அதியா

அதியா

பெரும் மழைக்கான அறிகுறிகள்
தொட்டிச் செடிகளை பத்திரப்படுத்துகிறேன்

அதியா

தேநீருக்காக காத்திருக்கும் நேரத்தில்
பிரியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
தேநீர் அருந்திய பிறகு
என்ன பேசப்போகிறோம்.

அதியா

ஆலயம் செல்கிறேன்
என்னற்ற முகங்களில் தரிசனம்
இவ்வளவு தான் என் இறையன்பு.

அதியா

பற்றிக்கொண்டிருக்கும் கைவிரல்களை எடுத்துவிடாதே
கொஞ்சம் கருணையாக இருக்கிறது.

#‎பாண்டித்துரை‬

Advertisements

யமுனா வீடு

யமுனா வீடு
………………….

அவளுக்கென
சொல்வதற்கு
நிறைய வார்த்தைகள் இருந்தும்
மௌனமாகிவிடுகிறாள்
வலியது அன்பு

 

யமுனா வீடு
…………………

துயரம் கடந்து
பூரித்து போயிருக்கிறாள்
நிலவின் அன்பைத் தருமபவளின்
கதை சொல்லப்போகும் வீடு
வலிகள் சுமந்த பயணத்தில்
அன்பு ததும்பும் ஒரு வீடு
அவளுக்கானது
அவர்கள் சொல்லக்கூடும்
இனி
அவளுக்கென்ன

 

யமுனா வீடு
…………………

அவளுக்கென்ன
எழுதிவிடுகிறாள்
இந்த பொழுதிற்கான அன்பை
வலிந்த சொற்கள் கொண்டு
வலி
அவளுடையது

X-குறியீடு

http://puthu.thinnai.com/?p=30271
கடந்து சென்ற 024 நபர்கள்
X-ஐ Y-ஆக்கவும் Y-ஐ ட-ஆக்கவும் விருப்பமற்றவர்கள்
வீராச்சாமி ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து
X குறியிட்டு படுத்துக்கிடந்தவன்
இன்னும் சற்று நேரத்தில் எழுந்திருக்ககூடும்
சற்று நேரமென்பது
420 நபர்கள் கடந்து செல்லுதல்
ஒரு கவிதை
சில வாட்ஸப் பகிர்தல்
முகப்புத்தகத்தில் நிலைத்தகவலான
X குறியீடுக்கு
எழும்புதல் புதிதல்ல
மீண்டும் ஒரு ஞாயிறு
வேறு இடம்
X குறியீடாக

உதயா

உதயா

சமாதானப்படுத்தும் வார்த்தைகள் இல்லை
புன்னகைக்கிறாய்.

உதயா
இன்னும் எத்தனை இரவுகள் தான் உறக்கம் கலைப்பாயோ.

உதயா

உன் பிரியத்தின் மொழியை செவிமடுக்கிறேன்
பாதம் வரையில் பரவிவிட்டாய்

உதயா

நிகழ்வன போக்கில் நானும்

உதயா
இங்கு நான் இல்லை

உதயா

நீ மட்டும் தான்
நான்.

அவநி

ஒன்பது
பத்து
i எழுதும் அவநிதாவிற்கு
ஆதிரா பேய் பிடித்துவிடுகிறது
அம்மாவின் கண்ணமிழுத்து
நல்ல பாப்பா செல்ல பாப்பா சொல்லி
உறங்கப்போகிறாள்