விழி கொண்டு பார்
என் வலி புரியும்
உனக்கு.
அர்த்தநாதிஸ்வரரின் அழகை பெற்ற திருநங்கைகள் (அரவாணி), இன்று சமுகத்தில் முக்கிய பரிணாமங்களை தொடத்தொடங்கியுள்ளனர். அவ்வகையில் தோழி ரோஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியயிருக்கிறார். புன்னகையுடன் வரவேற்போம். இன்றைய காலகட்டத்தில் ஊடகவழியேதான் மனித உளவியலை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நன்றி: bbctamil.com
பிபிசி தமிழ் இணையத்தில் வெளிவந்த செய்தி
நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு அரவாணி
தமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை வழி நடத்தும் தொகுப்பாளராக விரைவில் செயல்பட இருக்கிறார்.
வழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள்.
போட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
தமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார்.
தாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ்.
பிபிசி தமிழ் இணையத்தில் :
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக…
வணக்கம் பாண்டித்துரை தோழரே ,
உங்கள் பக்கம் பார்த்தேன்,உண்மையில் அரவாணிகளுக்கு இத்தகய
அங்கிகாரம் தேவை.சும்மா பேசிக் கொண்டிருப்போர் மத்தியில், அச்செய்தியை
பதியவைத்து மற்றவர்களும் அறிய வழியமைத்தமைக்கு வாழ்த்துக்கள்.
இதமுடன்
இரா.பிரவீன் குமார்
தமிழக அரசின் உருப்படியான சாதனைகளில் ஒன்று அரவாணிகளுக்கு தனியாக ரேசன் கார்டு வழங்கியது தான். மக்களும் அவர்களை கேலியாக பார்ப்பதைக் குறைத்து நம்மை போல அவர்களையும் மதிக்க வேண்டும். நல்ல பகிர்வு. நன்றி