப்படி கூப்பிடனும்

 

“கவிஞர்” என்றா

“க” என்றா

“வி” என்றா

“ஞ” என்றா

“ர்” என்றா?

 

வரிசைப்பிரகாரம் பார்த்தால் என்னுடைய கவிதை இரண்டாவதாக வருகிறது. அப்ப வி”தான்.

 

அட கிரகம்புடிச்சவனே நீ சொல்லவந்தது நன்றி, நீ செய்துகொண்டிருப்பது ஆராய்ச்சி ப்ரேம்.

 

பிரம்மாவை பலரும் பாராட்டினாங்க

 

கவிதையையா ப்ரேம்.

 

ம் இல்ல  அதையும் கடந்த முயற்சி அதை

 

“அப்ப கவிதையை ப்ரேம்

 

இல்ல நான் இப்படியே ப்ரமு உனக்கு பதில் சொல்லிக்கிட்டிருந்தால் நான் சொல்ல வந்தததை மறந்திடுவேன்.

 

ஆமா இவரு சொல்லவந்ததுல 3-பேரை மறந்துடுவாரு 2-பேரை கடைசியாக சொல்வாரு இதுல…” ப்ரேம்.

 

நிசமாலுமே கொடுமைதான் ப்ரேம்.

 

முதலில் பிரம்மாவில் இணைந்த நான் (பாண்டித்துரை) உள்ளிட்ட நண்பர்கள் கோட்டைபிரபு செல்வா காளிமுத்து பாரத் இவர்களுக்கு நன்றி.

 

இவனுக்கே இவன் சொல்லிக்கிறான் இதுக்கு ஒரு பதிவு ப்ரேம்.

 

கனவாகத்தான் இருக்கிறது. பிரம்மா வெளியிட்டபின்னரும் வெளியீட்டன்று என்னுடைய மனநிலையில் நான் எங்கு இருந்திக்ககூடும் விழா முடிந்த பின்னர் என்னை நானே கேட்டுக்கொண்டது.

 

விழாவிற்கு சில நாட்கள் முன்னர் தனது உடல்சுகவினமின்மையிலிருந்து சுகப்பட்டு பலபொறுப்புகளை எடுத்ததுடன் ஆலோசனைகளையும் சொல்லிய நண்பன் (நண்பன் இந்த வார்த்தையை பற்றி நிறைய யோசிக்க வேண்டியிருக்குஇதைப்பற்றி பின்னர் ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்து இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ) கண்டனூர் சசிக்குமார் அப்புறம் சின்னபாரதி, சத்தியமூர்த்தி, அறிவுநிதி, சிறப்புரையாற்றிய முனைவர் ரத்தினவேங்கடேசன், தலைமையேற்ற திருமதி புஷ்பலதா கதிரவேலு, முதல் பிரதியை வெளியிட்ட போப்ராஜ், முதல் பிரதியை பெற்றுக் கொண்ட என்.ஆர்.கோவிந்தன், நிகழ்வினை நெறிப்படுத்திய .வீ.விசயபாரதி, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய வள்ளியம்மை அம்மாள், கவிதைகளை ஆய்வு செய்த பெரி.சிவக்குமார், இராம வைரவன், திருமதி இன்பா, காதலுடன் கண்ணா, நண்பர்கள் இறைமதியழகன், ஜோதிமாணிக்கவாசகம், மணிசரவணன் , கவிமாலை, கவிச்சோலை, வாசகர் வட்டம், சிங்கைத் தமிழ்ச் சங்கம்  நண்பர்கள், நிகழ்விற்கு வந்திருந்து சிறப்பித்த நண்பர்கள், விழாவிற்கு வரவியலாமல் வாழ்த்திய நண்பர்கள், வரவியலுமான பொழுதும் வாழ்த்துச் செய்தி அனுப்பாத நான் அழைத்தபோதும் கைப்பேசியை மறந்தும் ஆன் செய்யதா நண்பர்கள் என்று பிரம்மாவின் அகம் புறம்ல் சிங்கப்பூர் நண்பர்கள் எல்லோருக்குமே என்னுடைய நன்றிகள்.

 

சிங்கப்பூர் தமிழ் முரசு இணையம்திண்ணை வார்ப்பு பண்புடன் குழுமம் பண்புடன் குழும நண்பர்கள்

 

முக்கியமாக விழா அன்ற நன்றிசொல்லியபோது மறந்துவிடுபட்ட பிரம்மா பிறத்தலின் தமிழக பொறுப்பினையேற்று மேற்பார்வையும் செய்த கவிஞர் அய்யப்பமாதவன் என்று நீளும் பட்டியலில் பிரம்மா வெளியிட்டபின் பிரம்மாவை நுகர்ந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட கவிஞர் மலர்விழி இளங்கோவன் கவிஞர் முத்துப்பாண்டி உள்ளிட உங்களுக்கும் என்னுடைய நன்றிகள்

 

கால் புக்கு(1/4 book)  போட்டாச்சு அடுத்ததா என்ன பாண்டி ப்ரேம்

 

அப்புறம் என்ன இன்னும் முக்கா புக்குக்கு (3/4- book)  தேத்தி முழுசா போடவேண்டியதுதான்.

 

“அந்த கால்யையும் சேர்த்தா ப்ரேம்

 

ம்.

 

அப் புதுசா எதுவும் எழுதுறதா எண்ணம் எதுவும் இல்லை ப்ரேம்

 

அட யாருப்பா புத்தகத்தை வாங்கி திறந்து படிக்கிறது அப்படினு…… நான் இல்ல புத்தகம்போட்ட பலர் பேசிக்கிட்டே இருக்காங்க.

 

“அப்ப முடிவே பண்ணிட்டியா ப்ரேம்

 

என்னனு?…

 

கவிஞர்ஆகுறதாத்தான் ப்ரேம்

 

ப்ரேமு இப்பவாச்சும் ஒத்துக்கிட்டியே நான் வி தான்னு முதலில உனக்கு நன்றி ப்ரேமு அப்பதான் இந்த பத்தியை முடிக்கமுடியும்போல.

 

பாண்டித்துரை

 ©pandiidurai@yahoo.com