ரோபாவின் முன் அ.ஆ என்னுள்ளே

 picture-003.jpg

ரோபாவின் முன் . என்னுள்ளே பிரமாண்டமாய்…………….. 

எனக்கான தேவைகள் எல்லா இடங்களிலும் நிரம்பிக் கிடக்கிறது. அப்படித்தான் ஆவியும்.  புரிதலற்ற ஒரு காலத்தில் புரண்டு எழுந்துவந்த தடங்கள் இருந்தாலும் என் சகோதரனின் உபயத்தால் ஆவியின் சில பக்கங்களை அவ்வப்பொழுது விரும்பி படிப்பதுண்டு. அப்படித்தான் ஞாநியின் பக்கங்களும்.  ஞாநியின் பக்கங்கள் ஒரு கட்டத்தில் (100க்கு பிறகு ) தடைபட்டபொழுது மீண்டுவரும் என்று எண்ணியதுண்டு. அப்படித்தான் அடுத்தடுத்த பக்கங்கள். 

07.02.08 சீனப்புத்தாண்டை (சிங்கப்பூர்) கொண்டாடிக் கொண்டிருந்தது. இன உணர்வுகள் எனக்கான தேவை என்றாலும் அவை என்றுமே பூசலுக்கு அடிக்கோடிடுதை அனுமதித்ததில்லை. பல்வேறுபட்ட இனமக்கள் வாழும் ஒரு சமுகத்தில் வாழும்பொழுது அவர்களின் உணர்விற்கு என்னையும் உட்படுத்த முயல்வதுண்டு அப்படித்தான். ஆனாலும் மனதளவில் சீனப்புத்தாண்டை கொண்டாடினேன் கூடுதலாக என்னுடைய முதலாளிக்கு ஒரு குறுந்தகவல் அவ்வளவே. கடந்த ஆண்டு சீனப்புத்தாண்டை நினைத்துப்பார்க்கும் அளவிலே இந்த ஆண்டு சீனப்புத்தாண்டு என்னை ஆட்கொண்டது. கடந்த ஆண்டு புத்தாண்டிற்கு மலேசிய லங்காவி தீவிற்கு நானும் என்னுடைய சகோதரர்களும் பயணித்ததே. இந்த ஆண்டு என்னுடைய சகோதார்கள் அனைவரும் இந்தியாவில் விடுமுறையை கொண்டாட நான் மட்டும் இங்கே 

சீனப்புத்தாண்டை கொண்டாடும் முகமாகவும் கவிமாலை கவிஞர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடும் ஒரு பகுதியாக எனக்கு வந்த அழைப்பினையொட்டி சிங்கப்பூர் பொட்டானிக்கல் கார்டன் (பூ மாலை) பகுதிக்கு ஒரு நாள் முழுமைக்கும் என் சின்டெரெல்லா கனவுகளுடன்…. எல்லோரையம் எனக்கு பிடிக்கும் என்றாலும் என்னருகே சிலரே இருக்க கூடும் அப்படிச் சிலர் வந்த மகிழ்ச்சியில் நாளைய பொழுதில் அதன் ஞாபகங்கள் எங்காவது துருத்திக்கொண்டிருக்கலாம்.  

 மாலையில் தேக்காவின் வீதிகளில் பயணிக்கும்பொழுது சனசந்தடி பற்றிய சலிப்பு ஏற்பட்டாலும் இதை விட்டால் இவர்கள் வேறு எங்குபோய் மகிழக்கூடும் இவர்களின் மகிழ்ச்சிக்கு இடைஞ்சலாய் (இடையே) நான் என்றவாரு கால்களின் போக்கினில் கண்களில் ஒரு மாற்றம். ஏதேச்சையாய் நான் படித்த சில வரிகள் 

ஞாநியின் …… பக்கங்கள் ஆரம்பம் ஆரம்பித்த ஒன்று மீண்டுமா என்ற ஆர்வமிகுதியில் மேலெழுந்த பார்வையில் கொட்டை எழுத்துக்களில் குமுதம். வாங்குவோமா இல்லையா என்று யோசிப்பதற்கு முன்னே என்கைகளில் தாங்கியபடி பிறகு என்ன சில்லறையை சரிபார்க்காமல் கொடுத்துவிட்டு செல்ல மறதியில் நடைபோட்ட என்னை அங்காடிக்காரர் அழைத்து மிச்சமாக 0.30 சென்ட் கொடுக்க அட என சொல்லிக் கொண்டே முதல் பக்கத்தை திருப்பினால் வாங்கியதன் சந்தோசங்கள் ஒரு பக்கம் வடியத்தொடங்கியது.   

 ரோபோ படத்திற்கு தமிழில் என்ன பெயர் சூட்டலாம். சரியான பெயரை சொல்லும் ஒரு வாசகருக்கு பரிசு ரூபாய்.1000.00  

உடனே என்னுள் எட்டிப்பார்த்தது . (இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா) படத்திற்கான தலைப்பு போட்டியே. (நான் எழுத ஆரம்பித்ததற்கு ஒரு வகையில் .ஆவிற்கும் ஒரு தொடர்பு உண்டு 

100 கோடிக்கும் மேல் பட்ஜெட் ப்ரமாண்டம் சங்கர் இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடப்போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இத்தகு பிரமாண்டத்தின் படதலைப்புக்கு ரூபாய் 1000.00 ? ரசிகா! பெயரை தமிழ்ப்படுத்துவதால் கிடைக்கும் வரிச்சலுகையை…………….?  

ரோபாவின் முன் . என்னுள்ளே பிரமாண்டமாய்…………….. 

குமுதம் ரஜினி ரசிகர்களை வைத்து சம்பாதிக்கிறதா அல்லது ரஜினி……………….. 

ஆக மொத்தத்தில் ரஜினி ரசிகர்களின் மதிப்பு ஒரு ஆயிரமாய்………………………. 

 

2 thoughts on “ரோபாவின் முன் அ.ஆ என்னுள்ளே

  1. N Suresh சொல்கிறார்:

    அன்புள்ள பாண்டித்துரை,

    இந்த கட்டுரை ஒரு உரைநடைக் கவிதை பாணியில் எழுதியுள்ளீர்கள். அதனால் ரசனையின் தொடர் அழகாக வந்து கொண்டிருந்தது.

    முடிவில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பல கோடு பரிசு தரலாம்!

    பாராட்டுக்கள்!

    நல்ல பெயர் யோசித்து ஆயிரம் ரூபாயை மனதில் நினைத்து நாக்கைத் தொங்கப்போட்டு மடல் அனுப்பி காத்திருந்து நொந்துபோகும் பலருக்கு நடுவே ஒரு தமிழன் இப்படியாக அழகாக புத்திசாலித்தனமாக சிந்தித்து அதை பதிவு செய்ததில் நான் சந்தோஷப்படுகிறேன்! பெறுமைப்படுகிறேன்! பாராட்டுகிறேன்!

    நீ வாழ்க
    உன் சிந்தனைகள் வளர்க
    மென்மையும் நாகரீகமான உந்தன் பதிவுகள் மென்மேலும் தொடர்க!

    இதயம் நிறைந்த பாசமுடன்
    என் சுரேஷ்

  2. பாண்டித்துரை சொல்கிறார்:

    ///இந்த கட்டுரை ஒரு உரைநடைக் கவிதை பாணியில் எழுதியுள்ளீர்கள்//

    அன்பின் சுரேஷ் உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
    அப்படியே உங்களின் புரிதலுக்கும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s