அவர்களுக்காக
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்
அவர்களுக்காக
நீலிக்கண்ணீர் வடித்தோம்
அணி பிரித்து அறிக்கை தயாரித்தோம்
இரங்கல் கூட்டங்களில் முன் நின்றோம்
சில கவிதைகளைச் செய்தோம்
அதிசயங்கள் நடந்திடும் என பேசிக்கொண்டோம்
ஒருவன் தீயிட்டுக் கொண்டான்
அவர்களுக்காக
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்
அவர்களை
குவியும் பிணங்களாக்கினோம்
வன்புணர்ந்ததை வாசித்தோம்
தினச் செய்தியில் ஒன்றாக்கினோம்
மௌனமாய் வேடிக்கை பார்த்தோம்
அவர்களுக்காக
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்
அவர்கள்
உறவுகள் உயிர்த்து போய்கொண்டிருக்க
மொழி இழந்து போய்க்கொண்டிருக்க
இனம் அழிந்து போய்க்கொண்டிருக்க
நாடற்று போய்க்கொண்டிருக்க
அவர்களுக்காக
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்
அவர்களில்
யாரேனும் மிச்சமிருக்க
அவர்களின்
சடலங்களை எண்ணத் தொடங்கி
அவர்களின் அவர்களுக்காய்
காத்திருக்கத் தொடங்கிவிட்டோம்
அவர்களுக்கா
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்
இன்னும் ஒரு
கவிதை எழுதுவதை விட?
© பாண்டித்துரை pandiidurai@yahoo.com
:-((((((((
உணர்வுள்ள கவிதை….. பாராட்டுக்கள்
ஆமாம்… நானும்தான் கேட்கிறேன்…..
அவர்களுக்காக
என்ன செய்துவிட்டோம்
பெரிதாய்….
இந்த கவிதை உங்களை அடையாளப்படுத்தும்.
From குழலி on நெருடல்
:-((((((((
///
இதுக்க அர்த்தம் என்ன தலைவரே
!
?
///From சி.கருணாகரசு on நெருடல்
உணர்வுள்ள கவிதை….. பாராட்டுக்கள்
///
கருணாகரசு அண்ணா
எதற்காக பாராட்டு
என்ன செய்துவிட்டேன்
பெரிதாய்
கவிமாலையில் கேட்ட வரிகள்
வார்த்தை இல்லை நண்பரே
ஈனப் பிறவாய்
என்றும் குற்ற உணர்வுடன்
குறுகி
திகழ்
உங்கள் பதிவில் நெருடல் கவிதை வாசித்தேன். எனது மனதில் இருந்த நெருடல்களை கவிதையாக்கியிருக்கிறீர்கள்..
உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள்..
பாலா
கார்ட்டூனிஸ்ட்.
/////
அருமையான கவிதை
இதை facebook ல போடலாமா
–சரவணக் குமார்
///
தம்பி,
நெருடல் படித்தேன்.
நெருடியது , நானும் அதைதானே செய்திருக்கிறேன்.
என்ன செய்தோம் பெரிதாய்?
என் உடம்பிலும அவமானத்தின் வாடை
நாற்றமெடுக்கிறது,
காந்தி